பத்திரமாக பைக் ஓட்ட சொன்ன நபர் கத்தியால் குத்திக் கொலை.. டெல்லியில் வெறிச்செயல்

தசரா விழாவுக்கு சென்றுவிட்டு தனது சகோதரன் ஹிமான்சுவுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.ஹிமான்சுவுக்கு கழுத்திலும், தொடையிலும் காயம் ஏற்பட்டுள்ளது.
பத்திரமாக பைக் ஓட்ட சொன்ன நபர் கத்தியால் குத்திக் கொலை.. டெல்லியில் வெறிச்செயல்
Published on

நல்லது சொல்பவர்களை கூட எதிரியாக பார்க்கும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு உதாரணமாக தலைநகர் டெல்லியில் நடந்த ஒரு கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் பிரதாப் நகரை சேர்ந்த 22 வயது இளைஞன் அங்கூர், கடந்த சனிக்கிழமை இரவு தசரா விழாவுக்கு சென்றுவிட்டு தனது சகோதரன் ஹிமான்சுவுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

சபோலி சாலை அருகே வந்தபோது அந்த வழியாக பைக்கில் இரண்டு பேரை பின்னால் ஏற்றிக்கொண்டு வந்த பைக் ஓட்டுநரை பார்த்து பத்திரமாக ஓட்டிச் செல்லும்படி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்களில் ஒருவன் ஹிமான்சுவையும், அங்கூரையும் தான் வைத்திருந்த கத்தியால் தாக்கியுள்ளான். அதன்பின் அவர்கள் மூவரும் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர்.

தாக்குதலில் ஹிமான்சுவுக்கு கழுத்திலும், தொடையிலும் காயம் ஏற்பட்டுள்ளது. அங்கூரின் நிலை அதைவிட மோசமான நிலையில் அங்கிருந்து அருகிலிருந்த மருத்துவமனைக்கு அங்கூரை ஹிமான்சு அழைத்துச் சென்றார். ஆனால் அங்கூர் ஏற்கவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

உயிரிழந்த அங்கூரின் மார்பு, வயிறு மற்றும் தொடையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் அந்த மூவரின் ஒருவனை கைது செய்தனர். ஹிமான்சுவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com