என் மலர்
நீங்கள் தேடியது "உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி"
- நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதின.
- இதில் இந்தியா 3-0 என்ற கணக்கில் வென்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
சென்னை:
5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதின.
முதல் ஆட்டத்தில் இந்தியாவின் ஜோஸ்னா சின்னப்பாவும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவின் அபய்சிங்கும், 3-வது ஆட்டத்தில் இந்திய அணியின் அனாஹத் சிங்கும் வென்றனர். இறுதியில், இந்தியா 3-0 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில், சாதனை படைத்த இந்திய அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், தனது முதல் ஸ்குவாஷ் உலகக் கோப்பையை வென்றுள்ள இந்திய அணிக்கு பாராட்டுகள். சொந்த நாட்டுப் பார்வையாளர்களின் முன்னிலையில், ஜோஸ்னா, அபய்சிங், செந்தில்குமார் மற்றும் அனாஹத் சிங் ஆகியோரின் நிதானமும், துணிச்சலும், தரமும் நிறைந்த ஆட்டத்தால் 3-0 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி வரலாற்று வெற்றியை இந்திய அணி பெற்றுள்ளது.
இந்திய அணியின் நால்வரில் 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும், இத்தகைய பன்னாட்டு தொடரை சென்னையில் நடத்தியதும் சேர்ந்து இச்சாதனை வெற்றியானது தமிழ்நாட்டின் விளையாட்டுச் சூழலின் ஆழத்தையும், நம்பிக்கையையும், சிறப்பையும் மீண்டுமொரு முறை நிலைநாட்டியுள்ளது என பதிவிட்டுள்ளார்.
- சென்னையில் நடைபெற்ற ஸ்குவாஷ் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா சாதனை.
- ஹாங்காங் அணியை 3-0 என்ற கணக்கில் இந்தியா வீழ்த்தியது.
சென்னையில் நடைபெற்ற ஸ்குவாஷ் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
ஹாங்காங் அணியை 3-0 என்ற கணக்கில் இந்தியா வீழ்த்தி ஸ்குவாஷ் உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றது.
ஸ்குவாஷ் உலகக்கோப்பையில முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.
- நேற்று நடந்த அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான எகிப்துடன் இந்திய அணி மோதியது.
- இதில் 3-0 என்ற கணக்கில் வென்ற இந்தியா முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
சென்னை:
5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்திலும், நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியிலும் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த அரை இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் எகிப்தை தோற்கடித்து முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் வேலவன் செந்தில்குமார் 7-1, 7-3, 7-6 என்ற நேர் செட்டில் வென்றார்.
மற்றொரு ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் அபய் சிங் 3-1 என்ற செட் கணக்கில் வென்றார்.
பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அனாஹத் சிங் 6-7, 7-5, 7-3, 3-7, 7-3 என 3-2 என்ற செட் கணக்கில் வென்றார்.
இந்திய அணி இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் ஹாங்காங் அணியை எதிர்கொள்கிறது.
- இந்தியா 4-0 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தை தோற்கடித்தது.
- இந்தியா அடுத்த ஆட்டத்தில் பிரேசிலை நாளை சந்திக்கிறது.
சென்னை:
5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. 'பி' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தை எதிர்கொண்டது.
இதில் முதல் ஆட்டத்தில் தேசிய சாம்பியனான தமிழகத்தின் ேவலவன் செந்தில்குமார் 7-6, 7-6, 7-5 என்ற நேர் செட்டில் சுவிட்சர்லாந்தின் ராபின் கடோலாவை வீழ்த்தினார். ஜோஸ்னா சின்னப்பா 7-1, 5-7, 7-2, 7-2, 7-0 என்ற செட் கணக்கில் ஸ்டெல்லா காப்மேனை 18 நிமிடங்களில் மடக்கினார்.
அபய்சிங், அனாஹத் சிங் ஆகிய இந்தியர்களும் தங்களது ஆட்டங்களில் வெற்றி தேடித்தந்தனர். முடிவில் இந்தியா 4-0 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தை தோற்கடித்தது. இந்தியா அடுத்த ஆட்டத்தில் பிரேசிலை நாளை சந்திக்கிறது.






