என் மலர்tooltip icon

    இந்தியா

    முன்னேறும் பீகாரை பீடியுடன் ஒப்பிடுவதா?- காங்கிரஸ், ஆர்ஜேடி-க்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்
    X

    முன்னேறும் பீகாரை பீடியுடன் ஒப்பிடுவதா?- காங்கிரஸ், ஆர்ஜேடி-க்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்

    • பீடிக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க பரிந்துரை எனத் தகவல்.
    • பீடி- பீகார் ஆகியவை பி-யில்தான் தொடங்குகிறது என காங்கிரஸ் பதிவு.

    பீகார் மாநிலம் மெல்ல மெல்ல வளர்ச்சியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும்போது காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் மாநிலத்தை அவமதிப்பதில் பிசியாக இருப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

    காங்கிரஸ் கட்சி சமீபத்தில் bidi-Bihar எனக் கருத்து தெரிவித்திருந்தது. இதற்கு பிரதமர் மோடி பதில் அளிக்கும் வகையில் கூறியிருப்பதாவது:-

    பீகாரில் ரெயில் என்ஜின்கள் தயாரிக்கப்பட்டு, ஆப்பிரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், இது காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. பீகார் மாநிலம் வளர்ச்சி அடையும் போதெல்லாம், இந்த கட்சிகள் மாநிலத்தை அவமதிப்பதில் பிசியாகிவிடுகின்றன. காங்கிரஸ், ஆர்ஜேடி-யுடன் கூட்டு சேர்ந்து, சமூக ஊடகங்களில் பீகாரை கேலி செய்வதிலும், மாநிலத்தை பீடியுடன் ஒப்பிடுவதிலும் மும்முரமாக உள்ளன. இவர்கள் பீகாரை வெறுக்கிறார்கள்.

    இவ்வாறு பிரதமர் மோடி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

    பாஜக தலைமையிலான மத்திய அரசு சமீபத்தில் ஜிஎஸ்டி வரியில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்தது. இந்த நிலையில், கேரள மாநில காங்கிரஸ் பீடியும், பீகாரும் பி-யில் (Bidi-Bihar) தொடங்குகிறது. இதை ஒரு பாவகமாக கருத முடியாது" எனக் கூறியிருந்தது. பீடி மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க முடிவு செய்துள்ளதை இவ்வாறு காங்கிரஸ் தெரிவித்திருந்தது. இது கடும் விமர்சனத்தை எழுப்பிய நிலையில், போஸ்ட் நீக்கப்பட்டது.

    Next Story
    ×