என் மலர்
டெல்லி
- தசரா விழாவுக்கு சென்றுவிட்டு தனது சகோதரன் ஹிமான்சுவுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
- ஹிமான்சுவுக்கு கழுத்திலும், தொடையிலும் காயம் ஏற்பட்டுள்ளது.
நல்லது சொல்பவர்களை கூட எதிரியாக பார்க்கும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு உதாரணமாக தலைநகர் டெல்லியில் நடந்த ஒரு கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் பிரதாப் நகரை சேர்ந்த 22 வயது இளைஞன் அங்கூர், கடந்த சனிக்கிழமை இரவு தசரா விழாவுக்கு சென்றுவிட்டு தனது சகோதரன் ஹிமான்சுவுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
சபோலி சாலை அருகே வந்தபோது அந்த வழியாக பைக்கில் இரண்டு பேரை பின்னால் ஏற்றிக்கொண்டு வந்த பைக் ஓட்டுநரை பார்த்து பத்திரமாக ஓட்டிச் செல்லும்படி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்களில் ஒருவன் ஹிமான்சுவையும், அங்கூரையும் தான் வைத்திருந்த கத்தியால் தாக்கியுள்ளான். அதன்பின் அவர்கள் மூவரும் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர்.
தாக்குதலில் ஹிமான்சுவுக்கு கழுத்திலும், தொடையிலும் காயம் ஏற்பட்டுள்ளது. அங்கூரின் நிலை அதைவிட மோசமான நிலையில் அங்கிருந்து அருகிலிருந்த மருத்துவமனைக்கு அங்கூரை ஹிமான்சு அழைத்துச் சென்றார். ஆனால் அங்கூர் ஏற்கவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
உயிரிழந்த அங்கூரின் மார்பு, வயிறு மற்றும் தொடையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் அந்த மூவரின் ஒருவனை கைது செய்தனர். ஹிமான்சுவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை பதவிக்காலம் நவம்பர் மாதம் 26-ந்தேதி முடிவடைகிறது.
- 81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபையின் பதவிகாலம் ஜனவரி 5-ந்தேதி முடிவடைகிறது.
அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீருக்கான சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல்களை நடந்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை பதவிக்காலம் நவம்பர் மாதம் 26-ந்தேதி முடிவடைகிறது.
81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபையின் பதவிகாலம் ஜனவரி 5-ந்தேதி முடிவடைகிறது. இந்நிலையில் பண்டிகை காலத்துக்கு பின்னர் தேர்தலை நடந்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் அட்டவணையைதேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது வெளியிடுகிறது
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பாரதிய ஜனதா, அஜித்பவார் கூட்டணி ஆட்சியும் ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி ஆட்சியும் நடைபெற்று வருகின்றன.
- ரத்தம் தோய்த்த உடைகளுடன் கிடந்த அவரை அவ்வழியாக சென்ற கப்பற்படை ராணுவ அதிகாரி ஒருவர் பார்த்துள்ளார்
- பட்டதாரியான அந்த பெண் ஒடிஷாவை சேர்ந்தவர் என்பதும் ஒரு வருடம் முன் டெல்லிக்கு வந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.
பெண்களுக்கு எதிராக பெருகி வரும் பாலியல் குற்றங்கள் அவர்களை மனிதர்களாக அன்றி இன்னும் இந்த சமூகம் போகப் பொருளாகவே பார்க்கிறது என்பதை நிரூபிப்பதாக உள்ளது. இந்தியாவின் வெவ்வேறு இடங்களில் தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களும் அதையே சுட்டிக்காட்டுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் டெல்லியின் சாராய் காலே கான் பகுதியில் பலாத்காரம் செய்யப்பட்டு சுயநினைவற்ற நிலையில் 34 வயது பெண் ஒருவர் சாலையில் கிடந்துள்ளார். ரத்தம் தோய்த்த உடைகளுடன் மோசமான நிலையிலிருந்த அவரை அவ்வழியாக சென்ற கப்பற்படை ராணுவ அதிகாரி ஒருவர் பார்த்து போலீசுக்கு தெரிவித்துள்ளார்.
பின்னர் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விசாரித்ததில் பட்டதாரியான அந்த பெண் ஒடிஷாவை சேர்ந்தவர் என்பதும் ஒரு வருடம் முன் டெல்லிக்கு வந்த அவர் தனது தோழியின் வீட்டில் தங்கியிருந்தார் என்றும் தெரியவந்தது.
சிறிய பிரச்சனை காரணமாகத் தோழி தன்னை வீட்டில் இருந்து வெளியேற்றியதால் போக இடமின்றி தெருவில் இருந்துள்ளார். இதை நோட்டம் விட்ட சிலர் இவரை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு சாராய் காலே சாலையில் வீசிச் சென்றுள்ளனர். இதற்கிடையே இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
- டெல்லியில் உள்ள பஞ்சாபி பாக் பகுதியில் இரண்டு குடும்பங்களுக்கு இடையே பகை இருந்துள்ளது
- லில்லுவும் அவரது குடும்பத்தினரும் சாந்தியையும் அவரது மகன்களையும் அடித்து விரட்டியுள்ளனர்.
டெல்லியில் மொபைல் போனால் துப்பாக்கிச்சூட்டில் இருந்து ஒருவர் உயிர்பிழைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. டெல்லியில் உள்ள பஞ்சாபி பாக் பகுதியில் இரண்டு குடும்பங்களுக்கு இடையே உள்ள பகையால் கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.
அன்றைய தினம் சாந்தி என்ற பெண் தனது மகன்கள் அர்ஜுன், கமல் மற்றும் உறவினர்களுடன் தங்களுக்கு பகையாய் உள்ள லில்லு என்ற சாத்நாம் வீட்டுக்கு சமாதானம் பேச சென்றுள்ளார். ஆனால் லில்லுவும் அவரது குடும்பத்தினரும் சாந்தியையும் அவரது மகன்களையும் அடித்து விரட்டியுள்ளனர்.
இந்த சம்பவத்தின்போது சாந்தியின் மகன் அர்ஜூன் தான் எடுத்துவந்த துப்பாக்கியால் சுட்டதில் லில்லுவின் பக்கம் இருந்த ரித்விக் என்பவரை நோக்கி குண்டு பாய்ந்தது. ஆனால் ரித்விக் அவரது டவுசரில் வைத்திருந்த மொபைல் போன் மீது துப்பாக்கிக்குண்டு பட்டுத் தெறித்தது.
இதனால் போன் சுக்குநூறான நிலையில் குண்டு ரிதிவிக் உடலை துளைக்காததால் அவர் உயிர்தப்பினார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறது.
- டெல்லியில் இருந்து சுமார் 450 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிக்கானர் [ Bikaner ] பகுதியில் கார் நின்றுகொண்டிருந்தது.
- இந்த கார் டெல்லியின் பாலாம் காலனியில் திருடப்பட்டது, மன்னிக்கவும்.
காரை திருடிவிட்டு பிறகு மனம் கேட்காமல் அதில் மன்னிப்பு கடிதம் எழுதிவைத்து ரோட்டிலேயே திருடன் விட்டுச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. டெல்லியில் பாலாம் காலனியை [Palam colony] சேர்ந்த வினய் குமார் என்பவரின் ஸ்கார்பியோ கார் சமீபத்தில் திருடுபோயுள்ளது. இதுகுறித்து கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி காரின் உரிமையாளர் வினய் குமார் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

அதன்படி எப்ஐஆர் பதித்து டெல்லி போலீஸ் காரை தேடிவந்தது. இந்நிலையில் டெல்லியில் இருந்து சுமார் 450 கிலோமீட்டர் தொலைவில் ராஜஸ்தானில் உள்ள பிக்கானர் [Bikaner] பகுதியில் திருடுபோன அந்த ஸ்கார்பியோ கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த காரின் பின்புற கண்டாடியில் காகிதங்கள் ஒட்டப்பட்ட நிலையில் இருந்தன. அதில், இந்த கார் டெல்லியின் பாலாம் காலனியில் திருடப்பட்டது, மன்னிக்கவும் என்ற வாசகத்துடன் அந்த காரின் நம்பர் எழுதப்பட்டிருந்தது. இது காரை மீண்டும் உரிமையாளரிடம் சிரமமின்றி ஒப்படைக்க திருடன் எழுதி வைத்த தகவல். மற்றொரு காகிதத்தில் நான் இந்தியாவை நேசிக்கிறேன் [I LOVE INDIA] என்று எழுதப்பட்டு மற்றொன்றில் இந்த கார் டெல்லியில் திருடப்பட்டது, உடனே போலீசுக்குச் சொல்லுங்கள், அவசரம் என்று எழுதப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூர் பிக்கானர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு சாலையோர உணவகத்தின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த இந்த காரை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர் போலீசுக்கு புகார் அளித்ததன் மூலம் கார் மீட்கப்பட்டுள்ளது. இந்த கார் வேறு ஏதேனும் குற்றச்செயல்களுக்காக திருடப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- அமெரிக்காவிலிருந்து அதில் நவீன 31 பிரிடேட்டர் டிரோன்களை வாங்க முடிவு செய்யப்பட்டது.
- இந்திய கடற்படைக்கான மூலோபாய நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தும்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான மத்திய அமைச்சர் சபைக் குழு (சிசிஎஸ்) ஆந்திர மாநிலம் நாகயலங்காவில் புதிய ஏவுகணை சோதனை மையம் நிறுவ ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நடவடிக்கை நாட்டின் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக தந்திரோபாய ஏவுகணை அமைப்புகளை சோதிக்க முடியும்.
கீழ் மற்றும் மேற்பரப்பில் இருந்து வான் ஏவுகணைகள், எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் பிற திட்டங்களின் சோதனைக்கு இந்த மையம் துணைபுரியும்.
ஆந்திராவில் புதிதாக அமைய உள்ள ஏவுகணை மையத்தில் மிகக் குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்புகள், மனிதனால் எடுத்துச் செல்லக்கூடிய தொட்டி எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணைகள், டேங்க் எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணைகள், விமான ஏவுகணை அமைப்புகள், செங்குத்தாக ஏவப்படும் குறுகிய தூர வான் பாதுகாப்பு ஏவுகணை சோதனையிடப்பட உள்ளன.
கடந்த வாரம் நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஆயுதப்படைகளுக்கான பல முக்கிய முன்மொழிவுகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அமெரிக்காவிலிருந்து அதில் நவீன 31 பிரிடேட்டர் டிரோன்களை வாங்க முடிவு செய்யப்பட்டது. மேலும் 2 அணுசக்தி நீர் மூழ்கி கப்பல்களை முழுமையாக தயாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இது இந்திய கடற்படைக்கான மூலோபாய நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தும். விண்வெளி அடிப்படையிலான திறன்களுடன் இந்திய படைகளுக்கு சாலைகள் அமைப்பதற்கான முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டன.
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே. பி, பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை.
- மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வது, வெறும் பரபரப்பைத்தான் ஏற்படுத்தும் என்று கருத்து.
கொரோனா தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டதால் ரத்தம் உறைதல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுவதாக கூறும் பொதுநலன் மனுவை சுப்ரீம்கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே. பி, பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு பரபரப்பை ஏற்படுத்தவே இந்த பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்வதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும்,கொரோனா தடுப்பூசி போடாமல் இருந்திருந்தால் எந்தவிதமான பக்கவிளைவுகள் ஏற்பட்டிருக்கும் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வது, வெறும் பரபரப்பைத்தான் ஏற்படுத்தும் என்றும் நீதிமன்றம் அமர்வ தெரிவித்தது.
- அதிகாலை 2 மணிக்கு நியூயார்க் நகருக்கு ஏர்-இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது.
- தயார் நிலையில் இருந்த வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தில் ஏறி சோதனை நடத்தினார்கள்.
மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 2 மணிக்கு நியூயார்க் நகருக்கு ஏர்-இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது.
சிறிது நேரத்தில் இந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதுபற்றி கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து நடுவானில் பறந்து கொண்டிருந்த அந்த விமானம் டெல்லிக்கு திருப்பப்பட்டு அவசர அவசரமாக தரை இறக்கப்பட்டது.
உடனே அங்கு தயார் நிலையில் இருந்த வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தில் ஏறி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்பது தெரியவந்தது.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் யார்? என்று தெரியவில்லை. இது பற்றி விசாரணை நடந்து வருகிறது. இந்த வெடிகுண்டு புரளியால் அந்த விமானத்தில் சென்ற பயணிகள் தவிப்புக்கு உள்ளானார்கள்.
- இந்தச் சம்பவம் அக்னிவீர் திட்டம் குறித்து மீண்டும் கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.
- இதற்கு பா.ஜ.க. அரசு பதிலளிக்கத் தவறிவிட்டது என்றார் ராகுல் காந்தி.
புதுடெல்லி:
மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக்கில், கடந்த 10-ம் தேதி பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில் கோஹில் விஸ்வராஜ், சயீபாத் ஆகிய 2 வீரர்கள் சம்பவ இடத்திலேயே வீரமரணமடைந்தனர்.
இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:
நாசிக்கில் பயிற்சியின்போது கோஹில் விஸ்வராஜ் சிங் மற்றும் சைபத் ஷிட் ஆகிய இரு அக்னிவீரர்கள் மரணம் அடைந்திருப்பது ஒரு சோகமான சம்பவம். அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தச் சம்பவம் அக்னிவீர் திட்டம் குறித்து மீண்டும் கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. இதற்கு பாஜக அரசு பதிலளிக்கத் தவறிவிட்டது.
வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கான இழப்பீட்டிற்கு இணையாக கோஹில் மற்றும் சைபத் குடும்பத்தினருக்கு சரியான நேரத்தில் இழப்பீடு வழங்கப்படுமா?
அக்னிவீரர்களின் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பிற அரசு வசதிகள் ஏன் கிடைக்காது? இரு வீரர்களின் பொறுப்பும் தியாகமும் ஒரே மாதிரியாக இருக்கும்போது, அவர்கள் தியாகம் செய்த பிறகு ஏன் இந்தப் பாகுபாடு?
அக்னிபாத் திட்டம் ராணுவத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி மற்றும் நமது வீரர், வீராங்கனைகளின் தியாகத்தை அவமதிக்கும் செயல்.
ஒரு ராணுவ வீரரின் உயிரை விட மற்றொரு ராணுவ வீரரின் உயிர் ஏன் விலை உயர்ந்தது என்பதற்கு பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும் பதில் சொல்ல வேண்டும்.
இந்த அநீதிக்கு எதிராக ஒன்றுபடுவோம். பாஜக அரசின் அக்னிவீர் திட்டத்தை நீக்கி, நாட்டின் இளைஞர்கள் மற்றும் ராணுவத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்க இன்றே நமது ஜெய் ஜவான் இயக்கத்தில் இணையுங்கள் என பதிவிட்டுள்ளார்.
- ஜம்மு காஷ்மீரில் கடந்த 2019, அக்டோபர் 31-ம் தேதி முதல் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்து வந்தது.
- சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்ட பிறகு நடந்த முதல் சட்டசபை தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:
ஜம்மு காஷ்மீரில் கடந்த 2019, அக்டோபர் 31-ம் தேதி முதல் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்து வந்தது.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய மாநாட்டு கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. பாஜக 29 தொகுதிகளிலும், மக்கள் ஜனநாயக கட்சி 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை சந்தித்த ஒமர் அப்துல்லா, எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்ட ஆதரவு கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். விரைவில் புதிய முதலமைச்சராக ஒமர் அப்துல்லா பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பான அக்டோபர் 31, 2019 தேதியிட்ட முந்தைய உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகாலமாக செயல்பாட்டில் இருந்த உத்தரவை ரத்துசெய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
- செங்கோட்டையில் உள்ள மகாதேவ் தாஸ் பூங்காவில் ராம்லீலா கொண்டாடப்பட்டு வருகிறது.
- டெல்லியில் ஆம் ஆத்மி சார்பில் நடந்த தசரா நிகழ்ச்சியில் முதல்வர் அதிஷி கலந்துகொண்டார்.
இந்துக்களின் புனிதப் பண்டிகையான நவராத்திரி மற்றும் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. இந்நிலையில் இன்றைய இரவு ராவணன் பொம்மையை எரிக்கும் ராம்லீலா நிகழ்வு கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் தலைநகர் டெல்லியில் செங்கோட்டையில் உள்ள மகாதேவ் தாஸ் பூங்காவில் ராம்லீலா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதன்பின்னர் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரும் செங்கோட்டையில் நடக்கும் நிகழ்வுக்கு வருகை தந்தனர். இதற்கிடையே டெல்லியில் ஆம் ஆத்மி சார்பில் நடந்த தசரா நிகழ்ச்சியில் முதல்வர் அதிஷி கலந்துகொண்டார்.
இதுபோல மகாராஷ்டிரா, பீகார், உத்தரகண்ட், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட இடங்களிலும் அரசியல் தலைவர்கள் தலைமையில் தசரா விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- சாலையோர உணவகத்தில் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கடுமையான வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டார்.
- அந்த கரப்பான்பூச்சி 3 சென்டிமீட்டர் நீளம் கொண்டதாக இருந்துள்ளது.
டெல்லியை சேர்ந்த வாலிபரின் வயிற்றிலிருந்து உயிருடன் இருந்த கரப்பான்பூச்சியை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. டெல்லியை சேர்ந்த 23 இளைஞர் ஒருவர் சாலையோர உணவகத்தில் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கடுமையான வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டார்.
3 நாட்கள் வலியால் அவதிப்பட்ட அவர் கடைசியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை எண்டோஸ்கோப்பி பரிசோதனைக்கு உட்படுத்திய மருத்துவர்கள் அவரது வயிற்றில் கரப்பான்பூச்சி ஒன்று உயிருடன் இருப்பதை அறிந்தனர்.
உடனே எண்டோஸ்கோப்பி முறையில் 10 நிமிடத்தில் அவரது வயிற்றில் இருந்த கரப்பான்பூச்சியை வெற்றிகரமாக மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். அந்த கரப்பான்பூச்சி 3 சென்டிமீட்டர் நீளம் கொண்டதாக இருந்துள்ளது.
இளைஞர் சாப்பிடும்போது கரப்பான் பூச்சியை விழுங்கி இருக்கலாம் என்றும் தக்க சமயத்தில் சிகிச்சை அளித்ததால்தான் சிக்கலின்றி அவரை காப்பாற்ற முடிந்தது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.






