என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • அங்கன்வாடியில் இருந்து அந்த பகுதியில் வசிக்கும் குழந்தைகளின் வீடுகளுக்கு உணவு பொருள் பாக்கெட்டுகள் வினியோகம் செய்யப்பட்டது.
    • குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    மும்பை:

    மகாராஷ்டிரத்தில் 6 மாதம் முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அங்கன்வாடிகள் மூலம் மதிய உணவு மற்றும் கொண்டை கடலை, பச்சை பயறு, கோதுமை போன்ற உணவுப்பொருள்கள் வழங்கப்படுகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன் சாங்கிலி மாவட்டம் பாலஸ் பகுதியில் உள்ள அங்கன்வாடியில் இருந்து அந்த பகுதியில் வசிக்கும் குழந்தைகளின் வீடுகளுக்கு உணவு பொருள் பாக்கெட்டுகள் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது, ஒரு குழந்தைக்கு வழங்கப்பட்ட உணவுப்பொருள் பாக்கெட்டை திறந்தபோது, அதில் சிறிய அளவிலான பாம்பு செத்து கிடந்ததாக தெரிகிறது.

    இதைப்பார்த்து குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உணவுப்பொருளில் பாம்பு கிடப்பதை செல்போனில் படம் பிடித்தனர். மேலும் அது குறித்து அங்கன்வாடி பணியாளருக்கு தகவல் கொடுத்தனர்.

    அங்கன்வாடி பணியாளர் உணவுப்பொருளில் பாம்பு இருக்கும் படத்தை மாவட்ட அங்கன்வாடி பணியாளர்கள் வாட்ஸ்-அப் குழுவில் பகிர்ந்தார். இதையடுத்து இந்த சம்பவம் அம்பலமானது.

    இந்த பிரச்சினை குறித்து கடந்த 2-ம் தேதி நடந்த சாங்கிலி ஜில்லா பரிஷத் துணை தலைமை நிர்வாக அதிகாரி கூட்டத்தில் பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கன்வாடி மையங்களுக்கு வினியோகம் செய்யப்பட்ட உணவுப்பொருள் இருந்த குடோன் உடனடியாக 'சீல்' வைக்கப்பட்டது.

    • மகிழ்ச்சியான தருணங்களும், என்றும் மறக்கமுடியாத நினைவுகளை ரசிகர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் நேற்றைய தினம் வழங்கியுள்ளது.
    • ரோகித் சர்மாவுடன் அணி வீரர்கள் அனைவரும் நடனமாடினர்.

     டி 20 உலகக்கோப்பை கொண்டாட்டங்கள் நேற்று மும்பையில் களைகட்டியது. வான்கடே மைதானத்தில் வைத்து இந்திய வீரர்களும் ரசிகர்களும் இந்த வெற்றிடயை கொண்டாடித் தீர்த்தனர். மகிழ்ச்சியும் உணர்வுபூர்வமான தருணங்களும் மைதானத்தை நிறைத்தது.

    மகிழ்ச்சியான தருணங்களையும் என்றும் மறக்கமுடியாத நினைவுகளை ரசிகர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் நேற்றைய தினம் வழங்கியுள்ளது. டிஜே பாடல்கள் மைதானத்தை அதிரவைத்த நிலையில் இந்திய வீரர்கள் அவற்றுக்கு வெற்றிக் களியாட்டம் போட்டனர்.

     மைதானத்தில்  நடந்த ரெயின் டான்ஸ் பார்ட்டியில் ஷாருக் கான் படத்தின் பிரபல பாடலான சக் தே இந்தியா பாடல் பின்னணியில் ஒலிக்க அதற்கு ரோகித் சர்மாவுடன் அணி வீரர்கள் அனைவரும் நடனமாடினர். ரசிகர்களும் அவர்களின் உற்சாக மனநிலை தொற்றிகொள்ளவே வான்கடே மைத்தனமே மகிழ்ச்சியில் திளைத்தது. பாடல்களுக்கு இந்திய வீரர்கள் நடனமாடிய வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

    • இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஜூலை 6-ம் தேதி தொடங்குகிறது.
    • இந்திய அணி மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து ஜிம்பாப்வே புறப்பட்டுச் சென்றது.

    மும்பை:

    இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க ஜிம்பாப்வே செல்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஜூலை 6-ம் தேதி தொடங்குகிறது.

    இதற்கிடையே, ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய இளம் அணி, மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து ஜிம்பாப்வேயில் இருக்கும் ஹராரே நகருக்கு புறப்பட்டுச் சென்றது.

    அப்போது, மும்பை விமான நிலையத்தில் பாஸ்போர்ட் செக்கிங் செய்யும்போது, எனது பாஸ்போர்ட்டை காணவில்லை என இந்திய வீரர் ரியான் பராக் கூறியுள்ளார். அவரது பையில் நடத்தப்பட்ட சோதனையில் பாஸ்போர்ட் கிடைத்ததால் பராக் ஹராரேவுக்கு பறந்தார்.

    இதுதொடர்பாக, பி.சி.சி.ஐ. இணையதளத்திற்கு பேட்டி அளித்த பராக், மும்பை விமான நிலையத்தில் பாஸ்போர்ட் செக்கிங்கில் எனது பாஸ்போர்ட்டை காணவில்லை. நல்லவேளை, அதே பையில் தான் இருந்திருக்கிறது. இது கவனக்குறைவு கிடையாது. இந்திய அணியில் அறிமுகம் ஆவதற்காக ஆர்வமாக உள்ளேன். இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட செய்தி அறிந்தபின் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மகிழ்ச்சியில் எனது பாஸ்போர்ட், செல்போன் உள்ளிட்ட பொருட்களை எங்கு வைத்தேன் என்பதையே மறந்து விட்டேன். இந்திய அணிக்கு ஆடப்போகிறோம் என்ற ஆர்வத்தில் இந்த தவறு நடந்தது என தெரிவித்தார்.

    • ரசிகரின் இந்த செயலுக்கு பலர் தங்களுடைய கருத்துகள் வழியாக வெறுப்பை உமிழ்ந்து வருகின்றனர்.
    • ‘இதற்குதான் கல்வி மிகவும் முக்கியமானது” உள்ளிட்டவற்றை பதிவிட்டு பெண் பிரபலத்தின் ரசிகரின் செயலை விமர்சித்து வருகிறார்கள்.

    டெல்லியில் தள்ளுவண்டியில் 'வடாபாவ்' விற்று வந்தவர் சந்திரிகா. யூடியூபர்கள் இவரையும் அவருடைய செய்முறையை தங்களுடைய வலைத்தளத்தில் வெளியிட்டு அவரை பிரபலமாக்கினர். இதனால் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாசிலும் அவர் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். ஒருபக்கம் புகழ் உச்சியை அடைந்தாலும் அவரின் நடவடிக்கை காரணமாக பலரால் வெறுக்கப்பட்டும் வருகிறார்.

    இந்தநிலையில் சந்திரிகாவின் புகைப்படத்தை ரசிகர் ஒருவர் தனது முன்னங்கையில் டாட்டூவாக குத்தி உள்ளார். மேலும் பிக்பாஸ் வெற்றியாளர் எனவும் குத்திக்கொண்டு உள்ளார்.

    இதுதொடர்பான வீடியோவை அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். ஆனால் ரசிகரின் இந்த செயலுக்கு பலர் தங்களுடைய கருத்துகள் வழியாக வெறுப்பை உமிழ்ந்து வருகின்றனர்.

    'இதற்குதான் கல்வி மிகவும் முக்கியமானது" உள்ளிட்டவற்றை பதிவிட்டு பெண் பிரபலத்தின் ரசிகரின் செயலை விமர்சித்து வருகிறார்கள்.


    • ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் ஜூலை 12-ம் தேதி நடைபெற உள்ளது.
    • மகாராஷ்டிராவில் ஏழைக்குடும்பங்களைச் சேர்ந்த 50 ஜோடிக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டது.

    மும்பை:

    ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி–நீடா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண கொண்டாட்டங்கள் கடந்த 3 மாதமாக நடந்து வருகிறது.

    இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் 50-க்கும் மேற்பட்ட ஏழை ஜோடிகளுக்கு அவர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

    மும்பையில் உள்ள ரிலையன்ஸ் கார்ப்பரேட் பூங்காவில் நடைபெற்ற இந்த விழாவில், மணமக்கள் குடும்பத்தைச் சேர்ந்த 800க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். மணமக்களுக்கு மங்கள சூத்திரம், திருமண மோதிரங்கள், மூக்குத்தி உள்ளிட்ட தங்க ஆபரணங்கள் வழங்கப்பட்டன.

    மணமக்களுக்கு தலா ரூ.1.01 லட்சம் சீதனமாகவும், ஒரு ஆண்டுக்குத் தேவையான மளிகை பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள், பல்வேறு வகையான 36 அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பாத்திரங்கள், கேஸ் அடுப்பு, மிக்சி மற்றும் மின்விசிறி, அத்துடன் ஒரு மெத்தை மற்றும் தலையணைகள் உள்ளிட்டவை முகேஷ் அம்பானி குடும்பத்தினரால் பரிசாக வழங்கப்பட்டது.

    • 17 வயது சிறுவன் மதுபோதையில் ஓட்டி வந்த சொகுசு கார் மோதியதில் இரண்டு ஐ.டி. ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • இந்த விபத்தில் அந்த சிறுவனை காப்பாற்ற மறைமுக வேலைகள் நடைபெற்றன.

    மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் 17 வயது சிறுவன் மதுபோதையில் ஓட்டி வந்த சொகுசு கார் மோதியதில் இரண்டு ஐ.டி. ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து வழக்கில் சிறுவன் குற்றம் சாட்டப்பட்டவர், அவர் ஜாமினில் வெளிவந்திருந்தார். இச்சம்பவம் அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

    இந்த விபத்தில் அந்த சிறுவனை காப்பாற்ற மறைமுக வேலைகள் நடைபெற்றன. ஆனால் பொதுமக்கள், ஊடகங்கள் கடுமையாக எதிர்த்ததன் விளைவாக அந்த சிறுவனின் ஜாமின் ரத்து செய்யப்பட்டு சிறார் முகாமில் அடைக்கப்பட்டுள்ளான். அவரது தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காவல் அதிகாரிகள் இருவர் கடமை தவறியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் அந்த சிறுவனின் தாத்தா கைது செய்யப்பட்டார். கார் டிரைவர்தான் இந்த விபத்தை ஏற்படுத்தினார் என இந்த வழக்கை திசைதிருப்ப அந்த சிறுவனின் குடும்பத்தினர் சதி செய்துள்ளனர். இது தொடர்பாக டிரைவரின் குடும்பத்தினர் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

    இதனையடுத்து புனே சொகுசு கார் விபத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை கண்காணிப்பு இல்லத்தில் தொடர்வது சட்டவிரோதமானது என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த சிறுவனின் காவலை அவரது தந்தை வழி அத்தையிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், புனே சொகுசு கார் விபத்தில் முக்கிய குற்றம் சாட்டப்பட்ட சிறுவனின் தந்தை மற்றும் தாத்தா இருவருக்கும் புனே நீதிமன்றம் ஜாமினில் வழங்கியுள்ளது.

    • தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக, மாதவிடாய் சுழற்சியை தவறவிட்டபோது அதிக கவனம் செலுத்தவில்லை.
    • அதனால் தான் கர்ப்பம் தரித்ததை காலம் கடந்த நிலையில் தெரிந்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஏற்கனவே நான்கு வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் 28 வயது பெண் ஒருவர், தன்னுடைய கணவருடன் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து கேட்டுள்ள நிலையில், நண்பவருடன் நெருங்கி பழகி கர்ப்பமாகிய நிலையில், அது தேவையற்ற கர்ப்பம், அதை கலைக்க அனுமதி வழங்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

    மனுதாரருக்கு தேவையற்ற கர்ப்பம் ஏற்பட்டால், மன மற்றும் உடல் உபாதைகள் மற்றும் அதிர்ச்சிகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் கர்ப்பத்தை கலைக்க அனுமதி வழங்க வேண்டும் என அந்த பெண் மனுவில் தெரிவித்துள்ளார்.

    அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட மும்பை உயர்நீதிமன்றம், மருத்துவக்குழு அந்த பெண்ணை சோதனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த வாரம் உத்தரவிட்டது.

    அதன்படி மெடிக்கல் குழு அறிக்கை தாக்கல் செய்தது. அப்போது கரு கலைக்கப்படுவதற்கு ஆதரவாக அறிக்கை இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், அந்த பெண்ணின் வழக்கறிஞரிடம் மருத்துவக்குழுவின் அறிக்கையை பார்க்கும்படி அந்த பெண்ணிடம் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டது. மேலும் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.

    மெடிக்கல் குழு கருவை கலைப்பதற்கான வேண்டுகோளை மறுத்துள்ளது. கரு கலைப்பிற்கு பெண் உடற்தகுதியாக இல்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    கருக்கலைப்பு நடைமுறை மூலம் அந்த பெண் ஆபத்தான் முடிவை எடுக்க வேண்டாம் என ஆலோசனை வழங்கவும் வழக்கறிஞரிடம் நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

    பெண் கருவுற்று 24 வாரங்கள் தாண்டினால், நீதிமன்றத்தின் உத்தரவின்படிதான் கருவை கலைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    அந்த பெண் தனது மனுவில் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக, மாதவிடாய் சுழற்சியை தவறவிட்டபோது அதிக கவனம் செலுத்தவில்லை என்றும், அதனால் தான் கர்ப்பம் தரித்ததை காலம் கடந்த நிலையில் தெரிந்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

    • கடன்களை அடைக்காமல் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றார்
    • கடந்த வாரம் விஜய் மல்லையா மகனுக்கு லண்டனில் வைத்து ஆடம்பரமாக பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்து முடிந்தது.

    இந்தியாவின் பிரபல தொழிலாலதிபரும் கிங்பிஷர் நிறுவன உரிமையாளருமான விஜய் மல்லையா,  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் வாங்கிய ரூ.180 கோடி கடன் மற்றும் தனது நிறுவனத்தின் மூலம் வாங்கிய பல்வேறு கடன்களை அடைக்காமல் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

     

    இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசித்து வரும் விஜய் மல்லையாவை நாடு கடத்தி இந்தியாவுக்கு அழைத்து வர அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணானது. விஜய் மல்லையா தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

     

    அவர் மீதான வழக்கு இதுநாள்வரை விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் அவரம்மீது சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. எனவே தற்போது மும்பையிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விஜய் மல்லையாவுக்கு ஜாமினில் வெளி வர முடியாத வாரண்ட் பிறப்பித்துள்ளது.

    இதற்கு முன்னரும் பல முறை விஜய் மல்லையாவுக்கு ஜாமினில் வெளி வர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் கடந்த வாரம் விஜய் மல்லையா மகனுக்கு லண்டனில் வைத்து ஆடம்பரமாக பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்து முடிந்தது.

     

    • ஸ்வப்னில் தாவ்டே என்ற இளைஞர் தனது ஜிம்மில் இருந்த 32 பேர்களுடன் சேர்ந்து இந்த நீர்வீழ்ச்சிக்கு குளிக்க வந்துள்ளார்.
    • 2 நாட்களாக இளைஞரை தேடியும் அவரது உடல் இன்னமும் கிடைக்கவில்லை

    இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் வடமாநிலங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் புனேவில் உள்ள பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தம்ஹினி காட் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் குதித்து நீச்சல் அடிக்கும் போது அடித்து செல்லப்பட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஸ்வப்னில் தாவ்டே என்ற இளைஞர் தனது ஜிம்மில் இருந்த 32 பேர்களுடன் சேர்ந்து இந்த நீர்வீழ்ச்சிக்கு குளிக்க வந்துள்ளார். வந்த இடத்தில் நீர்வீழ்ச்சியில் அடித்து செல்லப்பட்டு இளைஞர் காணாமல் போயுள்ளார்.

    2 நாட்களாக இளைஞரை தேடியும் அவரது உடல் இன்னமும் கிடைக்கவில்லை என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்தை அடுத்து, மழைக்காலங்களில் காடுகள் மலைகளுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று புனே வனத்துறை அதிகாரி துஷார் சவான் தெரிவித்துள்ளார்.

    • ஆனந்த் அம்பானி அணிந்திருந்த கைக்கடிகாரம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
    • ஆனந்த் அம்பானியிடம் உலக அளவில் பிரபலமான நிறுவனங்களின் அரிய கைக்கடிகாரங்கள் ஏராளமாக உள்ளது.

    மும்பை:

    ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவரும், உலக கோடீஸ்வரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் இளையமகன் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணம் வருகிற 12-ந்தேதி மிகவும் பிரமாண்ட முறையில் நடைபெற உள்ளது.

    இந்த திருமண விழா 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிலையில் ஆனந்த் அம்பானி நேற்று மகாராஷ்டிரா மாநிலம் நெரல் பகுதியில் உள்ள கிருஷ்ணகாளி கோவிலுக்கு சென்றார்.

    திருமணத்திற்கு முன் கடவுள் ஆசீர்வாதத்திற்காக கோவிலில் தரிசனம் செய்த அவர் ஹவானி விழா நடத்தினார். அப்போது ஆனந்த் அம்பானி அணிந்திருந்த கைக்கடிகாரம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    ஆனந்த் அம்பானியிடம் உலக அளவில் பிரபலமான நிறுவனங்களின் அரிய கைக்கடிகாரங்கள் ஏராளமாக உள்ளது. அதில் ஒன்றான ரிச்சர்ட் மில்லே கைக்கடிகாரத்தை அவர் அணிந்திருந்தார். இந்த கைக்கடிகாரத்தின் விலை ரூ.6.91 கோடி என கூறப்படுகிறது.

    இந்த வகையில் 18 கைக்கடிகாரங்கள் மட்டுமே இதுவரை தயாரிக்கப்பட்ட நிலையில் அதில் ஒன்றை ஆனந்த் அம்பானி அணிந்திருந்தார். ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் குஜராத் ஜாம்நகரில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற போது ஆனந்த் அம்பானி உலகில் ஒரு சிலரிடம் மட்டுமே இருக்கும் ரூ.18 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரத்தை அணிந்திருந்தார்.

    இந்த கைக்கடிகாரத்தை பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் பார்த்து திகைத்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • மராட்டியத்தில் ஆட்சி மாற்றம் தேவைப்படுகிறது.
    • சிவசேனா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணியாகப் போட்டியிடும்.

    மும்பை:

    மராட்டியத்தில் 2019 பேரவைத் தோ்தலில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தது. ஆனால், முதல்-மந்திரி பதவியைத் தர மறுத்ததால் பா.ஜனதாவுடனான கூட்டணியை முறித்த சிவசேனா, எதிா்க்கட்சிகளாக இருந்த தேசியவாத காங்கிரஸ்-காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. சிவசேனா தலைவா் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆனார்.

    ஆனால், 2022-ம் ஆண்டு சிவசேனா மூத்த தலைவா் ஏக்நாத்ஷிண்டே கட்சியை உடைத்து, பா.ஜனதாவுடன் கைகோர்த்தாா். இதனால், உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவியை இழந்தாா். ஷிண்டே புதிய முதல்- மந்திரி ஆனார்.

    பா.ஜனதாவின் தேவேந்திரபட்னாவிஸ் துணை முதல்-மந்திரி ஆனார். இதன்பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்த சரத்பவாரின் நெருங்கிய உறவினா் அஜித்பவாரும் ஆளும் கூட்டணியில் இணைந்து துணை முதல்-மந்திரி பதவியைப் பெற்றாா்.

    சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்றத் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி மொத்தமுள்ள 48 இடங்களில், 30 தொகுதிகளில் வென்றது. பாராளுமன்றத் தோ்தலில் பா.ஜனதா தனிப்பெரும்பான்மை பெற முடியாமல் போனதற்கு மராட்டியத்தில் ஏற்பட்ட தோல்வியும் முக்கியக் காரணமாக இருந்தது.

    இந்த நிலையில், சட்டசபை தோ்தலில் எதிா்க்கட்சிகளின் கூட்டணி ஆளும் கூட்டணிக்கு கடும் சவால் அளிக்க இருக்கிறது.

    இந்த நிலையில் புனேயில் நிருபர்களுக்கு பேட்டியளித்த சரத்பவாா் கூறியதாவது:-

    மராட்டியத்தில் ஆட்சி மாற்றம் தேவைப்படுகிறது. அதை மக்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டியது எதிா்க்கட்சிகள் கூட்டணியின் கடமையாகும். எனவே, சட்டசபைத் தோ்தலில் (சரத்பவாா் தலைமை) தேசியவாத காங்கிரஸ், (உத்தவ்தாக்கரே தலைமை) சிவசேனா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணியாகப் போட்டியிடும்.

    தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை இதுவரை தொடங்கப்படவில்லை. எனினும், விரைவில் இது தொடா்பாக கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடைபெறும். பாராளுமன்றத் தோ்தலில் எங்கள் கூட்டணிக்கு மக்கள் நல்ல வரவேற்பை அளித்தாா்கள்.

    இடதுசாரிகள், பி.டபிள்யூ.பி. கட்சி ஆகியவையும் எங்கள் கூட்டணியில் உள்ளன. பாராளுமன்றத் தோ்தலில் அக்கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்க முடியவில்லை. எனினும், சட்ட சபைத் தோ்தலில் அவா்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிப்பது எங்கள் கடமை என்றாா்.

    பெண்களுக்கு மாதம் ரூ.1,500 நிதியுதவி, ஆண்டுக்கு மூன்று எரிவாயு சிலிண்டா் இலவசம் உள்ளிட்ட பல்வேறு கவா்ச்சிகரமான வாக்குறுதிகளை மராட்டியத்தில் ஆளும் கூட்டணி இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, 'இந்த அறிவிப்புகள் எதற்காக என்பது அனைவருக்கும் தெரியும்.

    சில நாட்களுக்கு வேண்டுமானால் இதை வைத்து பரபரப்பாகப் பேச முடியும். கையில் பணம் இல்லாமல் சந்தைக்கு பொருள் வாங்கச் செல்வதுபோல உள்ளது ஆளும் கட்சியின் நிலை.

    இவ்வாறு சரத்பவாா் கூறினார்.

    • நீரில் மூழ்கி ஒரு பெண், 13 வயது சிறுமி உயிரிழந்துள்ளனர்.
    • மீட்பு குழுவினர் மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே நீர்வீழ்ச்சியில் மூழ்கி சிறுமி உள்பட இருவர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் மாயமாகியுள்ளனர்.

    லோனாவாலா பகுதியில் உள்ள புஷி அணை அருகே நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

    நீரில் மூழ்கி ஒரு பெண், 13 வயது சிறுமி உயிரிழந்துள்ளனர். மேலும், 2 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவனும் மாயமாகியுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழு மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும், விபத்தில் சிக்கிய அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

    ×