என் மலர்
நீங்கள் தேடியது "Tamil Nadu CM letter to PM"
- 23 மீனவர்களை இலங்கையை சேர்ந்த அமையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு உள்ளனர்.
- இலங்கை அதிகாரிகளிடம் பிரச்சனையை எடுத்து சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கடந்த மே 25ம் தேதி நாகையைச் சேர்ந்த 23 மீனவர்கள் இலங்கையை சேர்ந்த அமையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு உள்ளனர்.
இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களை தடுக்க இலங்கை அதிகாரிகளிடம் பிரச்சனையை எடுத்து சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 101 மீனவர்கள், 12 படகுகளையும் இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
காவிரி நீர் பங்கீடு தொடர்பான கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். #CauveryIssue #PMModi #EdappadiPalaniswami
சென்னை:
காவிரி நீர் பங்கீடு குறித்து முடிவு செய்ய மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் தமிழக அரசு சார்பில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடக அரசு இன்னும் தங்களது பிரதிநிதிகளை நியமிக்கவில்லை. மேலும், நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் குமாரசாமி முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.
இந்நிலையில், காவிரி நீர் பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்த உடனே மேலாண்மை ஆணையத்தை கூட்ட வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மேலும், கடந்த 6 ஆண்டுகளாக உரிய நேரத்தில் கர்நாடகா தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிடவில்லை என அந்த கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.






