என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மாணவர்களுக்கு நீச்சல் தெரியாததால் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டம் வீரராகவ பெருமாள் கோவில் குளத்தில் தவறி விழுந்ததில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சந்தியாவந்தனம் செய்யும் போது மாணவர்கள் 3 பேரும் படிக்கட்டில் இருந்து தவறி குளத்தில் விழுந்துள்ளனர். மாணவர்களுக்கு நீச்சல் தெரியாததால் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

    சேலையூர் மடத்தில் பயின்றுவந்த ஹரிஹரன், வெங்கடரமணன், வீரராகவன் ஆகியோர் உயிரிழந்தது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • வைகோ நேற்று வீட்டில் கீழே விழுந்து அடிபட்ட நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
    • கடந்த ஆண்டும் கீழே விழுந்ததில் காயம் அடைந்த வைகோவுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை சாலிகிராமத்தில் வசித்து வரும் வைகோ நேற்று வீட்டில் கீழே விழுந்து அடிபட்ட நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

    கடந்த ஆண்டும் கீழே விழுந்ததில் காயம் அடைந்த வைகோவுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

    • சரண்யா என்பவர் மதுரை மாநகர பாஜக மகளிர் அணி நிர்வாகியாக உள்ளார்.
    • திருமணம் முடிந்த நிலையில், சரண்யா தந்து கணவருடன் பட்டுக்கோட்டையில் வசித்து வந்தார்.

    பட்டுக்கோட்டையில் முன்னாள் பாஜக பெண் நிர்வாகியை மர்ம கும்பல் தலை துண்டித்து கொலை செய்து விட்டு தப்பி உள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

    மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் சரண்யா (வயது 35). முன்னாள் மதுரை மத்திய மாநகர பாஜக பிரமுகராக இருந்தார். இவரது கணவர் சண்முக சுந்தரம். இவர்களுக்கு சாமுவேல் (15), சரவணன் (13) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் மதுரைவில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு எதிர்பாராத விதமாக சண்முகசுந்தரம் இறந்து விட்டார்.

    இதனால் மனமுடைந்த சரண்யா கணவனை இழந்த துக்கத்தில் இருந்துள்ளார். பின்னர், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கழுகப்புலிக்காடு கிராமத்தை சேர்ந்த பாலன் (45) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து, பாலன், சரண்யா, சாமுவேல், சரவணன் ஆகியோர் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் மீன் மார்க்கெட் சந்து பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

    அதே பகுதியில், பாலன் தனியார் டிராவல்ஸ் நிறுவனமும், சரண்யா ஜெராக்ஸ் கடையும் வைத்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளனர். கடை, வீடு, குடும்பம் என அவர்கள் சந்தோஷமாக வாழ்வை கழித்து வந்துள்ளனர். தினமும் அவர்கள் காலையில் வீட்டில் இருந்து புறப்பட்டு அவரவர்கள் கடைக்கு வந்து வேலையை தொடங்குவர். பின்னர், இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு வருவர்.

    வழக்கம்போல், நேற்றும் கடையை பூட்டி விட்டு பாலன் மற்றும் அவரது மகன்கள் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு கிளம்பி உள்ளனர். சரண்யா மட்டும் அவரது கடையை பூட்டிவிட்டு சுமார் 1 கி.மீ தூரம் உள்ள வீட்டிற்கு நடந்து சென்று கொண்டி ருந்தார்.

    இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் சிலர் சரண்யாவை பின் தொடர்ந்துள்ளனர். பின்னர், ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து சரண்யாவை சுற்றி வளைத்து, அவர்கள் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் சரண்யாவை கழுத்து மற்றும் தலையின் பின்பகுதியில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதில் தலை துண்டிக்கப்பட்டு சரண்யா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    நீண்ட நேரம் ஆகியும் மனைவி வீட்டிற்கு வராததால் அவரை தேடி பாலன் வந்துள்ளார். அப்போது வீட்டின் அருகில் ரத்த வெள்ளத்தில் சரண்யா பிணமாக கிடந்துள்ளார். இதனை கண்ட பாலன் அவரது உடலை பார்த்து கதறி துடித்துள்ளார்.

    பின்னர், இதுகுறித்து வாட்டாத்திக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர், முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணமா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும், கொலை நடந்த இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு தடயங்கள் எதுவும் கிடைக்கின்றதா? என தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • 23 மீனவர்களை இலங்கையை சேர்ந்த அமையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு உள்ளனர்.
    • இலங்கை அதிகாரிகளிடம் பிரச்சனையை எடுத்து சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    கடந்த மே 25ம் தேதி நாகையைச் சேர்ந்த 23 மீனவர்கள் இலங்கையை சேர்ந்த அமையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு உள்ளனர்.

    இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களை தடுக்க இலங்கை அதிகாரிகளிடம் பிரச்சனையை எடுத்து சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 101 மீனவர்கள், 12 படகுகளையும் இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழகத்தில் மாணவர்கள் கடும் சோதனைக்குட்பட்டே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
    • நீட் தேர்வு கட்டுப்பாடால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

    நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.

    இந்த தேர்வில் மாணவ-மாணவிகள் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மேற்சொன்ன படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

    அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது.

    2025-26-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வில் நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் பேர் பங்கேற்றனர்.

    இந்நிலையில், தமிழகத்தில் மாணவர்கள் கடும் சோதனைக்குட்பட்டே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

    குறிப்பாக, மாணவிகளில் துப்பட்டாவை கழற்ற சொல்வது முதல், மூக்குத்தி, காதில் தோடு என மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

    திருப்பூரில் ஒரு மாணவியில் உடையில் நிறைய பொத்தான்கள் இருந்ததாக கூறி அதை அறுத்து எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதனால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    நாம் தமிழர் சட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நீட் மாணவிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுபாடுகளுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தார்.

    அப்போது அவர்," தமிழ்நாட்டு மாணவர்களை மட்டும் குறிவைத்து பாகுபாடு காட்டப்படுகிறது. மூக்குத்தி மூலம் மாணவி எப்படி பிட் கொண்டு செல்ல முடியும்? பட்டன்கள் மூலம் மாணவர்கள் பிட் கொண்டு செல்ல முடியுமா?" என்று கேள்வி எழுப்பினார்.

    நீட் தேர்வு எழுதும் மாணவிகள் அணிந்து வரும் அடைகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பதால், பல்வேறு ஜவுளி கடைகளில் நீட் தேர்வுக்கான ஆடை விற்பனைக்கு வந்துள்ளது.

    தேசிய தேர்வுகள் முகமை எதிர்பார்க்கும் வகையில், பொத்தன்கள் இல்லாத, எந்த வித டிசைன்களும் இல்லாத பிளெயின் நிறத்தில் சுடிதார் டாப்கள் விற்பனைக்கு வந்துள்ளது.

    • நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
    • தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

    நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

    திரைத்துறையில் இருந்து ஏராளமானோர் வந்து கவுண்டமணியின் மனைவியின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், தவெக தலைவர் விஜய் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    மேலும், விஜய் நடிகர் கவுண்டமணியை ஆரத் தழுவி ஆறுதல் தெரிவித்தார்.

    • குரூப் 2ஏ பதவியில் 2006 பதவிக்கான மெயின் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி நடைபெற்றது.
    • குரூப் 2ஏ தேர்வு முடிவுகளை tnpsc.gov.in என்கிற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

    தமிழகம் முழுவதும் குரூப் 2ஏ மெயின் தேர்வு 82 மையங்களில் கடந்த பிப்ரவரி 8ம் தேதி நடைபெற்றது. 2006 பதவிக்கு நடைபெற்ற தேர்வை 21,563 பேர் எழுதினர்.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, குரூப் 2ஏ பணியில் காலியாக உள்ள 2,540 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20ம் தேதி வெளியிட்டது.

    இந்நிலையில் குரூப் 2ஏ பதவியில் 2006 பதவிக்கான மெயின் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி நடைபெற்றது. மெயின் தேர்வு தாள் II பொது அறிவு மற்றும் பொது திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் மற்றும் மொழி (பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம்) கொள்குறி வகை தேர்வு நடைபெற்றது.

    இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ மெயின் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

    குரூப் 2ஏ தேர்வு முடிவுகளை tnpsc.gov.in என்கிற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

    தொடர்ந்து, 12ஆவது முறையாக குறிப்பிட்ட மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

    • மக்களின் பிரச்சினைகள் குறித்து விஜய்க்கு போதிய புரிதல் இல்லை.
    • பிரபலமான நடிகர்கள் என்றால் அவர்கள் கையில் கொடுத்து விட முடியுமா?

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு அரசியல் பார்வை இல்லை என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

    மக்களின் பிரச்சினைகள் குறித்து விஜய்க்கு போதிய புரிதல் இல்லை.

    சிலர் விஜய்யை பவன் கல்யாணுடன் ஒப்பிடுவதாகவும் நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

    மேலும், பிரபலமான நடிகர்கள் என்றால் அவர்கள் கையில் கொடுத்து விட முடியுமா?

    நடிகர்கள் அரசியல்வாதிகளாக மாறும்போது மாற்று சக்தி என சீட் வாய்ப்பு கிடைப்பதகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    • பாமக சார்பில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா நடைபெறுகிறது.
    • அய்யா என்று சொல்லும் போதே ஆயிரம் கோடி மகிழ்ச்சியடா என்ற பாடலையும் பா.ம.க வெளியிட்டது.

    சென்னை அருகே மாமல்லபுரத்தில் வரும் 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பாமக சார்பில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா நடைபெறுகிறது.

    சித்திரை முழு நிலவு மாநாட்டை ஒட்டி அன்புமணி ராமதாசை முன்னிலைப்படுத்தும் வகையில் இருந்த பாடலும், அடுத்ததாக அய்யா என்று சொல்லும் போதே ஆயிரம் கோடி மகிழ்ச்சியடா என்ற பாடலையும் பா.ம.க வெளியிட்டது.

    இந்த நிலையில், சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டுக்கான இலட்சினையை (LOGO) பாமக வெளியிட்டுள்ளது

    அந்த இலட்சினையில் "இனமே எழு உரிமை பெறு" என குறிப்பிடப்பட்டுள்ளது.

     

    • முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் காரை பின்தொடர்ந்து சென்ற கார் விபத்தில் சிக்கியது.
    • போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது.

    இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றுக் கொண்டிருந்தபோது கெண்டையன்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் காரை பின்தொடர்ந்து சென்ற கார் விபத்தில் சிக்கியது.

    முன்னாள் எம்எல்ஏ நெடுஞ்செழியன் சென்ற கார், மீன் வியாபாரி ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    காரில் பயணம் செய்த முன்னாள் எம்எல்ஏ ராசு, கார் ஓட்டுநர் ரமணி மற்றும் மீன் வியாபரி படுகாயமடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    • பஹல்காமிற்கு சுற்றுலா சென்ற மக்களை கூட காப்பாற்ற முடியாத துப்பில்லாத ஆட்சி தான் நடந்து வருகிறது.
    • மத்திய அரசை பொருத்தவரை அம்பானி, அதானி இருவர் மட்டும் தான்.

    வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி திருப்பூர் ஷாகின்பாக் போராட்ட குழு மற்றும் ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு சார்பில் தொடர் மாலை நேர கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

    3-வது நாளாக நேற்றிரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்.பி., தலைமை தாங்கினார்.

    இதில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பி னர் செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்ளி ட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    அப்போது கனிமொழி எம்.பி., பேசியதாவது:-

    வக்பு திருத்த சட்டம் மூலம் இஸ்லாமியர்களுக்கு மத்திய அரசு அநீதி இழைத்து வருகிறது. பஹல்காமிற்கு சுற்றுலா சென்ற மக்களை கூட காப்பாற்ற முடியாத துப்பில்லாத ஆட்சி தான் நடந்து வருகிறது.

    மத்திய அரசை பொருத்தவரை அம்பானி, அதானி இருவர் மட்டும் தான். அவர்களுக்கான சட்டங்கள், அவர்களுடைய தொழில் வளர்ச்சி பெறுவதற்கான சட்டங்கள் என அந்த 2 பேருக்காக ஆட்சி நடந்து கொண்டிருக்கும் துயரமான நிலையை தான் நாம் பார்த்து கொண்டிருக்கிறோம்.

    பெரும்பான்மையான மக்கள் மீது இவர்களுக்கு அக்கறை இல்லை. மும்பையில் பல்லாயிரம் கோடியில் கட்டப்பட்ட முகேஷ் அம்பானியின் வீடு வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

    12 ஆண்டுகள் அந்த வீட்டில் இருந்து விட்டால் அந்த வீடு அவருக்கே சொந்தம் என புதிய வக்பு சட்டம் சொல்கிறது. அந்த வீட்டை பாதுகாக்க வேண்டு ம் என்று புதிய வக்பு திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வால் கட்டுமானப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
    • மணல் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு மணல் குவாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 23-ந்தேதி முதல் லாரிகள் ஓடாது.

    இதுகுறித்து மாநிலத் தலைவர் யுவராஜ் கூறியதாவது:-

    கடந்த 1½ ஆண்டுகளாக மணல் குவாரிகள் இயங்கவில்லை. இதனால் மாற்றாக எம்.சாண்ட் பயன்படுத்தப்படுகிறது. குவாரி உரிமையாளர்களால் ஜல்லி எம்.சாண்ட், பி சாண்ட் விலை உயர்த்தப்பட்டது. யூனிட்டுக்கு ரூ.1000 வீதம் 2 முறை உயர்த்தி உள்ளனர்.

    கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வால் கட்டுமானப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதை அடுத்து சமீபத்தில் 1000 ரூபாய் விலை குறைக்கப்படும் என்று அரசு அறிவித்தது.

    ஆனால் எம்.சாண்ட் விலை குறைக்கப்படவில்லை. கல் குவாரிகளுக்கு கேரளாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சட்ட விரோதமாக லாரிகளில் கல் கொண்டு செல்லப்படுகிறது.

    இதன் காரணமாக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.25 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே கல் குவாரிகளை அரசுடமையாக்க வேண்டும்.

    மணல் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டுள்ளது. இது பற்றி அரசுக்கு பல முறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மணல் குவாரிகளை விரைவாக திறந்து விலை உயர்வை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 23-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் மணல் லாரிகள் ஓடாது. லாரிகளை நிறுத்தி வைத்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

    ×