என் மலர்

  நீங்கள் தேடியது "hirthik roshan"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்கில் சைப் அலி கான், ஹிருத்திக் ரோஷன் நடித்து வருகிறார்கள்.
  • சமீபத்தில் அமீர்கான் நடித்திருந்த லால் சிங் சத்தா படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று எதிர்ப்புகள் கிளம்பியது.

  அமீர்கான் நடித்து திரைக்கு வந்துள்ள லால் சிங் சத்தா படத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற ஹேஷ்டேக் வலைத்தளத்தில் கடந்த சில நாட்களாக டிரெண்டிங் ஆனது. சகிப்பு தன்மை குறைந்து வருவதால் குழந்தைகள் பாதுகாப்பை கருதி நாட்டை விட்டு வெளியேறி விடலாம் என்று எனது மனைவி சொன்னார் என்று அமீர்கான் சில வருடங்களுக்கு முன்பு பேசிய வீடியோக்களை தற்போது வலைத்தளத்தில் பகிர்ந்து அவரது படத்தை புறக்கணிக்கும்படி வற்புறுத்தினர்.

   

  விக்ரம் வேதா

  விக்ரம் வேதா

  இந்நிலையில் பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் மும்பையில் லால்சிங் சத்தா படத்தை பார்த்து விட்டு படம் சிறப்பாக உள்ளது என்றும் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இதையடுத்து ஹிருத்தி ரோஷன் நடித்து திரைக்கு வர உள்ள விக்ரம் வேதா படத்தை புறக்கணிக்கும்படி இணையத்தில் ஹேஷ்டேக் டிரண்டிங் ஆகி உள்ளது.

   

  விக்ரம் வேதா

  விக்ரம் வேதா

  அமீர்கான் படத்தை ஆதரித்த விளைவை சந்திக்க தயாராகுங்கள் என்று ஹிருத்திக் ரோஷனை கண்டித்து பலர் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். இது திரைப்பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழில் மாதவன், விஜய்சேதுபதி நடிப்பில் வந்த விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்காக ஹிருத்திக் ரோஷனின் விக்ரம் வேதா தயாராகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர்.
  • இவர் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் ஷங்கர். சமீபத்தில், 'இந்தியன்-2' படம் இயக்குவதாக ஷங்கர் அறிவித்து, படப்பிடிப்பு பணிகளும் நடந்தன. ஆனால் பல்வேறு சிக்கல்கள் காரணமாக அந்த படத்தின் படப்பிடிப்பு நிலுவையில் இருக்கிறது. இதற்கிடையில் தெலுங்கில் ராம் சரணுடன் ஒரு படம், இந்தியில் ரன்வீர் சிங்குடன் ஒரு படம் என ஷங்கர் 'பிஸி'யாக இருக்கிறார். இந்த படங்களை தொடர்ந்து 'இந்தியன்-2' படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

  ஷங்கருக்கு, நீருக்கடியில் அறிவியல் கலந்த ஒரு படத்தை இயக்குவது என்பது கனவு. இதற்கான முன்னோட்டமாக தான் 'எந்திரன்' படத்தை அவர் இயக்கினார். தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு தனது கனவு படத்தை இயக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.அதன்படி ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் இந்தி சினிமா உலகின் முன்னணி நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் தெலுங்கு பட உலகின் முன்னணி கதாநாயகன் ராம்சரண் ஆகியோர் இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

  ராம்சரண் - ஹிருத்திக் ரோஷன்

  ராம்சரண் - ஹிருத்திக் ரோஷன்

  இந்த படத்தை அடுத்த ஆண்டு எடுத்து முடித்து விட ஷங்கர் திட்டமிட்டுள்ளார். இதற்கான முதற்கட்ட பணிகள் இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. நீருக்கடியில் எடுக்கப்படும் இந்த படம் சர்வதேச அளவில் இந்திய சினிமாவுக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தரும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  ×