என் மலர்
தலைப்புச்செய்திகள்
- மாணவர்கள் கோஷ்டியாக பிரந்து மோதிக் கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது.
- பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீசார் நடவடிக்கை.
நெல்லை அரசு பள்ளியில் மாணவர்களிடையே கோஷ்டி மோதம் ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இருதரப்பையும் சேர்ந்த 13 மாணவர்களை கூர்நோக்கு இல்லத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
அரசு பள்ளியில் 2 நாட்களுக்கு முன்பு மாணவர்கள் கோஷ்டியாக பிரந்து மோதிக் கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக, பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், போலீசாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, இருதரப்பையும் சேர்ந்த 13 மாணவர்களை கூர்நோக்கு இல்லத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
- 29 மாநிலங்களில் 16 மாநிலங்களில் மட்டுமே பெண்களுக்கு அதிகாரமளித்தல் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளன.
- வரும் நாட்களில், Made in India பொருட்களை தயாரிப்பதில் பெண்களின் பங்கேற்பு அதிகரிக்க வேண்டும்.
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் பெண்கள் அதிகாரமளித்தல் குழுக்களின் இரண்டு நாள் மாநாடு ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற நிறைவு விழாவில் பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது ஓம் பிர்லா பேசியதாவது:-
நான் விரைவில் மாநில சட்டசபை சபாநாயர்களுக்கு பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் குழந்தைகள் மேம்பாடு கமிட்டியை அமைக்க வலியுறுத்தி கடிதம் எழுதுவேன். 29 மாநிலங்களில் 16 மாநிலங்களில் மட்டுமே பெண்களுக்கு அதிகாரமளித்தல் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மாநிலங்கள், பெண்கள் பிரச்சினைகள் குறித்த பரிந்துரைகளை அந்தந்த சட்டமன்றங்கள் மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு வழங்க இதுபோன்ற குழுக்களை அமைப்பது அவசியம்.
லக்னோவில் நடைபெறவிருக்கும் அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டில் இந்த பிரச்சினை குறித்து விவாதிப்போம். வரும் நாட்களில், Made in India பொருட்களை தயாரிப்பதில் பெண்களின் பங்கேற்பு அதிகரிக்க வேண்டும். சுய உதவிக்குழுக்கள் மூலம் பொருளாதார அதிகாரமளிப்பதில் பெண்கள் ஏற்கனவே முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்பது ஒரு ஆப்சன் அல்ல. அது அவசியம். இது பெண்களை பயனாளிகளாக மட்டுமல்லாமல், வளர்ச்சி செயல்முறையின் இயக்கிகள், படைப்பாளிகள் மற்றும் தலைவர்களாகவும் நிலைநிறுத்தும் ஒரு தொலைநோக்குப் பார்வையாகும்.
இவ்வாறு ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
- வீரர்களிடம் தனிப்பட்ட முறையில் கேட்டால், அவர்களில் யாரும் ஆசிய கோப்பையில் விளையாட விரும்பவில்லை.
- இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடியது வருத்தமாக இருக்கிறது.
துபாய்:
ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர் 128 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.
போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்குவது வழக்கம். ஆனால் நேற்றைய ஆட்டம் முடிந்ததும், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதை தவிர்த்துவிட்டனர். இது கிரிக்கெட் உலகில் பேசு பொருளாகி உள்ளது.
இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது வருத்தமாக இருக்கிறது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
எனக்கு ஒரு விஷயம் நிச்சயம் தெரியும். வீரர்களிடம் தனிப்பட்ட முறையில் கேட்டால், அவர்களில் யாரும் ஆசிய கோப்பையில் விளையாட விருப்பம் தெரிவித்திருக்க மாண்டார்கள். ஒரு வகையில், பிசிசிஐ அதற்கு ஒப்புக்கொண்டதால் அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
இந்தியா -பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடியது வருத்தமாக இருக்கிறது. ஆனால் சூர்யகுமார் யாதவ் மற்றும் அவரது வீரர்களிடம் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது குறித்து அவர்களின் தனிப்பட்ட கருத்துகள் என்ன என்று கேட்டால், அவர்கள் வேண்டாம் என்று சொல்லியிருப்பார்கள் என்பதையும் நான் உண்மையாகச் சொல்ல முடியும். அவர்களில் யாரும் விளையாட விரும்பவில்லை.
என ரெய்னா கூறினார்.
- கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் ஏற்றுமதி 32.89 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
- கடந்த ஆகஸ்ட் மாதத்தின் ஏற்றுமதி 35.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் ஏற்றுமதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும், கடந்த மாதம் 6.7 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேவேளையில் இறக்குமதி 10 சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் ஏற்றுமதி 32.89 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில், இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் (கடந்த மாதம்) 35.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு 68.53 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இறக்குமதி, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 61.59 அமெரிக்க டாலராக குறைந்துள்ளது.
இருந்தபோதிலும், ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகம் என்பதால், கடந்த ஆண்டு 26.49 பில்லியன் டாலராக இருந்த பற்றாக்குறை, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 35.64 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
2025 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை இந்தியாவின் ஏற்றுமதி 184.13 பில்லியன் டாலராகும். அதேவேளையில் இறக்குமதி 306.52 பில்லியன் டாலராகும்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு மோகன்லால் நடித்த ஹிருதயபூர்வம் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து மோகன்லால் அடுத்ததாக Vrusshabha என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இது ஒரு பான் இந்தியன் காவியமாக உருவாகி வருகிறது. மோகன்லால் உடன் ஷனயா கபூர், ஜாரா கான், ரோஷன் மேகா, ஸ்ரீகாந்த் மேகா, ரகினி துவேவிடி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை நந்தா கிஷோர் இயக்கியுள்ளார். மேலும் எக்தா ஆர் கபூர் (Balaji Telefilms), Connekkt Media, AVS Studios ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. படத்தின் இசையை Sam CS மேற்கொண்டுள்ளார்.
ஒளிப்பதிவு: Antony Samson
எடிட்டிங்: KM பிரகாஷ்
படத்தின் டப்பிங் பணிகளை மோகன்லால் முடித்துள்ளார். படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு நாளை வெளியிட இருக்கிறது.
- கூட்டணிக்குள் ஏற்பட்ட குழப்பம் டெல்லி பாஜக தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
- டெல்லி மேலிடத்துக்கு தங்கள் கருத்துக்களை எடுத்து சொல்லி இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் வருகிற சட்டசபை தேர்தலை வெற்றிகரமாக சந்திக்கவும் தி.மு.க.வுக்கு எதிராக வலுவான அணியை உருவாக்கவும் அ.தி.மு.க.வுடன் அமித்ஷா கூட்டணியை உருவாக்கினார்.
கூட்டணியை பலப்படுத்த அ.தி.மு.க.-பாஜக கூட்டணியை உருவாக்கிய அமித்ஷா இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைத்து பலப்படுத்தும்படி கேட்டுக் கொண்டார்.
இதற்கான முயற்சிகள் ஒரு பக்கம் நடந்தாலும் இன்னொரு பக்கம் இந்த கூட்டணி பலவீனமாகும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றி ருந்த டிடிவி தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் வெளியேறினார்கள்.
இதற்கிடையில் அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற டி.டி.வி.
தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை ஒருங்கிணைக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார்.
அதற்காக கெடுவும் விதித்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்க மாட்டோம் என்று டி.டி.வி.தினகரனும் அறிவித்தார்.
இந்தநிலையில் கட்சி தலைமைக்கு கெடுவிதித்த செங்கோட்டையனின் கட்சி பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார். கூட்டணிக்குள் ஏற்பட்ட இந்த குழப்பம் டெல்லி பா.ஜனதா தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
ஏற்கனவே கடந்த தேர்தலில் அ.தி.மு.க. தோற்றதற்கு டி.டி.வி.தினகரன் கட்சி பிரித்த வாக்குகள் முக்கிய காரணமாக அமைந்தது. அதேபோல் தென்மாவட்டங்களில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு இல்லாததாலும் கணிசமான வாக்குகளை அ.தி.மு.க. இழந்தது.
நாளை டெல்லி பயணம் எனவே சசிகலாவை இணைக்காவிட்டாலும் பரவாயில்லை. டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் இணைவதே பலமாகும் என்று தமிழக பா.ஜனதா நிர்வாகிகளும் டெல்லி மேலிடத்துக்கு தங்கள் கருத்துக்களை எடுத்து சொல்லி இருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் நாளை (செவ்வாய்க்கிழமை) டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி மத்திய மந்திரி அமித்ஷாவை சந்திக்கிறார். அப்போது கூட்டணியில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
எடப்பாடி ஏற்பாரா?
இணைப்பு முயற்சியை மேற்கொண்டாலும் டி.டி.வி.தினகரன் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்க மறுப்பது அந்த முயற் சிக்கு கூடுதல் முட்டுக்கட்டை போட்டுள்ளது.
எனவே ஒருங்கிணைக்கும் முயற்சியில் சில ஆலோ சனைகளை அமித்ஷா வழங்குவார் என்று கூறப் படுகிறது. ஆனால் அதை எடப்பாடி பழனிசாமி ஏற்பது சந்தேகமே என்கி றார்கள் கட்சியினர்.
துணை ஜனாதிபதியுடன் சந்திப்பு நாளை காலை 11 மணிக்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். அப்போது அவர் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறுகிறார்.
அதன் பிறகு டெல்லியில் தங்கி இருக்கும் எடப்பாடி பழனிசாமி மாலையில் சென்னை திரும்பும் வகை யில் பயண திட்டம் வகுக் கப்பட்டுள்ளது. டெல்லியில் இருக்கும் இந்த நேரத்தில் கூட்டணி தலைவர் என்ற முறையில் அமித்ஷாவை அவர் சந்திக்கிறார்.
கூட்டணியை உடைக்க முயற்சி.
இது தொடர்பாக அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் சிலரிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-
துணை ஜனாதிபதி தேர்த லில் எங்களிடம் 5 ஓட்டுகள் இருந்தன. அதற்காக ஆதரவு திரட்ட சி.பி.ராதாகிருஷ் ணன் சென்னை வர இயல வில்லை. எனவே தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மரி யாதை நிமித்தமாக அவரை சந்தித்து வாழ்த்து தெரி விப்பதே இந்த பயணத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.
ஆனால் டெல்லியில் இருக்கும் போது கூட்டணி தலைவர் என்ற ரீதியில் அமித்ஷாவையும் சந்தித்து பேச வாய்ப்பு இருக்கிறது. இந்த கூட்டணியை உடைக்க பல்வேறு வழிகளில் முயல்கி றார்கள். அதில் ஒரு முயற்சி தான் செங்கோட்டையன் விவகாரமும்.
டி.டி.வி.தினகரன் எடப் பாடி பழனிசாமி தலை மையை ஏற்க போவதில்லை என்று வெளிப்படையாகவே அறிவித்து விட்டார். அப்படி இருக்கும்போது அமித்ஷா எந்த அடிப்படையில் எடப்பாடி பழனிசாமியிடம் இணைப்பு பற்றி பேச முடியும்?.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- பீகார் SIR செயல்முறையின்போது 65 வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டதாக புகார்.
- ஆதார் கார்டை 12ஆவது ஆவணமாக எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவு.
பீகார் மாநிலத்தில் தேர்தல் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதில் முறைகேடு நடந்ததாகவும், 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இன்றைய விசாரணையின்போது உச்சநீதிமன்றம், பீகார் SIR நடைமுறையில் ஏதாவது முறைகேடு கண்டறியப்பட்டால், உடனடியாக பீகார் SIR நடைமுறை முழுமையாக ரத்து செய்யப்படும். அக்டோபர் 7ஆம் தேதி இறுதி விவாதம் நடைபெறும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அத்துடன் தற்காலிகமாக இடைக்கால நிவாரணம் ஏதும் அளிக்காமல், இறுதி தீர்ப்பு ஒட்டுமொத்த இந்தியாவுக்குமானதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 8ஆம் தேதி ஆதார்டு கார்டையும் செல்லுபடியாகும் 12ஆவது ஆவணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
Learn&Teach புரொடக்ஷன் S.சாய் தேவானந்த், S.சாய் வெங்கடேஸ்வரன், நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில், தினேஷ், கலையரசன்,ஷபீர்,பால சரவணன், முத்துக்குமார், ரித்விகா,வின்சு, ஆகியோர்களது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "தண்டகாரண்யம்"
இம்மாதம் 19-ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின், இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள சென்னை கிரீன் பார்க் நட்சத்திர விடுதியில் கோலாகலமாக நடைபெற்றது.
நடிகர் கலையரசன் பேசியது,
இயக்குனர் அதியன் ஒரு குழந்தை. தினேஷ்,வின்சு மற்றும் சக நடிகர்கள் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார்கள். ரித்விக இந்த படத்தில் எனக்கு அண்ணியாக நடித்துள்ளார்.
நீலம் புரோடக்ஷன் படம் பண்ணும் பொழுது நிறைய விஷயங்கள் இருக்கும்.
தண்டகாரண்யம் என் கெரியரில் முக்கிய படமாக இருக்கும். எல்லோருக்கும் நன்றி.
நடிகர் தினேஷ் பேசியதாவது,
அதியன் ஆதிரை மிகவும் உணர்ச்சிவசப்பட கூடியுவர். இருப்பினும் அவரது படம் வியாபார ரீதியாக வெற்றி பெற வேண்டும் என கவனம் செலுத்த கூடியவர். படத்தில் இசையமைப்பாளர் ஜெஸ்டின் வந்த பிறகு மிகவும் பிரமாதம் செய்து விட்டார்.எனக்கு கடைசி மூன்று படங்கள் வாழ்க்கையில் உள்ள அனுபவம் கொண்டு நடித்தேன். உதாரணமாக ஒருவர் மூச்சை எப்படி இழுத்து விடுவார் என யோசித்து நடித்தேன். அதனை மக்கள் ரசித்தனர். ரப்பர் பந்து படத்திற்கு, மக்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி.
இயக்குனர் பா.ரஞ்சித் பேசியதாவது,
கடந்த 13 ஆண்டுகளாக குழுவுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன்.
இந்தப் படத்தில் என்னுடன் சேர்ந்த தயாரித்த தயாரிப்பாளர் சாய் வெங்கடேஸ்வரன் திரைப்படத்திலும் என்னுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். நாங்கள் இங்கு பணம் சம்பாதிக்கும் தொழில் நோக்கத்துடன் வரவில்லை.
சமூகத்தைச் சரி செய்ய வேண்டும் என்கின்ற முனைப்போடு வந்திருக்கிறோம்.
நான் இயக்குனராக வரும்போது வெறும் 3 ஆண்டுகள் மட்டுமே இருப்பேன் என நினைத்தேன். ஏனெனில் நான் பேசக்கூடிய கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நினைத்தேன். இருப்பினும் மக்கள் எங்களை ஏற்றுக் கொண்டனர்.
முன்பெல்லாம் இடதுசாரிகள் அதிகம் இருப்பார்கள் இருப்பினும் தற்பொழுது இருக்கக்கூடிய சென்சார் போர்டில் வலதுசாரிகள் அதிக அளவில் இருக்கிறார்கள்.
நேபாளத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய கலவரம் கூட ராப் இசை கலைஞர்களுக்கு மிகப்பெரும் பங்கானது இருக்கிறது.
தொடர்ச்சியாக நீலம் ப்ரொடக்ஷனில் வேட்டுவம், பைசன் போன்ற படங்கள் வெளிவர இருக்கிறது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று திரைப்படங்கள் வெளிவர இருக்கிறது.
- விஜய் யாரை மனதில் வைத்து பேசுகிறார் என்பது தெரியவில்லை.
- எங்களுடைய கட்சி வளர்ச்சியில் தான் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.
பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சிந்தாமணி அருகே உள்ள அண்ணா சிலைக்கு தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க மற்றும் தே.மு.தி.க. 3 கட்சிகளுக்கு தான் பூத் கமிட்டி உள்ளது. உச்ச நட்சத்திரங்களுக்கு மக்கள் கூட்டம் கூடுவது இயல்புதான். இதை நாங்கள் 1990-களில் இருந்து பார்த்து வருகிறோம். விஜயகாந்துக்கும் அதிக அளவிற்கு கூட்டம் கூடியது.
விஜய்க்கும் மக்கள் கூட்டம் கூடியது. விஜய் அந்த கூட்டத்தை முறையாக ஒழுங்குப்படுத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். தி.மு.க மற்றும் பா.ஜ.க.வை விஜய் எதிர்த்து வருகிறார். அவரை அக்கட்சியினர் விமர்சனம் செய்து தான் பேசுவார்கள். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து குறுகிய காலத்திலேயே அதிக வாக்கு சதவீதம் பெற்றவர். அவருடன் வேறு யாரையும் ஒப்பிடவே கூடாது. அவ்வாறு ஒப்பிடுவது தவறான கண்ணோட்டம்.
விஜய் யாரை மனதில் வைத்து பேசுகிறார் என்பது தெரியவில்லை. விஜய் குறித்த அனைத்து கேள்விகளுக்கும் விஜய் தான் பதில் அளிக்க வேண்டும். விஜய் குறித்து அவரிடம் கேட்காமல் மற்றவர்களிடம் கேள்வி கேட்பது தவறு. இனிமேல் கூட்டணி குறித்தும், விஜய் குறித்தும் என்னிடம் எந்த கேள்வியும் கேட்க வேண்டாம் என ஏற்கனவே கூறியுள்ளேன்.
எல்லா கட்சியும் எங்களுடைய நண்பர்கள் தான் கூட்டணி குறித்து முடிவெடுக்க இன்னும் எங்களுக்கு நேரம் வேண்டும். விஜயகாந்த் இல்லாமல் நாங்கள் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் எங்களுடைய கட்சி வளர்ச்சியில் தான் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வருகின்ற தேர்தலில் நிச்சயம் முத்திரை பதிக்கும்.
- வருகின்ற மே மாதம் இதற்கான அர்த்தம் உங்களுக்கு புரியும்.
தஞ்சையில் இன்று முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
75 ஆண்டுகால மற்றும் 50 ஆண்டு கால கட்சிக்கு இணையாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உருவாகிவிட்டது. வருகின்ற தேர்தலில் நிச்சயம் முத்திரை பதிக்கும்.
நாங்கள் இடம்பெறும் கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். இதை நான் ஆணவத்தோடு சொல்லவில்லை. உறுதியாக கூறுகிறேன். வருகின்ற மே மாதம் இதற்கான அர்த்தம் உங்களுக்கு புரியும்.
எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கும் பட்சத்தில் அதை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஏற்றுக் கொள்ள வாய்ப்பே இல்லை.
அ.தி.மு.க ஒன்றிணைப்புக்கான 10 நாட்கள் கெடு முடிந்தது குறித்து அதற்கான விளக்கத்தை செங்கோட்டையன் அளிப்பார்.
எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்வது அது அவரது விஷயம் அவரிடம் தான் கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக விலங்குகள் கொண்டு வரப்பட்டதாக என விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் குழு அமைத்தது.
- சிறப்பு விசாரணைக் குழு உச்சநீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள ரிலையன்ஸ் அறக்கட்டளையின் வந்தாரா விலங்கு மீட்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு முயற்சி மையத்திற்கு முறைகேடாக இந்தியா மற்றும் வெளிநாட்டு விலங்குகள் கொண்டு வரப்பட்டதாக புகார் எழுந்தது. குறிப்பாக யானைகள் கொண்டு வரப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் உச்சநீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழுவை (SIT) அமைத்தது.
இந்த குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையில் விதிகளை பின்பற்றியே வெளிநாடுகளில் இருந்து விலங்குகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கின் விசாரணையில், "வந்தாரா சட்டங்களை கண்டிப்பாக கடைபிடிக்கிறது. அதைக் கெடுக்காதீர்கள், முழு அறிக்கையை விரிவாகப் பார்க்கலாம்" என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- அஜித்குமாரின் குடும்பத்தினர், நண்பர்கள், கோவில் ஊழியர்கள், மருத்துவர்கள் என பல தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
- பிழைகளை சரி செய்து மீண்டும் அறிக்கையை தாக்கல் செய்ய சி.பி.ஐ. நடவடிக்கையை எடுத்து வருகிறது.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் என்பவரை நகை திருட்டு புகாா தொடர்பாக சிறப்பு படை பிரிவு போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது போலீசார் தாக்கியதில் அஜித்குமார் இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் 2 மாதத்திற்கும் மேலாக இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தினர். அஜித்குமாரின் குடும்பத்தினர், நண்பர்கள், கோவில் ஊழியர்கள், மருத்துவர்கள் என பல தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி விசாரணை அறிக்கையை சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரை மாவட்ட கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அறிக்கையில் பிழைகள் இருப்பதாக கூறி மாவட்ட நீதிமன்றம் அதனை திருப்பி அனுப்பியது. பிழைகளை சரி செய்து மீண்டும் அறிக்கையை தாக்கல் செய்ய சி.பி.ஐ. நடவடிக்கையை எடுத்து வருகிறது.
இந்தநிலையில் அஜித்குமார் கொலை வழக்கில் நிகிதா கொடுத்த நகை திருட்டு புகாரையும் சி.பி.ஐ. விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன்படி சி.பி.ஐ. அதிகாரிகள் நிகிதா புகார் தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக அருண்குமார், கோவில் ஊழியர்கள், அஜித்குமார் தாக்குதல் தொடர்பாக வீடியோவை எடுத்த சத்தீஸ்வரன், நிகிதாவிடம் இருந்து கார் சாவி வாங்கிக்கொடுத்த கண்ணன், அஜித் நண்பர் வினோத்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது. இனிவரும் நாட்களில் இவர்களுக்கு முறையான சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்படும் என சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.






