அமீர்கான் மகன் படத்துக்கு தடை கோரும் இந்து அமைப்புகள்

நடிகர் அமீர்கானின் மகன் ஜுனாயத் கான் கதாநாயகனாக நடித்துள்ள படம் மகராஜ்.இந்த திரைப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.
அமீர்கான் மகன் படத்துக்கு தடை கோரும் இந்து அமைப்புகள்
Published on

மும்பை:

பாலிவுட் நடிகர் அமீர்கானின் மகன் ஜுனாயத் கான். இவர் கதாநாயகனாக நடித்துள்ள மகராஜ் திரைப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

ஜுனாயத் கான் நடித்துள்ள மகராஜ் திரைப்படம் இந்து மதத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்து மத குருக்களை அசிங்கப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டு இருப்பதாகக் கூறி வடமாநிலங்களில் இந்து அமைப்பினர் அந்தப் படத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மகராஜ் திரைப்படம் இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக உருவாகியுள்ளதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்தப் படத்துக்கு தடை கோரி வருகின்றனர்.

இதையடுத்து, #BoycottNetflix, #BanMaharaj என்ற ஹேஷ்டேகுகள் டிரெண்டாகி வருகின்றன.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com