என் மலர்
இந்தியா
- முதுகெலும்பு கொண்ட வெளியுறவுக் கொள்கையை மோடி உருவாக்கினார்.
- மோடியின் செயல்திறனை அருகிலிருந்து பார்க்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது.
தேசிய தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், "கடந்த 24 ஆண்டுகளில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காத ஒருவரை மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். அது பிரதமர் நரேந்திர மோடிதான். இத்தகைய அர்ப்பணிப்பு தற்செயலாக வருவதில்லை. பொது சேவைக்கான அவரது அர்ப்பணிப்பால் மட்டுமே இது சாத்தியமானது" என்று தெரிவித்தார்.
மோடி, உள்ளூர் மட்டத்தில் ஒரு கட்சி ஊழியராக தனது வாழ்க்கையைத் தொடங்கி பாஜகவின் தேசியத் தலைவராக உயர்ந்தார், பின்னர் குஜராத்தின் முதல்வரானார், பின்னர் மிகவும் பிரபலமான பிரதமரானார். மோடியின் செயல்திறனை அருகிலிருந்து பார்க்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது என்று அமித் ஷா தெரிவித்தார்.
தொடர்ந்து, முதுகெலும்பு கொண்ட வெளியுறவுக் கொள்கையை மோடி உருவாக்கியதாக அமித் ஷா நெகிழ்ச்சி தெரிவித்தார்.
- பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் (EAC) உறுப்பினர் சஞ்சீவ் சன்யால் விமர்சித்துள்ளார்.
- நீதிமன்றங்களில் பின்பற்றப்படும் 'மை லார்ட்' போன்ற பழமையான சம்பிரதாயங்கள் மாற்றங்கான வேண்டும்.
இந்தியாவின் நீதித்துறை அமைப்பே, நாட்டை ஒரு வளர்ந்த பொருளாதாரமாக மாற்றுவதற்கான மிகப்பெரிய தடையாக உள்ளது என பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் (EAC) உறுப்பினர் சஞ்சீவ் சன்யால் விமர்சித்துள்ளார்.
சனிக்கிழமை நடைபெற்ற 'நியாய நிர்மாண் 2025' மாநாட்டில் பேசிய சன்யால், "வளர்ந்த நாடாக மாறுவதற்கு இந்தியாவுக்கு இன்னும் 20-25 ஆண்டுகள் மட்டுமே அவகாசம் உள்ளது.
இந்த நேரத்தில் துரிதமான வளர்ச்சி தேவை. ஆனால், நீதி அமைப்பில் உள்ள மெதுவான நடைமுறைகள், அமலாக்கத்தில் உள்ள பலவீனங்கள் மற்றும் வழக்குகளில் தாமதமான தீர்ப்புகள் ஆகியவை பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் சவாலாக உள்ளன.
நீதிமன்றங்களில் பின்பற்றப்படும் 'மை லார்ட்' போன்ற பழமையான சம்பிரதாயங்கள், நீண்ட விடுமுறைகள் மற்றும் நீதித்துறையில் உள்ள படிநிலைகள் ஆகியவை மாற்றங்கான வேண்டும்.
நீதித்துறை என்பது ஒரு பொது சேவை. அதை மற்ற அரசு சேவைகளைப் போலவே நவீனமயமாக்க வேண்டும்
நீதித்துறை அமைப்பு முழுமையாக சீர்திருத்தப்படாவிட்டால், விக்சித் பாரத் (வளர்ந்த இந்தியா) என்ற தொலைநோக்கு இலக்கை நாம் அடைய முடியாது" என்று தெரிவித்தார்.
- ஜே.என்.யூ-வை "பாலியல் ஒழுங்கீனத்தின் கூடாரம்" என்று சித்தரிக்கும் ஆவணத்தைத் தயாரித்ததாகக் கூறப்பட்டது.
- பெரும்பாலான நாடுகளில் அவதூறு ஒரு சிவில் வழக்காக மட்டுமே உள்ளது.
நாட்டில் கிரிமினல் அவதூறு சட்டத்தை நீக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2016-ல் 'தி வயர்' செய்தி நிறுவனம் வெளியிட்ட ஒரு கட்டுரை தொடர்பாக ஜே.என்.யூ பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் அமிதா சிங் அந்த பத்திரிகை மற்றும் அதன் ஆசிரியர்கள் மீது 2017 இல் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
அந்த கட்டுரையில், அமிதா சிங் ஒரு குழுவை வழிநடத்தி, ஜே.என்.யூ-வை "பாலியல் ஒழுங்கீனத்தின் கூடாரம்" என்று சித்தரிக்கும் ஆவணத்தைத் தயாரித்ததாகக் கூறப்பட்டது.
இந்த வழக்கு பல வருடங்களாக நடந்து வரும் நிலையில் உயர்நீதிமன்றம் பலமுறை தி வயருக்கு சம்மன் அனுப்பியது. இந்த வழக்கு இப்போது உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.
நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் சதீஷ் சந்திர ஷர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதி சுந்தரேஷ், "இந்த வழக்கு தொடர்பாக, நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியுள்ளது. இவ்வளவு காலம் இந்த வழக்கை இழுத்துக்கொண்டே இருக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், "கிரிமினல் அவதூறு சட்டங்களை நீக்கும் நேரம் வந்துவிட்டது" என்றும் அதுகுறித்து பரிசீலித்து வருவதாகவும் நீதிபதி வாய்மொழியாகத் தெரிவித்தார்.
இந்தியாவில் அவதூறு என்பது சிறை தண்டனைக்கு வழிவகுக்கும் கிரிமினல் குற்றமாக (criminal offence) கருதப்படுகிறது.
ஆனால் பெரும்பாலான நாடுகளில் அவதூறு ஒரு சிவில் வழக்காக மட்டுமே உள்ளது. அவதூறு செய்ததாக நிரூபிக்கப்பட்டால் அபராதம் மட்டுமே விதிக்கப்படும், சிறைத் தண்டனை இருக்காது.
இந்த சூழலில் உச்சநீதிமன்றத்தின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.
- 2 மணிநேரம் பயணித்து டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்தது.
- ஒரு ஆர்வத்தில் தான் இப்படி செய்ததாக அவர் கூறியதை கேட்டு அதிகாரிகளே மலைத்துப்போயினர்.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன் விமானத்தின் தரையிறங்கும் கியர் பெட்டியில் ஒளிந்து கொண்டு இந்தியாவிற்கு வந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளான்.
நேற்று காலை 11 மணிக்கு ஆப்கானிஸ்தான் விமான நிறுவனமான KAM ஏர் விமானத்தில் சிறுவன் இந்த விபரீத சாகச பயணத்தை மேற்கொண்டுள்ளார். 2 மணிநேரம் பயணித்து டெல்லி விமான நிலையத்தை அந்த விமானம் அடைந்த நிலையில் சிறுவனை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கவனித்துள்ளனர்.
ஆப்கானிய குர்தாவுடன் அந்த சிறுவன் காணப்பட்டான். அவன் பத்திரமாக இருந்ததை அதிகாரிகள் உறுதி செய்தனர். அதன்பின் சிறுவன் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டான்.
விசாரணையில், காபுல் விமான நிலயத்தில் பாதுகாப்பை மீறி யாருக்கும் தெரியாமல் நுழைந்து விமானத்தின் கியர் பெட்டியில் ஏறி ஒளிந்துகொண்டதாக சர்வ சாதாரணமாக தெரிவித்துள்ளான். ஒரு ஆர்வத்தில் தான் இப்படி செய்ததாக அவர் கூறியதை கேட்டு அதிகாரிகளே மலைத்துப்போயினர்.
இதன்பின் மதியம் 12.30 மணிக்கு அதே விமானத்தில் சிறுவன் ஆப்கானிஸ்தானுக்கே பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டான்.
- ட்ரூகாலரில் போன் செய்தவர் என்னை எண்ணைச் சரிபார்த்தபோது, அது 'தொலைத்தொடர்புத் துறை' என்று தோன்றியுள்ளது.
- அடையாளம் தெரியாத நபர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியும் மாநிலங்களவை எம்.பியுமான சுதா மூர்த்தியிடம் அரங்கேறிய சைபர் மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
காவல்துறையினரின் கூற்றுப்படி, இந்த மாதம் 5 ஆம் தேதி காலை 9:40 மணிக்கு, சுதா மூர்த்திக்கு தெரியாத எண்ணிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
மறுபுறம் பேசிய நபர் தன்னை மத்திய தொலைத்தொடர்புத் துறை ஊழியர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். சுதா மூர்த்தியின் மொபைல் எண் ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றும், அந்த எண்ணிலிருந்து சுதா மூர்த்தியின் ஆட்சேபணைக்குரிய விடியோக்கள் சில இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து, தனிப்பட்ட தகவல்களை கேட்டும் தொலைத்தொடர்புத்துறை சுதாவின் செல்போன் எண்ணுக்கு அனைத்து வித சேவைகளையும் நிறுத்தப்போவதாகவும் அந்த நபர் மிரட்டியுள்ளார்.
ட்ரூகாலரில் போன் செய்தவர் என்னை எண்ணைச் சரிபார்த்தபோது, அது 'தொலைத்தொடர்புத் துறை' என்று தோன்றியுள்ளது. இருப்பினும் அந்த நபரின் பேச்சு குறித்து சந்தேகம் அடைந்த சுதா மூர்த்தி சந்தேகம் அடைந்தார்.
இந்த மோசடி முயற்சி தொடர்பாக சுதாமூர்த்தி சார்பாக சைபர் கிரைம் போலீசாரிடம் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது. அடையாளம் தெரியாத நபர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விசாரணைக்காக அமைக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழுவில் மூன்று பேர் விமானப் போக்குவரத்து இயக்குநரககத்தை (DGCA) சேர்ந்தவர்கள் என்பது ஒருதலைப்பட்சமாக உள்ளது.
- மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வாதிட்டார்.
கடந்த ஜூன் 12 ஆம் தேதி, அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானம் AI 171, புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.
விபத்தில், 230 பயணிகளில் 229 பேர், பணியாளர்கள் 12 பேர் கொல்லப்பட்டனர். அருகிலுள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் விமானம் மோதியதில் மேலும் 19 பேர் உயிரிழந்தனர். ஒரு பயணி மட்டுமே அதிசயமாக உயிர் தப்பினார்.
இன்ஜினுக்கு எரிபொருள் அனுப்பும் ஸ்விட்ச் பழுது காரணமாக எரிபொருள் விநியோகம் நின்று விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஆனால் விமானி இன்ஜினுக்கு எரிபொருள் அனுப்பும் ஸ்விட்சை வேண்டுமென்றே ஆஃப் செய்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.
இந்நிலையில் இந்த விபத்து குறித்து சுயாதீன விசாரணை கோரி தொடரப்பட்ட பொது நல வழக்கு நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி என் கோட்டேஷ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வாதிட்டார். முதற்கட்ட அறிக்கையில் முக்கிய தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளதாகவும், எரிபொருள் சுவிட்ச் பிழைகள் மற்றும் மின் சிக்கல்கள் போன்ற முறையான பிழைகளை குறைத்து மதிப்பிட்டு விமானிகள் மீது பழியை மாற்ற முயற்சி நடந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
விபத்து குறித்த விசாரணைக்காக அமைக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழுவில் மூன்று பேர் விமானப் போக்குவரத்து இயக்குநரககத்தை (DGCA) சேர்ந்தவர்கள் என்பது ஒருதலைப்பட்சமாக உள்ளது. யார் மீது குற்றச்சாட்டு உள்ளதோ அவர்களே விசாரணை நடத்துவது நியாயமா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், விமானிகள் மீது குற்றம் சாட்டி 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகையில் கட்டுரை வெளிவந்ததை பிரசாந்த் பூஷண்குறிப்பிட்டார்.
அப்போது பேசிய நீதிபதி சூர்யா காந்த், "இது போன்ற ஊகங்கள் மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் பொறுப்பற்ற கருத்துக்கள் ஆகும். இதுபோன்ற முக்கியமான விஷயங்களில் ரகசியத்தன்மை மிகவும் முக்கியமானது" என்று தெரிவித்தார்.
மேலும் இந்த மனு மீது பதிலளிக்க கோரி மத்திய அரசு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு (DGCA) நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- மனைவி காஜல் தேவியுடன் மகாவீர் யாதவ் வசித்து வந்தார்.
- இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
ஜார்கண்ட்டில் செல்போன் தர கணவனை மனைவி கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டத்தில் உள்ள மிஹிஜாம் பகுதியில் மனைவி காஜல் தேவியுடன் மகாவீர் யாதவ் (40) வசித்து வந்தார். பல ஆண்டுக்கான திருமண வாழ்வில் இருவருக்கும் இடையில் அடிக்கடி சச்சரவுகள் இருந்து வந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, காஜல் தேவி தனது கணவரிடம் செல்போனும், செலவு செய்ய பணமும் கேட்டு அழுத்தம் கொடுத்துள்ளார்.
இதற்கு மகாவீர் மறுத்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த காஜல் தேவி, கத்தியால் தனது கணவரை குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மகாவீர் யாதவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
குற்றவாளியான காஜல் தேவி கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
- இருவரும் தெலங்கானாவின் கரீம்நகரைச் சேர்ந்தவர்கள்.
- பஸ்தர் பகுதியில் பல வன்முறைச் சம்பவங்களுக்கு இவர்கள் மூளையாக இருந்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரு முக்கிய மாவோயிஸ்ட் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் குறித்த தகவலின் பேரில், அபூஜ்மாட் வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்றபோது அவர்கள் கொல்லப்பட்டனர்.
அவர்களின் உடல்களும், ஏகே-47 துப்பாக்கி, இன்சாஸ் துப்பாக்கி, வெடிபொருட்கள் மற்றும் பிற பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
கொல்லப்பட்டவர்கள், மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களான ராஜு தாடா என்கிற கட்டா ராமச்சந்திர ரெட்டி மற்றும் கோசா தாடா என்கிற காதரி சத்யநாராயணா ரெட்டி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரும் தெலங்கானாவின் கரீம்நகரைச் சேர்ந்தவர்கள்.
சத்தீஷ்கரின் பஸ்தர் பகுதியில் பல வன்முறைச் சம்பவங்களுக்கு இவர்கள் மூளையாக இருந்துள்ளனர்.
இவர்கள் இருவர் மீதும் தலா ரூ.40 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புப் படையினரின் இந்த நடவடிக்கைக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரின் மாவோயிஸ்ட் எதிர்ப்புப் போரில் இது ஒரு முக்கிய வெற்றி என்று முதல்வர் விஷ்ணு தேவ் சாய் தெரிவித்தார்.
- வாரணாசியில் தரையிறங்கியதும், அந்தப் பயணி மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினரிடம் (CISF) ஒப்படைக்கப்பட்டார்.
- அவரிடமும், அவருடன் பயணம் செய்த மற்ற ஏழு பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இன்று, பெங்களூருவிலிருந்து வாரணாசிக்குச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டது.
நடுவானில் ஒரு பயணி விமானியின் அறையான காக்பிட் கதவைத் திறக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்தப் பயணி முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்தவர் என்றும், கழிவறைக்குச் செல்ல முயன்றபோது தவறுதலாக காக்பிட் கதவை திறக்க முயன்றதாகவும் ஏர்லைன்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் விமானத்தின் பாதுகாப்பு மீறல் இல்லை என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
காக்பிட் கதவுகள் ரகசியக் குறியீட்டு எண் மூலம் பூட்டப்பட்டிருக்கும். எனவே, அந்தப் பயணியால் கதவை திறக்க முடியவில்லை. விமானம் வாரணாசியில் தரையிறங்கியதும், அந்தப் பயணி மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினரிடம் (CISF) ஒப்படைக்கப்பட்டார்.
அவரிடமும், அவருடன் பயணம் செய்த மற்ற ஏழு பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களின் உடமைகளும் மீண்டும் சோதிக்கப்பட்டன.
விமானக் கடத்தல் முயற்சி என்ற சந்தேகம் எழுந்த நிலையில், அந்தப் பயணிக்கு எந்தவொரு தீய நோக்கமும் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
- கவனமான திட்டமிடல், விவேகமான நிதி மேலாண்மை மற்றும் 5T ஆளுகை மூலம் உபரி வருவாய் ஈட்டலை விரிவுபடுத்தியுள்ளது.
- வருவாய் தொடர்ந்து அதிகரிப்பது, மத்திய மானியங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க உதவியது.
ஒடிசா மாநிலம் 2022-23 நிதியாண்டில் உபரி வருவாய் ஈட்டியதில் இந்தியாவின் 3ஆவது பெரிய மாநிலம் என சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 19,456 கோடி ரூபாய் உபரி வருவாய் ஈட்டியது பெருமிதம் என பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
2000ஆம் ஆண்டில் இருந்து 24 வருடம் நவீன் பட்நாயக் ஒடிசா மாநில முதல்வராக இருந்துள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
"விவேகமான நிதி மேலாண்மையுடன், 2022-23 ஆம் ஆண்டில் வருவாய் உபரியைக் கொண்ட முன்னணி மாநிலங்களில் ஒடிசாவும் ஒன்று என்பதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் "கவனமான திட்டமிடல், விவேகமான நிதி மேலாண்மை மற்றும் 5T ஆளுகை மூலம் ஒடிசா அதன் சொந்த வளங்களில் இருந்து வருவாய் ஈட்டலை விரிவுபடுத்தியுள்ளது. வருவாய் தொடர்ந்து அதிகரிப்பது, மத்திய மானியங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், ஏராளமான நலத்திட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லவும் மாநிலத்திற்கு உதவியுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.
- கொஞ்சம் நேரம் உங்களால் உட்கார்ந்து இருக்க முடியாதா?
- நான் ஒரு தடவை சொன்னா உங்களுக்கு புரியலயா?
மைசூரு தசரா திருவிழா உலக புகழ் பெற்றது. இந்த தசரா விழா மைசூருவில் இன்று தொடங்கியது. தொடக்க விழாவில் கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசும்போது சிலர் இருக்கையில் இருந்து எழுந்து கூச்சலிட்டு ஏதோ கூறிக்கொண்டே இருந்தனர். இதனால் சித்தராமையாக நிதானத்தை இழந்தார்.
நிதானத்தை இழந்து அவர் ஆவேசமாக பேசியதாவது:-
கொஞ்சம் நேரம் உங்களால் உட்கார்ந்து இருக்க முடியாதா? உட்காருங்கள். அது யாரு? நான் ஒரு தடவை சொன்னா உங்களுக்கு புரியலயா? நீங்கள் ஏன் இங்க வந்தீர்கள்? நீ வீட்டிலேயே இருந்திருக்கனும்" என்றார்.
காவல் அதிகாரிகளிடம் அவர்களை வெளியேற விட்டு விடாதீர்கள். அரைமணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் உட்கார முடியாதா? அப்படி என்றால், ஏன் இந்த விழாவில் பங்கேற்க வந்தீர்கள்.
இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.
மைசூரி தசாரா விழாவை தொடங்கி வைக்க Booker Prize வின்னர் பானு முஷ்தாக்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், நீதிமன்றம் அழைப்பு விடுத்ததை தடைசெய்ய மறுப்பு தெரிவித்துவிட்டது.
- சாலையின் நடுவே பெரிய பள்ளம் தோண்ப்பட்டுள்ளது.
- மழை நீரால் பள்ளம் நிரம்பி கிடப்பதால் அடிக்கடி வாகனங்கள் கவிழ்ந்து விபத்து ஏற்படுவதாக குற்றச்சாட்டு.
பொதுவாக சாலையில் உள்ள பள்ளத்தால், வாகனங்கள் கவிழ்ந்தால் அரசு மீது குற்றம்சாட்டப்படுவது வழக்கம். சாலை பராமரிப்பு இல்லாத காரணத்தினால்தான் வாகனம் கவிழந்ததாக குற்றம்சாட்டுவார்கள். ஆனால், பீகார் மாநிலத்தில் சாலையில் கவிழ்ந்த காரின் உரிமையாளர், அரசை அவமதிப்பதற்கான சதி எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை பீகார் மாநிலத்தின் பாட்னாவில், ஐந்து பேருடன் சென்ற சொகுசு கார், மழை வெள்ளம் குளம் போல் தேங்கி நின்ற சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்தது. ஆனால் காரில் இருந்த ஐந்து பேரும் காயமின்றி உயிர் தப்பினர். காரை ஓட்டு வந்தவர் பெண். இவர்தான் அரசை அவமதிப்பதற்கான சதி எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் "நாங்கள் எல்லோரையும் தொடர்பு கொண்டோம். டிம் உடன் பேசினோம். அவர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரசை அவமதிப்பதற்காக சதி செய்யப்பட்டதுதான் இந்த பள்ளம் எனக் கூறினார்" எனத் தெரிவித்தார்.
மேலும், அதிகாரிகள் குழியை தோண்டி, 20 நாட்களாக கவனிக்காமல் விட்டுவிட்டனர். தற்போது மழைக்காலம். ஐந்து பேர் காரில் இருந்தோம். யாராவது ஒருவர் உயிரிழந்திருந்தால், யார் பொறுப்பு?. அங்கு பேரி கார்டு கிடையாது. எங்கள் கார் விழுந்த அதேநேரத்தில், பைக் ஒன்றும் விழுந்தது. ஒவ்வொரு நாளும் இந்த குழியில் தினமும் யாராவது ஒருவர் விழுவதாக உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள்" என்றார்.






