என் மலர்tooltip icon

    இந்தியா

    கடும் சரிவை சந்தித்த சென்செக்ஸ், நிஃப்டி

    • நேற்றைவிட இன்று 692.89 புள்ளிகள் குறைந்து 78,956.03 வர்த்தகம் நிறைவடைந்தது.
    • 208 புள்ளிகள் குறைந்து நிஃப்டி 24139 புள்ளிகளில் நிறைவடைந்தது. இது 0.85 சதவீதம் குறைவாகும்.

    அதானி குழுமம்- செபி தலைவர் குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கையின் எதிரொலியாக மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்), இந்திய பங்குச் சந்தை (நிஃப்டி) நேற்று கடும் சரிவை சந்திக்கும் என வல்லுனர்கள் அச்சம் தெரிவித்தினர்.

    ஆனால் நேற்று காலை சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை வர்த்தகம் பின்னர் உயர்ந்து காணப்பட்டது. இறுதியாக மிகப்பெரிய அளவில் இல்லாமல் சற்று சரிவுடன் முடிவடைந்தது.

    ஆனால் இன்று இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸ் சுமார் 700 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் நிறைவடைந்தது. இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 208 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது.

    மும்பை பங்குச் சந்தை நேற்று சென்செக்ஸ் 79,648.92 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சுமார் சென்செக்ஸ் புள்ளிகள் குறைந்து 79,552.51 என்ற அளவில் வர்த்தகம் தொடங்கியது.

    அதிகபட்சமாக 79,692.55 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. குறைந்தபட்சமாக 78,889.38 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. நேற்றைவிட இன்று 692.89 புள்ளிகள் குறைந்து 78,956.03 வர்த்தகம் நிறைவடைந்தது. இது சுமார் 0.87 சதவீதம் குறைவாகும்.

    இந்திய பங்குச் சந்தை நி.ஃப்டி நேற்று 24,347 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 5 புள்ளிகள் குறைந்த 24,342.35 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. அதிகபட்சமாக நிஃப்டி 24,539.95 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக நிஃப்டி 24116.50 புள்ளிகளிலும் வர்த்தகமானது.

    இறுதியாக 208 புள்ளிகள் குறைந்து நிஃப்டி 24139 புள்ளிகளில் நிறைவடைந்தது. இது 0.85 சதவீதம் குறைவாகும்.

    இன்று ஹெச்.டி.எஃப்.சி. வங்கி பங்கு 3.26 சதவீதம் (54.20) குறைந்து 1,605.90 ரூபாயாக உள்ளது. டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டாடா மோட்டார்ஸ், பவர் கிரிட், ஜேஎஸ்எடபிள்யூ ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் சரிவை சந்தித்தன.

    டைட்டன், ஹெச்.சி.எல். டெக், நெஸ்லே, சன் பார்மா, ரிலையன்ஸ், மஹிந்த்ரா அண்டு மஹிந்திரா நிறுவன பங்குகள் உயர்ந்து காணப்பட்டது.

    Next Story
    ×