பலாத்காரம் செய்யப்பட்டு தலைநகர 'சாலை'யில் தூக்கி வீசப்பட்ட பெண் - ரத்தத்துடன் பரிதவித்த அவலம்

ரத்தம் தோய்த்த உடைகளுடன் கிடந்த அவரை அவ்வழியாக சென்ற கப்பற்படை ராணுவ அதிகாரி ஒருவர் பார்த்துள்ளார்பட்டதாரியான அந்த பெண் ஒடிஷாவை சேர்ந்தவர் என்பதும் ஒரு வருடம் முன் டெல்லிக்கு வந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.
பலாத்காரம் செய்யப்பட்டு தலைநகர 'சாலை'யில் தூக்கி வீசப்பட்ட பெண் - ரத்தத்துடன் பரிதவித்த அவலம்
Published on

பெண்களுக்கு எதிராக பெருகி வரும் பாலியல் குற்றங்கள் அவர்களை மனிதர்களாக அன்றி இன்னும் இந்த சமூகம் போகப் பொருளாகவே பார்க்கிறது என்பதை நிரூபிப்பதாக உள்ளது. இந்தியாவின் வெவ்வேறு இடங்களில் தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களும் அதையே சுட்டிக்காட்டுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் டெல்லியின் சாராய் காலே கான் பகுதியில் பலாத்காரம் செய்யப்பட்டு சுயநினைவற்ற நிலையில் 34 வயது பெண் ஒருவர் சாலையில் கிடந்துள்ளார். ரத்தம் தோய்த்த உடைகளுடன் மோசமான நிலையிலிருந்த அவரை அவ்வழியாக சென்ற கப்பற்படை ராணுவ அதிகாரி ஒருவர் பார்த்து போலீசுக்கு தெரிவித்துள்ளார்.

பின்னர் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விசாரித்ததில்  பட்டதாரியான அந்த பெண் ஒடிஷாவை சேர்ந்தவர் என்பதும் ஒரு வருடம் முன் டெல்லிக்கு வந்த அவர் தனது தோழியின் வீட்டில் தங்கியிருந்தார் என்றும் தெரியவந்தது.

சிறிய பிரச்சனை காரணமாகத் தோழி தன்னை வீட்டில் இருந்து வெளியேற்றியதால் போக இடமின்றி தெருவில் இருந்துள்ளார்.  இதை நோட்டம் விட்ட சிலர் இவரை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு சாராய் காலே சாலையில் வீசிச் சென்றுள்ளனர். இதற்கிடையே இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com