என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chudidar"

    • தமிழகத்தில் மாணவர்கள் கடும் சோதனைக்குட்பட்டே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
    • நீட் தேர்வு கட்டுப்பாடால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

    நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.

    இந்த தேர்வில் மாணவ-மாணவிகள் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மேற்சொன்ன படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

    அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது.

    2025-26-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வில் நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் பேர் பங்கேற்றனர்.

    இந்நிலையில், தமிழகத்தில் மாணவர்கள் கடும் சோதனைக்குட்பட்டே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

    குறிப்பாக, மாணவிகளில் துப்பட்டாவை கழற்ற சொல்வது முதல், மூக்குத்தி, காதில் தோடு என மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

    திருப்பூரில் ஒரு மாணவியில் உடையில் நிறைய பொத்தான்கள் இருந்ததாக கூறி அதை அறுத்து எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதனால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    நாம் தமிழர் சட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நீட் மாணவிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுபாடுகளுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தார்.

    அப்போது அவர்," தமிழ்நாட்டு மாணவர்களை மட்டும் குறிவைத்து பாகுபாடு காட்டப்படுகிறது. மூக்குத்தி மூலம் மாணவி எப்படி பிட் கொண்டு செல்ல முடியும்? பட்டன்கள் மூலம் மாணவர்கள் பிட் கொண்டு செல்ல முடியுமா?" என்று கேள்வி எழுப்பினார்.

    நீட் தேர்வு எழுதும் மாணவிகள் அணிந்து வரும் அடைகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பதால், பல்வேறு ஜவுளி கடைகளில் நீட் தேர்வுக்கான ஆடை விற்பனைக்கு வந்துள்ளது.

    தேசிய தேர்வுகள் முகமை எதிர்பார்க்கும் வகையில், பொத்தன்கள் இல்லாத, எந்த வித டிசைன்களும் இல்லாத பிளெயின் நிறத்தில் சுடிதார் டாப்கள் விற்பனைக்கு வந்துள்ளது.

    • பெண் நீதிபதிகளுக்கான 53 ஆண்டு கால ஆடைவிதியில் மாற்றம் செய்ய வேண்டும்.
    • கேரள பெண் நீதிபதிகளின் முறையீட்டை கேரள ஐகோர்ட்டு கவனிக்க உள்ளதாக தெரிகிறது.

    திருவனந்தபுரம் :

    தற்போது பெண் நீதிபதிகள், கோர்ட்டில் சேலை, வெள்ளை கழுத்துப் பட்டை, கருப்பு நிற மேலங்கி (கவுன்) அணிய வேண்டியிருக்கிறது.

    ஆனால் இந்த ஆடைமுறை அசவுகரியமாக இருக்கிறது, அதிலும் குறிப்பாக, தற்போதைய கோடைகாலத்தில், நெரிசல் நிறைந்த கோர்ட்டுகளில் இவ்வாறு இறுக்கமாக ஆடை அணிந்து பல மணி நேரம் அமர்ந்திருப்பது மிகவும் சிரமமாக உள்ளது, அதிலும் பல சமயங்களில் மின் தடை ஏற்படும்போது வியர்த்து வழிய வேண்டியுள்ளது என்பது பல பெண் நீதிபதிகளின் மனக்குறை.

    இந்நிலையில் கேரள கோர்ட்டு பெண் நீதிபதிகள் சுமார் 100 பேர் கேரள ஐகோர்ட்டு பதிவாளரை நாடியுள்ளனர். அவரிடம், பெண் நீதிபதிகளுக்கான 53 ஆண்டு கால ஆடைவிதியில் மாற்றம் செய்ய வேண்டும். கோர்ட்டில் பணியின்போது சுடிதார் அணிய அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

    தெலுங்கானா ஐகோர்ட்டு கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 15-ந் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

    அந்த சுற்றறிக்கையில், பெண் நீதிபதிகள் பணியின்போது வழக்கமான சேலையுடன், சல்வார், சுடிதார், நீளமான பாவாடை, பேண்ட் அணியலாம். அவை வெள்ளை, வெளிர் மஞ்சள், சாம்பல், கருப்பு வண்ணத்திலோ, அவற்றின் கலவையிலோ இருக்கலாம் என தெரிவித்திருந்தது.

    கடந்த 1970-ம் ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்த, நீதிபதிகளுக்கான ஆடைவிதியின்படி, பெண் நீதிபதிகள் மிதமான வண்ணத்திலான பிராந்திய ஆடை, மேலங்கியுடன், வெண்ணிறத்திலான கழுத்துப் பட்டை அணிய வேண்டும். அதேபோல ஆண் நீதிபதிகள், கருப்புநிற 'ஓபன் காலர்' கோட்டு, வெண்ணிற சட்டை, வெள்ளை நிறத்திலான கழுத்துப் பட்டையுடன், மேலங்கி அணியலாம்.

    கேரள பெண் நீதிபதிகளின் முறையீட்டை கேரள ஐகோர்ட்டு கவனிக்க உள்ளதாக தெரிகிறது. அதன்பின்தான், இந்த 53 ஆண்டுகால ஆடைவிதியில் மாற்றம் வருகிறதா என்பது தெரியவரும்.

    ×