என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜார்க்கண்டில் நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு கசிவு - 2 பெண்கள் பலி - பலர் பாதிப்பு
    X

    ஜார்க்கண்டில் நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு கசிவு - 2 பெண்கள் பலி - பலர் பாதிப்பு

    • அருகில் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் வசித்து வந்த 10,000-க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    ஜார்க்கண்ட்டில் நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு கசிவால் 2 பெண்கள்உயிரிழந்தனர்.

    தன்பாத் மாவட்டத்தின் கெண்டுவாடி பஸ்தி பகுதியில் உள்ள கைவிடப்பட்ட நிலக்கரி சுரங்கத்தில் இருந்து கடந்த 2 நாள்களாக கார்பன் மோனாக்ஸைட் விஷவாயு கசிந்து வருவதாகக் கூறப்படுகிறது.

    இதனால் அருகில் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் வசித்து வந்த 10,000-க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    விஷவாயு தாக்கியதில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கண் எரிச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு 20-க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் விஷவாயு தாக்கியதில் அப்பகுதியை சேர்ந்த பிரியங்கா தேவி என்ற பெண்நேற்று முன் தினம் உயிரிந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு பெண்ணா லலிதா தேவி என்பவர் நேற்று உயிரிழந்தார்.

    இதனிடையே விஷவாயு பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    அதேநேரம் விஷவாயு கசிவிற்கு பிசிசிஎல் நிறுவனத்தின் அலட்சியமே காரணம் எனக் குற்றம்சாட்டி உள்ளூர்வாசிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×