என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

டெல்லியில் நாளை அமித் ஷாவுடன் சந்திப்பு- எடப்பாடி பழனிசாமி சமரசம் ஆவாரா?- அ.தி.மு.க.வில் பரபரப்பு
- கூட்டணிக்குள் ஏற்பட்ட குழப்பம் டெல்லி பாஜக தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
- டெல்லி மேலிடத்துக்கு தங்கள் கருத்துக்களை எடுத்து சொல்லி இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் வருகிற சட்டசபை தேர்தலை வெற்றிகரமாக சந்திக்கவும் தி.மு.க.வுக்கு எதிராக வலுவான அணியை உருவாக்கவும் அ.தி.மு.க.வுடன் அமித்ஷா கூட்டணியை உருவாக்கினார்.
கூட்டணியை பலப்படுத்த அ.தி.மு.க.-பாஜக கூட்டணியை உருவாக்கிய அமித்ஷா இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைத்து பலப்படுத்தும்படி கேட்டுக் கொண்டார்.
இதற்கான முயற்சிகள் ஒரு பக்கம் நடந்தாலும் இன்னொரு பக்கம் இந்த கூட்டணி பலவீனமாகும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றி ருந்த டிடிவி தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் வெளியேறினார்கள்.
இதற்கிடையில் அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற டி.டி.வி.
தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை ஒருங்கிணைக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார்.
அதற்காக கெடுவும் விதித்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்க மாட்டோம் என்று டி.டி.வி.தினகரனும் அறிவித்தார்.
இந்தநிலையில் கட்சி தலைமைக்கு கெடுவிதித்த செங்கோட்டையனின் கட்சி பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார். கூட்டணிக்குள் ஏற்பட்ட இந்த குழப்பம் டெல்லி பா.ஜனதா தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
ஏற்கனவே கடந்த தேர்தலில் அ.தி.மு.க. தோற்றதற்கு டி.டி.வி.தினகரன் கட்சி பிரித்த வாக்குகள் முக்கிய காரணமாக அமைந்தது. அதேபோல் தென்மாவட்டங்களில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு இல்லாததாலும் கணிசமான வாக்குகளை அ.தி.மு.க. இழந்தது.
நாளை டெல்லி பயணம் எனவே சசிகலாவை இணைக்காவிட்டாலும் பரவாயில்லை. டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் இணைவதே பலமாகும் என்று தமிழக பா.ஜனதா நிர்வாகிகளும் டெல்லி மேலிடத்துக்கு தங்கள் கருத்துக்களை எடுத்து சொல்லி இருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் நாளை (செவ்வாய்க்கிழமை) டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி மத்திய மந்திரி அமித்ஷாவை சந்திக்கிறார். அப்போது கூட்டணியில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
எடப்பாடி ஏற்பாரா?
இணைப்பு முயற்சியை மேற்கொண்டாலும் டி.டி.வி.தினகரன் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்க மறுப்பது அந்த முயற் சிக்கு கூடுதல் முட்டுக்கட்டை போட்டுள்ளது.
எனவே ஒருங்கிணைக்கும் முயற்சியில் சில ஆலோ சனைகளை அமித்ஷா வழங்குவார் என்று கூறப் படுகிறது. ஆனால் அதை எடப்பாடி பழனிசாமி ஏற்பது சந்தேகமே என்கி றார்கள் கட்சியினர்.
துணை ஜனாதிபதியுடன் சந்திப்பு நாளை காலை 11 மணிக்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். அப்போது அவர் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறுகிறார்.
அதன் பிறகு டெல்லியில் தங்கி இருக்கும் எடப்பாடி பழனிசாமி மாலையில் சென்னை திரும்பும் வகை யில் பயண திட்டம் வகுக் கப்பட்டுள்ளது. டெல்லியில் இருக்கும் இந்த நேரத்தில் கூட்டணி தலைவர் என்ற முறையில் அமித்ஷாவை அவர் சந்திக்கிறார்.
கூட்டணியை உடைக்க முயற்சி.
இது தொடர்பாக அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் சிலரிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-
துணை ஜனாதிபதி தேர்த லில் எங்களிடம் 5 ஓட்டுகள் இருந்தன. அதற்காக ஆதரவு திரட்ட சி.பி.ராதாகிருஷ் ணன் சென்னை வர இயல வில்லை. எனவே தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மரி யாதை நிமித்தமாக அவரை சந்தித்து வாழ்த்து தெரி விப்பதே இந்த பயணத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.
ஆனால் டெல்லியில் இருக்கும் போது கூட்டணி தலைவர் என்ற ரீதியில் அமித்ஷாவையும் சந்தித்து பேச வாய்ப்பு இருக்கிறது. இந்த கூட்டணியை உடைக்க பல்வேறு வழிகளில் முயல்கி றார்கள். அதில் ஒரு முயற்சி தான் செங்கோட்டையன் விவகாரமும்.
டி.டி.வி.தினகரன் எடப் பாடி பழனிசாமி தலை மையை ஏற்க போவதில்லை என்று வெளிப்படையாகவே அறிவித்து விட்டார். அப்படி இருக்கும்போது அமித்ஷா எந்த அடிப்படையில் எடப்பாடி பழனிசாமியிடம் இணைப்பு பற்றி பேச முடியும்?.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.






