என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • நீரில் மூழ்கி ஒரு பெண், 13 வயது சிறுமி உயிரிழந்துள்ளனர்.
    • மீட்பு குழுவினர் மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே நீர்வீழ்ச்சியில் மூழ்கி சிறுமி உள்பட இருவர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் மாயமாகியுள்ளனர்.

    லோனாவாலா பகுதியில் உள்ள புஷி அணை அருகே நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

    நீரில் மூழ்கி ஒரு பெண், 13 வயது சிறுமி உயிரிழந்துள்ளனர். மேலும், 2 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவனும் மாயமாகியுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழு மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும், விபத்தில் சிக்கிய அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

    • 1987 பேட்ச்சைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான சவுனிக் இன்று பொறுப்பேற்பு.
    • மந்த்ராலயாவில் நடைபெற்ற விழாவில் சவுனிக்கிடம் கரீர் பொறுப்பு ஒப்படைப்பு.

    மகாராஷ்டிராவின் தலைமைச் செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி சுஜாதா சவுனிக் இன்று பதவியேற்றார். 64 ஆண்டுகால வரலாற்றில் மகாராஷ்டிராவின் முதல் பெண் தலைமைச் செயலாளர் என்ற பெருமையைப் பெற்றார்.

    தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற நிதின் கரீருக்குப் பிறகு 1987 பேட்ச்சைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான சவுனிக் இன்று பதவியேற்றார்.

    இவர், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ஓய்வு பெறுவதற்கு முன்பு ஒரு வருடம் பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தெற்கு மும்பையில் உள்ள மாநிலச் செயலகமான மந்த்ராலயாவில் நடைபெற்ற விழாவில் சவுனிக்கிடம் கரீர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

    அவர் தலைமைச் செயலாளராக பதவி உயர்த்தப்படுவதற்கு முன்பு, சவுனிக், அவரது கணவர் மனோஜ் சவுனிக் முன்னாள் மாநில தலைமைச் செயலாளரும் ஆவார். இவர், மாநில உள்துறைத் துறையில் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்தார்.

    சுகாதாரம், நிதி, கல்வி, பேரிடர் மேலாண்மை மற்றும் மாவட்டம், மாநிலம் மற்றும் கூட்டாட்சி மட்டங்களில் அமைதி காத்தல் ஆகியவற்றில் சுஜாதா சவுனிக் மூன்று தசாப்தங்களாக பொதுக் கொள்கை மற்றும் நிர்வாக அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

    • போலியான 2 இறப்பு சான்றிதழ்களிலும் டாக்டர் யாதவ் என்பவர் கையெழுத்திட்டதும் தெரிய வந்தது.
    • இந்த மோசடி அம்பலமானதும் குற்றம் சாட்டப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

    இறந்ததாக போலி சான்றிதழ் வாங்கி 1.1 கோடி இன்சூரன்ஸ் பணத்தை பெண் ஒருவர் மோசடி செய்த சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது.

    மும்பையில் 2021 ஆம் ஆண்டு 11 ஆம் தேதி கஞ்சன் ராய் என்பவர் இதய நோயால் மரணமடைந்துள்ளார். கஞ்சன் ராயின் இறப்பு சான்றிதழை சமர்ப்பித்து அவரது மகன் தன்ராஜ் 20.4 லட்சம் இன்சூரன்ஸ் பணத்தை பெற்றுள்ளார்.

    இதே இறப்பு சான்றிதழை பயன்படுத்தி இன்னொரு இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் 25 லட்ச ரூபாயை தன்ராஜ் பெற்றுள்ளார்.

    பின்பு 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி பவித்ரா என்பவர் உயிரிழந்துள்ளார். பவித்ராவின் இறப்பு சான்றிதழை சமர்ப்பித்து அவரது கணவர் ரோகித் 24.2 லட்ச ரூபாயை பெற்றுள்ளார்.

    இந்நிலையில் இந்தாண்டு ஜனவரி 30 ஆம் தேதி இன்சூரன்ஸ் நிறுவனம் ஆடிட்டிங் செய்த போது ஒரே முகவரியில் இரண்டு வெவ்வேறு பெயர்களில் இன்சூரன்ஸ் பெற்றுள்ளதை பார்த்து சந்தேகம் அடைந்தது.

    இதனையடுத்து இன்சூரன்ஸ் நிறுவனம் இது சம்பந்தமாக போலீசில் புகாரளித்தது.

    இந்த வழக்கின் விசாரணையில், 2 தனித்தனி ஆதார் மற்றும் பான் கார்டுகளை பயன்படுத்தி 5 இன்சூரன்ஸ் நிறுவனங்களில் காஞ்சன் ராய் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருப்பது தெரிய வந்தது.

    மேலும், காஞ்சன் ராய், பவித்ரா என்ற பெயரில் சமர்ப்பிக்கப்பட்ட போலியான 2 இறப்பு சான்றிதழ்களிலும் டாக்டர் யாதவ் என்பவர் கையெழுத்திட்டதும் தெரிய வந்தது.

    இந்த மோசடி அம்பலமானதும் குற்றம் சாட்டப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் தலைமறைவாகியுள்ளனர். இந்த மோசடியில் இன்சூரன்ஸ் நிறுவனம், நகராட்சி அதிகாரிகள் உட்பட பலருக்கும் தொடர்பு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் காலில் காயம் ஏற்பட்டது.
    • புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

    மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஷாஹாபூரைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவனின் காலில் ஏற்பட்ட காயத்திற்குப் பதிலாக மருத்துவர்கள் தவறாக அந்தரங்கப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்ததாக அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    பெற்றோரின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று சுகாதார அதிகாரி உறுதியளித்தார். மேலும், விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கூறுகையில், "கடந்த மாதம் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் காலில் காயம் ஏற்பட்டது.

    அவர் ஜூன் 15ம் தேதி அன்று ஷாஹாபூரில் உள்ள துணை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    காயமடைந்த காலுக்குப் பதிலாக மகனின் அந்தரங்கப் பகுதியில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.

    பின்னர், அவர்களது தவறை உணர்ந்த மருத்துவர்கள், காயமடைந்த காலில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்தனர்" என்றனர்.

    மேலும் இதுகுறித்து சஹாப்பூர் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். இது தொடர்பாக இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

    • ராமராஜனின் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இடம்பெற்ற செண்பகமே செண்பகமே பாடல் மூலம் ஆசா போஸ்லேவின் குரல் தமிழகமெங்கும் எதிரொலித்தது.
    • ஆஷா போஸ்லேவின் சுயசரிதை 'ஸ்வரஸ்வாமினி ஆஷா' என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.

    மறைந்த பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் தங்கையும் இந்திய சினிமாவின் மூத்த பாடகியான 90 வயதாகும் ஆஷா போஸ்லே தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பல கிளாசிக் படலக்ளை பாடி ரசிகர்களை கவர்ந்தவர் ஆவார். ராமராஜனின் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இடம்பெற்ற செண்பகமே செண்பகமே பாடல் மூலம் ஆசா போஸ்லேவின் குரல் தமிழகமெங்கும் எதிரொலித்தது. சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற கொஞ்சநேரம் கொஞ்சநேரம் பாடல், ஹே ராம் படத்தில் இடம்பெற்ற நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி என ஆஷா போஸ்லேவின் கிரக்கும் குரலுக்கு உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

    இந்நிலையில் தற்போது ஆஷா போஸ்லேவின் சுயசரிதை 'ஸ்வரஸ்வாமினி ஆஷா' என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. நேற்று [ஜூன் 28] வெள்ளிக்கிழமை மும்பையில் வைத்து நடந்த இந்த புத்தக வெளியீட்டு விழாவில், ஜாக்கி செராப் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள், பின்னணி பாடகர்கள், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் என பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விழாவில் கலந்துகொண்ட பிரபல பின்னணி பாடகர் சோனு நிகாம், விழா மேடையில் வைத்து ஆஷா போஸ்லேவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது கால்களை முத்தமிட்டு தண்ணீரால் கழுவிய நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. தண்ணீரால் ஆஷாவின் கால்களைக் கழுவித் துடைத்த சோனு நிகாம் பின் எழுந்து நின்று ஆஷாவுக்கு தலைவணங்கினார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சோனு நிகாம் தமிழில் அஜித்தின் கிரீடம் படத்தில் இடம்பெற்ற விழியினில் உன் விழியினில், ஆர்யாவின் மதராசபட்டினம் படத்தில் இடம்பெற்ற ஆருயிரே, கார்த்தியின் சகுனி படத்தில் இடம்பெற்ற மனசெல்லாம் மழையே உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை பாடுயுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடலில் சீற்றம் அதிகமாக காணப்பட்டது.
    • போலீசார் தங்களை பற்றி கவலைப்படாமல் கடலில் குதித்து, நீரில் மூழ்கிய ஸ்வாதியை மீட்டனர்.

    மும்பையில் கடலில் மூழ்கிய பெண்ணை காப்பாற்றுவதற்காக 2 போலீஸ்காரர்கள் கடலில் குதித்து அந்த பெண்ணை மீட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    மும்பை மரைன் டிரைவ் கடற்கரை பகுதியில் ஸ்வாதி என்ற பெண் நடந்து சென்ற போது அவரது கைப்பை கடலில் தவறி விழுந்துள்ளது. அதனை எடுக்க முயன்ற போது அவர் தண்ணீருக்குள் மூழ்கினார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீஸ்காரர்களான கிரண் தாக்கரே, அன்மோல் தஹிபேல் ஆகியோர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது கடலில் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. எனினும் போலீசார் தங்களை பற்றி கவலைப்படாமல் கடலில் குதித்து, நீரில் மூழ்கிய ஸ்வாதியை மீட்டனர். பின்னர் ஸ்வாதியை மேல் சிகிச்சைக்காக மொபைல் வேன் மூலம் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஸ்வாதியை போலீசார் மீட்ட காட்சிகளை மும்பை போலீசார் தங்களது வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ 7.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 43 ஆயிரத்திற்கும் மேலான லைக்குகளையும் பெற்றுள்ளது. பயனர்கள் பலரும் மும்பை போலீசாரை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.


    • ஐஸ் கிரீம் உற்பத்தியாளரின் தயாரிப்பு ஆலைக்கு சீல் வைத்து உரிமத்தை ரத்து செய்தனர்.
    • விரல் யாருடையது என்ற கேள்வி பெரும் மர்மமாகவே இருந்து வந்த நிலையில் தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது.

    மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் இம்மாதம் 14-ந்தேதி ஆன்லைனில் யுமோ பிராண்டு ஐஸ் கிரீமை ஆர்டர் செய்திருந்தார். ஆர்டர் செய்த ஐஸ் கிரீமை சாப்பிட துவங்கியதும் அதில் மனித விரல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதை மருத்துவரான அவரது சகோதரர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிடவே விஷயம் பூதாகரமாக மாறியது. இந்த சம்பவம் தொடர்பாக புனேவை சேர்ந்த சம்பந்தப்பட்ட ஐஸ் கிரீம் நிறுவனத்தின் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

    ஐஸ் கிரீம் உற்பத்தியாளரின் தயாரிப்பு ஆலைக்கு சீல் வைத்து உரிமத்தை ரத்து செய்தனர். ஐஸ் கிரீமில் கிடந்த மனித விரல் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த விரல் யாருடையது என்ற கேள்வி பெரும் மர்மமாகவே இருந்து வந்த நிலையில் தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது.

    ஐஸ் கிரீம் ஆலையில் வேலை பார்த்து வந்த ஓம்கர் என்பவரின் விரல் தான் அது என டி.என்.ஏ. பரிசோதனையில் தெரியவந்துள்ளது. ஐஸ் கிரீம் தயாரிக்கும் போது அவரின் நடுவிரல் துண்டாகி உள்ளே விழுந்ததாக கூறப்படுகிறது.

    முன்னதாக, அந்த நபரின் டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 816 மில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்து 653.11 பில்லியன் டாலராக உள்ளது.
    • கடந்த வாரம் 2.922 பில்லியன் அமெரிக்க டாலர் குறைந்து 652.895 பில்லியன் டாலராக இருந்தது.

    ஜூன் மாதம் 21-ந்தேதி வார முடிவின்படி இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 816 மில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்து 653.11 பில்லியன் டாலராக உள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த வாரம் 14-ந்தேதி வார முடிவின்படி இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 2.922 பில்லியன் அமெரிக்க டாலர் குறைந்து 652.895 பில்லியன் டாலராக இருந்தது.

    தங்கம் கையிருப்பு 988 மில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்து 56.956 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. கடந்த வாரம் தங்கம் கையிருப்பு 1.015 பில்லியன் அமெரிக்க டாலர் குறைந்து 55.967 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

    எஸ்.டி.ஆர்.எஸ். (Special Drawing Rights) 57 மில்லியன் அமெரிக்க டாலர் குறைந்து 18.049 பில்லியன் டாலராக உள்ளது. கடந்த வாரமும் குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    IMF உடனான இந்தியாவின் கையிருப்பு 9 மில்லியன் அமெரிக்க டாலர் குறைந்து 4.572 பில்லியன் டாலராக உள்ளது. கடந்த வாரம் IMF உடனான இந்தியாவின் கையிருப்பு 245 மில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்து 4.581 பில்லியன் டாலராக இருந்தது என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

    • பெட்ரோல் விலை லிட்டருக்கு 65 காசும், டீசல் விலை லிட்டருக்கு 2.60 ரூபாயும் குறைய இருக்கிறது.
    • ஜூலை 1-ந்தேதி முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வரும்.

    மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்தில் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான அரசு 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது. துணை முதல்வரும், நிதி மந்திரியுமான அஜித் பவார் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    அப்போது மும்பை பெருநகர் மாநகராட்சி பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி குறைக்கப்படும் என அறிவித்தார்.

    இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 65 காசும், டீசல் விலை லிட்டருக்கு 2.60 ரூபாயும் குறைய இருக்கிறது. இதனால் அரசுக்கு 200 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என அஜித் பவார் தெரிவித்தார்.

    இது தொடர்பாக முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேயிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவர் கூறும்போது "பட்ஜெட்டில் வாட் வாரி குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் பட்ஜெட் நிறைவேற்றப்பட்ட பின், ஜூலை 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும்" என்றார்.

    • 21 முதல் 60 வயதுடைய தகுதியுடைய பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் வழங்கப்படும்.
    • ஐந்து பேர் கொண்ட குடும்பத்தினருக்கு வருடத்திற்கு 3 சமையல் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற அக்டோபர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் சட்டமன்றத்தில் துணை முதல்வரான அஜித் பவார் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு இலவச திட்டங்களை அறிவித்தார்.

    21 முதல் 60 வயதுடைய தகுதியுடைய பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் வழங்கப்படும். ஐந்து பேர் கொண்ட குடும்பத்தினருக்கு வருடத்திற்கு 3 சமையல் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.

    மின்சார கட்டணம் செலுத்தாத 44 லட்சம் விவசாயிகள் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். இவை அனைத்தும் ஜூலை மாதத்தில் இருந்து அமலுக்கு வரும் வர இருக்கிறது. இந்த திட்டங்களுக்காக பட்ஜெட்டில் 46 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்தள்ளார்.

    • பூனைக்குட்டியை அலுவலகத்திற்கு கொண்டு வந்த போது அதற்கு ஆரத்தி எடுத்தனர்.
    • வீடியோ காட்சிகள் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டது.

    வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு பெயர் வைத்து அழைப்பது வழக்கம். ஆனால் புனேவை சேர்ந்த ஒரு நிறுவன பணியாளர்கள் தாங்கள் ஆசையாக வளர்க்கும் பூனைக்குட்டிக்கு பெயர் சூட்டு விழா நடத்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    புனேவில் நரியால் என்ற பெயரில் இயங்கி வரும் அழகு சாதன நிறுவன ஊழியர்கள் தங்கள் அலுவலகத்தில் ஒரு பூனைக்குட்டியை ஆசையாக வளர்க்கின்றனர். அந்த பூனைக்குட்டிக்கு பெயர் சூட்டு விழா நடத்த முடிவு செய்து, அதனை விமர்சையாக நடத்தி உள்ளனர்.

    அதன்படி பூனைக்குட்டியை அலுவலகத்திற்கு கொண்டு வந்த போது அதற்கு ஆரத்தி எடுத்தனர். பின்னர் அதன் நெற்றியில் திலகம் இட்டு சாமந்தி பூ இதழ்கள் பொழிந்து வரவேற்றனர். அதோடு பூனைக்குட்டிக்காக சாக்லேட் கேக் வாங்கி அதனை வெட்டி கொண்டாடினர். விழாவின் போது பூனைக்குட்டிக்கு 'கோகாயா' என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

    இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டது. இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் நிறுவன ஊழியர்களை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.


    • ஜூலை 12-ந்தேதி முதல் 3 நாட்கள் பிரமாண்டமாக நடக்கிறது.
    • திருமண ஏற்பாடுகளை முகேஷ் அம்பானி-நீதா செய்து வருகிறார்கள்.

    பிரபல தொழில் அதிபரும் உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி-நீதா தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச் சண்ட் திருமணம்.

    மும்பையில் வருகிற ஜூலை 12-ந்தேதி முதல் 3 நாட்கள் பிரமாண்டமாக நடக்கிறது. திருமண ஏற்பாடுகளை முகேஷ் அம்பானி-நீதா செய்து வருகிறார்கள்.

    இதற்கிடையே நீதாஅம்பானி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றார். அங்கு தனது மகன் திருமண அழைப்பிதழை சாமியின் பாதத்தில் வைத்து தரிசனம் செய்தார்.

    நீதா அம்பானி, வாரணாசியில் உள்ள ஒரு தெருவுக்குள் நடந்து சென்று பட்டுச்சேலையினை வாங்கினார். அவர் பட்டுச் சேலைகளை பார்த்து கடை ஊழியர்களிடம் விசாரிக்கும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் லக்கா பூட்டி பனாரசி ரக சேலைகளை வாங்கினார்.

    ×