என் மலர்
சென்னை
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- தென்றல் நகர் கிழக்கு, தென்றல் நகர் மேற்கு, சரஸ்வதி நகர் மெயின் ரோடு.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (15.10.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
அலமதி: கொடுவள்ளி, மாகரல், கண்டிகை, சேதுபாக்கம், குருவாயல், கரணி, அம்மனப்பாக்கம், ராமாபுரம்.
பட்டாபிராம்: ஆவடி செக்போஸ்ட், என்எம் ரோடு, நந்தவன மேட்டூர், கன்னிகாபுரம், திருமலைராஜ புரம், நேரு பஜார்.
திருமுல்லைவாயல்: தென்றல் நகர் கிழக்கு, தென்றல் நகர் மேற்கு, சரஸ்வதி நகர் மெயின் ரோடு, ஜாக் நகர், யமுனா நகர், வள்ளலார் நகர், மூர்த்தி நகர் 4-வது தெரு, அம்பேத்கர் நகர்.
ஆவடி: காமராஜ் நகர், சிவசக்தி நகர், 60 அடி சாலை, 40 அடி சாலை, ஜோதி நகர், நாகம்மை நகர், ஆண்டனி நகர், இஎஸ்ஐ அண்ணாநகர்.
மாங்காடு: ஆவடி ரோடு, மகிழம் அவென்யூ, பூஞ்சோலை வீதி, எம்எஸ்எஸ் நகர், ஆட்கோ நகர், மேட்டு தெரு, சிப்பாய் நகர், தந்தை பெரியார் நகர், காமராஜ் நகர், முருகப்பிள்ளை நகர், கங்கை அம்மன் கோவில் தெரு, விநாயக நகர், கோரிமேடு, பஜார் தெரு, கண்ணம்புள்ளி செட்டி தெரு, அம்மன் கோவில் தெரு, குன்றத்தூர் ரோடு.
எழும்பூர்: எழும்பூர் ஹை ரோடு, கெங்கு ரெட்டி தெரு, வீராசாமி தெரு, பெருமாள் ரெட்டி தெரு, கேப்பு ரோடு, ஜெகதமம்மாள் கோவில் தெரு, எம்.எஸ்.நகர், சேத்பேட்.
பாந்தியன் சாலை: மாண்டித் சாலை, எத்திராஜ் சாலை, மார்ஷல் சாலை, மோதிலால் லேண்ட், பழைய ஆணையர் அலுவலகம், நீதிபதிகள் குடியிருப்பு.
- சட்டமன்ற குழு தலைவர், கொறடா பொறுப்புகளில் இருந்து தங்களை நீக்கக்கூடாது என சபாநாயகரிடம் வலியுறுத்தி உள்ளனர்.
- அன்புமணி தரப்பை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரை சந்தித்து பா.ம.க. சட்டமன்றக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து ஜி.கே.மணியை நீக்கக் கோரி மனு அளித்தனர்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே. மணி, அருள் ஆகியோர் சபாநாயகரை சந்தித்து பேசியுள்ளனர். சட்டமன்ற குழு தலைவர், கொறடா பொறுப்புகளில் இருந்து தங்களை நீக்கக்கூடாது என சபாநாயகரிடம் வலியுறுத்தி உள்ளனர்.
முன்னதாக, சட்டசபை தொடங்குவதற்கு முன்பு, அன்புமணி தரப்பை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரை சந்தித்து பா.ம.க. சட்டமன்றக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து ஜி.கே.மணியை நீக்கக் கோரி மனு அளித்தனர்.
ஜி.கே.மணியை மாற்றுவது தொடர்பாக சபாநாயகரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் அன்புமணி தரப்பு எம்.எல்.ஏ.க்களான சதாசிவம், சிவகுமார், வெங்கடேசன் ஆகியோர் தர்ணாவில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
- ஜி.கே.மணியை மாற்றுவது தொடர்பாக சபாநாயகரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் தர்ணாவில் ஈடுபட்டனர்.
மானியக் கோரிக்கை விவாதங்களுக்காக தமிழ்நாடு சட்டசபை இன்று கூடியது. இன்று தொடங்கியுள்ள சட்டசபை கூட்டம் வருகிற 17-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, சட்டசபை வளாகத்தில் அன்புமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
பா.ம.க. சட்டமன்றக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து ஜி.கே.மணியை நீக்கக் கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜி.கே.மணியை மாற்றுவது தொடர்பாக சபாநாயகரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் அன்புமணி தரப்பு எம்.எல்.ஏ.க்களான சதாசிவம், சிவகுமார், வெங்கடேசன் ஆகியோர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
- சட்டசபை கூடியதும் முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
- இன்று முதல் வரும் 17-ந்தேதி வரை 4 நாட்கள் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் ஜனவரி மாதம் 6-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டம் 4 நாட்கள் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து மார்ச் 14-ந் தேதி சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆனது. அதைத்தொடர்ந்து, மார்ச் 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 2 பட்ஜெட்டுகள் மீதான பொது விவாதம் நடைபெற்றது.
மார்ச் 24-ந் தேதி முதல் ஏப்ரல் 29-ந் தேதிவரை துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடந்தன. பின்னர் தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில் 6 மாத கால இடைவெளியில் சட்டசபை மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்ற அவை விதியின் அடிப்படையில், தமிழக சட்டசபை மீண்டும் இன்று கூடியது.
சட்டசபை கூடியதும் முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் புரட்சிமணி, குணசேகரன், கோவிந்தசாமி, அமர்நாத், அறிவழகன், ராமலிங்கம், கலுலுர் ரஹ்மான், சின்னசாமி மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
இன்று முதல் வரும் 17-ந்தேதி வரை 4 நாட்கள் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
- தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
- தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உச்சம் அடைந்து வருகிறது.
தங்கம் விலை கடந்த 7-ந் தேதி ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்தை தொட்டது. அதன்பின்னரும் விலை ஏற்றம் கண்டது. இதனால் கடந்த 11-ந் தேதி ஒரு சவரன் ரூ.92 ஆயிரம் என்ற உச்சத்தையும் தொட்டது. இந்தநிலையில், நேற்றும் தங்கம் விலை ஏறுமுகத்தில் இருந்தது. அந்தவகையில் நேற்றும் 2 முறை தங்கம் உயர்ந்து இருந்தது.
அதன்படி, காலையில் கிராமுக்கு ரூ.25-ம் சவரனுக்கு ரூ.200-ம், பிற்பகலில் கிராமுக்கு ரூ.55-ம், சவரனுக்கு ரூ.440-ம் அதிகரித்து காணப்பட்டது. மொத்தத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 580-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 640-க்கும் விற்பனை ஆனது.
இந்த நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 245 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 11,825 ரூபாய்க்கும் சவரனுக்கு 1,960 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,600-க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உச்சம் அடைந்து வருகிறது. அந்த வகையில், இன்று கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 206 ரூபாய்க்கும் கிலோவுக்கு 9 ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 2 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
13-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,640
12-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000
11-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000
10-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,720
09-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,400
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
13-10-2025- ஒரு கிராம் ரூ.197
12-10-2025- ஒரு கிராம் ரூ.190
11-10-2025- ஒரு கிராம் ரூ.190
10-10-2025- ஒரு கிராம் ரூ.184
09-10-2025- ஒரு கிராம் ரூ.177
- கண்ணுக்கு குளிர்ச்சியாக மரக்கன்றுகள், சிறுவர்கள் விளையாடுவதற்கு சீஸா, ஊஞ்சல் என மெரினாவே அட்டகாசமாக மாறியுள்ளது.
- கடற்கரைக்கு வரும் மக்களை கண்காணிப்பதற்காக மூங்கில் கண்காணிப்பு கோபுரங்கள் நவீன தரத்துடன் அமைக்கப்பட்டு உள்ளன.
சென்னை:
மெரினா சென்னையின் முக்கிய அடையாளம். உலகின் எந்த இடத்தில் இருந்தாலும் இந்த ஒற்றை பெயர் சென்னையின் வரலாற்றை சொல்லும். பல கனவுகளுடன் சென்னைக்கு வருபவர்களுக்கு அலைகளும், கடற்கரை மணற்பரப்பும் வாழ்க்கையை மகிழ்விக்கும் வழிகாட்டியாக காலம் காலமாக திகழ்ந்து வருகிறது.
வரலாறு படைத்த தலைவர்களை சிலைகளாக தாங்கிக்கொண்டு, உழைப்பை வலியுறுத்தும் உழைப்பாளர் சிலையை தன்னகத்தே கொண்டுள்ள மெரினாவில் பல சரித்தர சாதனை கூட்டங்கள், பேரணிகள் அரங்கேறியுள்ளது. மண்ணின் மக்களின் உணர்வுகளுடன் கலந்து விட்ட மெரினா இன்றைக்கு ஏழை, எளிய மக்களின் பொழுதுபோக்கு அட்சய பாத்திரமாக இருக்கிறது.
தினமும் வந்து செல்லும் மக்களை மகிழ்விக்காமல் ஒருபோதும் மெரினா விட்டதில்லை, அதன் அலைகளும் ஓய்ந்ததில்லை. அந்த அளவுக்கு சென்னையுடன் ஒன்றி பிணைந்த மெரினா தற்போது, காலத்திற்கேற்ப தன்னை மாற்றி வருகிறது. நீலக்கொடி சான்றை பெறும் அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி பயணிக்க தொடங்கியிருக்கிறது.

மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள மூங்கில் அலங்கார வளைவு.
பாதம் நனைக்கும் அலைகளை ரசித்த மக்களுக்கு தற்போது பெரியவர்கள் அமரும் மூங்கில் இருக்கைகள், கோவாவை போன்று படுத்துக்கொண்டு கடலை ரசிக்கும் இருக்கைகள், நிழலுக்காக ஒதுங்கும் கோபுர குடைகள், மூங்கிலால் ஆன வரவேற்பு அலங்கார வளைவுகள் என மெரினா ரொம்பவே மாறி போச்சு.
கண்ணுக்கு குளிர்ச்சியாக மரக்கன்றுகள், சிறுவர்கள் விளையாடுவதற்கு சீஸா, ஊஞ்சல் என மெரினாவே அட்டகாசமாக மாறியுள்ளது. இது குழந்தைகளுடன் மெரினா கடற்கரைக்கு வரும் மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. காலி பாட்டில்கள் மற்றும் தேவையற்ற பொருட்களை போடுவதற்கு குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன. கடற்கரைக்கு வரும் மக்களை கண்காணிப்பதற்காக மூங்கில் கண்காணிப்பு கோபுரங்கள் நவீன தரத்துடன் அமைக்கப்பட்டு உள்ளன.
உடற்பயிற்சி உபகரணங்கள், மணற்பரப்பில் நடந்து செல்ல நவீன பாதைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வழி, அவர்கள் பொழுதை போக்குவதற்கு சிறப்பு உபகரணங்கள், போதுமான அளவு கடற்கரை உள்ளே மூங்கிலால் அமைக்கப்பட்ட கழிவறைகள் என மெரினா கடற்கரை அனைத்து தரப்பு மக்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
பல மாற்றங்களை கடந்து, நவீன மயமாகி வரும் மெரினாவில், பட்டினப்பாக்கம் வரை நீண்ட தூரத்திற்கு கடல் உணவக கடைகளின் விற்பனையும் களை கட்டி வருகிறது. இருளில் ஒளிரும் வண்ண விளக்குகளால் மெரினாவின் மொத்த அழகும் மனதை அள்ளிச் செல்லும். மெரினாவின் அழகையும், நவீனத்தையும் சேதப்படுத்தாமல் ரசிப்பதே உயிர்ப்பாக இருக்கும். அதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
- வருகிற டிசம்பர் 6-ந் தேதி முதல் இணைக்கப்படுகிறது.
- செங்கல்பட்டில் இருந்து காக்கிநாடாவிற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் டிசம்பர் 7-ந் தேதி முதல் இணைக்கப்படுகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பயணிகளின் வசதிக்காக தெலுங்கானா மாநிலம் காச்சிகுடாவில் இருந்து செங்கல்பட்டுக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்-17652) படுக்கை வசதி பெட்டிக்கு பதிலாக ஒரு 2-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டி வருகிற டிசம்பர் 6-ந் தேதி முதல் இணைக்கப்படுகிறது.
இதே மாற்றங்கள், செங்கல்பட்டில் இருந்து காச்சிகுடாவிற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் (17651) டிசம்பர் 8-ந் தேதி முதல் இணைக்கப்படுகிறது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து செங்கல்பட்டுக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (17644) படுக்கை வசதி பெட்டிக்கு பதிலாக ஒரு 2-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டி வருகிற டிசம்பர் 7-ந் தேதி முதல் இணைக்கப்படுகிறது. இதே மாற்றங்கள், செங்கல்பட்டில் இருந்து காக்கிநாடாவிற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் (17643) டிசம்பர் 7-ந் தேதி முதல் இணைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரளா கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 13 மணிவரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
- வரும் நவம்பர் 5ம் தேதி மற்றும் 6ம் தேதிகளில் ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடக்கிறது.
- நிர்வாகம், சட்டம் ஒழுங்கு, வளர்ச்சி பணிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட உள்ளன.
2 நாட்கள் ஆட்சியர்கள், காவல் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் நவம்பர் 5ம் தேதி மற்றும் 6ம் தேதிகளில் ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு கூடுகிறது.
இதில், நிர்வாகம், சட்டம் ஒழுங்கு, வளர்ச்சி பணிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் என்று தவெக தரப்பு வலியுறுத்தியது.
- உச்ச நீதிமன்றம், கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
கரூர் சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி, விசாரணை குழு அமைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. இந்த மனு, நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சாரியா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக போலீசை மட்டும் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் என்று தவெக தரப்பு வலியுறுத்தியது.
இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில், "நீதி வெல்லும்!" என பதிவிட்டுள்ளார்.
- திமுக-வின் அரசியல் தில்லுமுல்லுகள் தீர்ந்தபாடில்லை.
- திமுக ஆட்சி செய்தால், நீதியே இவர்களுடன் போர் செய்ய வேண்டிய நிலையில் தான் உள்ளது.
கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி வழக்கு தாக்கல் செய்தவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், பிரபாகரன் என்பவரை திமுகவைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர் ரகுநாதன் தொடர்பு கொண்டு பேரம் பேசியுள்ளதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக தலைமை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கரூர் சம்பவம் தொடர்பாக CBI விசாரணை கோரி வழக்கு தாக்கல் செய்த, தன் குடும்பத்தில் இருவரை இழந்துள்ள பிரபாகரன் செல்வகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கின் கோரிக்கையின் படியே CBI விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
இந்நிலையில், குடும்பத்தார் இருவரை பரிதாபமாக இழந்த துயரில் உள்ளவர் என்றும் பாராமல், வழக்கு தொடர்ந்த பிரபாகரனை திமுகவைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர் ரகுநாதன் தொடர்புகொண்டு, வழக்கை வாபஸ் பெற்றால் பணம், வேலை தருவதாக ஆசை வார்த்தை கூறி, மிரட்டல் போன்ற தொனியில் பேரம் பேசியதாகவும், அதனை தான் மறுத்த பிறகு, தன் பெயருடன் சில ஊடகங்களில் "தான் வழக்கே தொடராததாக" தவறான செய்தி வெளிவந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இன்று, திமுக வழக்கறிஞரான வில்சன், மோசடியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஒரு கருத்துருவாக்கத்தை திரிக்க, திணிக்க முயல்கிறார்.
ஏன் பதறுகிறீர்கள் திமுக ? என்ன தவறு செய்தீர்கள்?
வழக்கு வாபஸ் பெற உங்கள் கட்சி ஒன்றியச் செயலாளர் மூலம் எதற்கு பணம், வேலை தர முன் வருகிறீர்கள்? ஏன் பிரபாகரன் மிரட்டப்படுகிறார்?
நீதி அமைப்பின் உச்சமான உச்சநீதிமன்ற தீர்ப்பையே தங்கள் "விஞ்ஞான ஊழல்" தந்திரத்தால் திரித்து பேசும் அளவிற்கு எதை மறைக்க, யாரைக் காப்பாற்ற இவ்வளவு முனைகின்றனர்?
திமுக-வின் அரசியல் தில்லுமுல்லுகள் தீர்ந்தபாடில்லை. திமுக ஆட்சி செய்தால், நீதியே இவர்களுடன் போர் செய்ய வேண்டிய நிலையில் தான் உள்ளது.
வழக்கு தொடர்ந்த பிரபாகரன், தனக்கும், தனது தாயாருக்கும் பாதுகாப்பு வேண்டி காணொளி வாயிலாக கோரிக்கை வைத்துள்ளார். அவர்களுக்கு சிறு கீறல் விழுந்தால் கூட , அதற்கு இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு தான் முழு பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தினமும் காலை மற்றும் பிற்பகல் என தங்கம் விலையில் ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.
- தங்கம் விலை அதிகரித்து, சவரன் ரூ.93,000-ஐ நெருங்குகிறது.
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற-இறக்கத்தில் காணப்படுகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக தினமும் காலை மற்றும் பிற்பகலில் தங்கம் விலையில் ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இதனால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் விலை அதிகரித்து ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சியை கொடுத்தது. இதுமேலும் அதிகரித்து, சவரன் ரூ.93,000-ஐ நெருங்குகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை காலையில் சவரனுக்கு ரூ.200 உயர்ந்த நிலையில், மாலை மேலும், ரூ.440 உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும், ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,640க்கு விற்பனையாகிறது.
ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,580-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.197-க்கு விற்பனை செய்யப்படுகிறது.






