என் மலர்
இந்தியா

சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு எழுத மாணவர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடு விதிப்பு
- 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்திருந்தது.
- 2026-27 கல்வியாண்டிலிருந்து 9-ம் வகுப்பில் புத்தகத்தை பார்த்து தேர்வெழுதும் முறைக்கு ஒப்புதல்.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
மாணவர்கள் 75 சதவீதம் வருகைப்பதிவு வைத்திருந்தால் மட்டுமே பொதுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர் என்று புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிபிஎஸ்இ 10ம் வகுப்பில் மாணவர்கள் 5 பாடப்பிரிவுடன் கூடுதலாக 2 பிரிவுகளில் பாடங்களை கற்று தேர்வில் பங்கேற்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதேபோல், 12ம் வகுப்பில் கூடுதலாக ஒரு பாடப்பிரிவை இணைத்து படிக்க வேண்டும் எனபுதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026-27 கல்வியாண்டிலிருந்து 9-ம் வகுப்பில் புத்தகத்தை பார்த்து தேர்வெழுதும் முறைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல் இது நடைமுறைக்கு வரும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.






