என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    வீரர்களுக்கு விருப்பமில்லை.. பாகிஸ்தானுடன் கட்டாயத்தால் தான் விளையாடினார்கள்.. சுரேஷ் ரெய்னா
    X

    வீரர்களுக்கு விருப்பமில்லை.. பாகிஸ்தானுடன் கட்டாயத்தால் தான் விளையாடினார்கள்.. சுரேஷ் ரெய்னா

    • வீரர்களிடம் தனிப்பட்ட முறையில் கேட்டால், அவர்களில் யாரும் ஆசிய கோப்பையில் விளையாட விரும்பவில்லை.
    • இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடியது வருத்தமாக இருக்கிறது.

    துபாய்:

    ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    பின்னர் 128 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.

    போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்குவது வழக்கம். ஆனால் நேற்றைய ஆட்டம் முடிந்ததும், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதை தவிர்த்துவிட்டனர். இது கிரிக்கெட் உலகில் பேசு பொருளாகி உள்ளது.

    இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது வருத்தமாக இருக்கிறது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

    எனக்கு ஒரு விஷயம் நிச்சயம் தெரியும். வீரர்களிடம் தனிப்பட்ட முறையில் கேட்டால், அவர்களில் யாரும் ஆசிய கோப்பையில் விளையாட விருப்பம் தெரிவித்திருக்க மாண்டார்கள். ஒரு வகையில், பிசிசிஐ அதற்கு ஒப்புக்கொண்டதால் அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

    இந்தியா -பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடியது வருத்தமாக இருக்கிறது. ஆனால் சூர்யகுமார் யாதவ் மற்றும் அவரது வீரர்களிடம் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது குறித்து அவர்களின் தனிப்பட்ட கருத்துகள் என்ன என்று கேட்டால், அவர்கள் வேண்டாம் என்று சொல்லியிருப்பார்கள் என்பதையும் நான் உண்மையாகச் சொல்ல முடியும். அவர்களில் யாரும் விளையாட விரும்பவில்லை.

    என ரெய்னா கூறினார்.

    Next Story
    ×