என் மலர்
டெல்லி
- காஷ்மீருக்கு புதிய கவர்னரை நியமிக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
- கேரளாவில் தற்போது கவர்னராக இருக்கும் ஆரிப் முகமது கான் 5 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதால் அவருக்கு மத்திய அரசு வேறு புதிய பணியை ஒதுக்க தீர்மானித்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் பல மாநிலங்களில் கவர்னர்களின் 5 ஆண்டு பதவிக்காலம் நிறைவு பெற்றிருக்கிறது. சில மாநிலங்களில் கவர்னர்கள் 3 ஆண்டுகளுக்கு மேலாக பதவியில் இருக்கிறார்கள்.
இதனால் பல மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை தேர்வு செய்து நியமிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.
பா.ஜ.க. ஆளும் உத்தரபிரதேசத்தில் கவர்னராக இருக்கும் அனந்தி பென் படேல் பதவி காலம் 5 ஆண்டுகள் முடிந்துள்ளது. அதுபோல கேரளாவில் கவர்னராக இருக்கும் ஆரிப் முகமது கான் பதவி காலமும் 5 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
அதுபோல யூனியன் பிரதேசங்களான காஷ்மீர், அந்தமான், டாமன் டையூ, தாதர் ஆகியவற்றிலும் கவர்னர்களின் பதவி காலம் 3 ஆண்டுகளை கடந்துள்ளது. தமிழ்நாடு, கோவா, கர்நாடகா, குஜராத், அரியானா, மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் கவர்னர்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் உள்ளனர்.
10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் கவர்னர்கள் 3 முதல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பதவியில் இருப்பதால் அவர்களை மாற்ற மத்திய அரசு தீர்மானித்துள்ளது. பெரும்பாலான கவர்னர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
சில மாநிலங்களில் 3 ஆண்டுகளை கடந்துள்ள கவர்னர்களின் செயல்பாடுகள் மத்திய அரசுக்கு திருப்தி அளித்துள்ளன. அவர்களை தற்போதைய மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்துக்கு இடம் மாற்றம் செய்ய மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பொறுப்பேற்று 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. எனவே கவர்னர்கள் மாற்றத்தின் போது தமிழக கவர்னர் ரவியும் இடம்மாற்றம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி வெற்றிபெற்று ஆட்சியை அமைத்துள்ளது. உமர் அப்துல்லா தலைமையிலான ஆட்சிக்கு முழு ஆதரவு கொடுக்கப்போவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதன் படி காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தகைய சூழ்நிலையில் காஷ்மீருக்கு புதிய கவர்னரை நியமிக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். தற்போது அங்கு கவர்னராக இருக்கும் மனோஜ் சின்கா 4 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் இருக்கிறார்.
மனோஜ் சின்காவுக்கு பதில் புதிய கவர்னராக பா.ஜ.க. முன்னாள் தேசிய பொதுச்செயலாளர் ராம் மாதவை கவர்னராக நியமனம் செய்ய ஆலோசனை நடந்து வருகிறது. இவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நெருங்கிய தொடர்பு உடையவர்.

சில மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க வெற்றிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தவர். இதனால் அவருக்கு கவர்னர் பதவி வழங்க பிரதமர் மோடி முடிவு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
கேரளாவில் தற்போது கவர்னராக இருக்கும் ஆரிப் முகமது கான் 5 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதால் அவருக்கு மத்திய அரசு வேறு புதிய பணியை ஒதுக்க தீர்மானித்துள்ளது. அவருக்கு பதில் அந்தமான் தீவு கவர்னர் தேவேந்திர குமார் கேரளாவின் புதிய கவர்னராக மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.
அதுபோல கர்நாடகா கவர்னர் கெலாட், குஜராத் கவர்னர் ஆச்சாரியா தேவ்ரத், கோவா கவர்னர் ஸ்ரீதரன் பிள்ளை, அரியானா கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயா, மத்திய பிரதேச கவர்னர் மங்குபாய் படேல், உத்தரகாண்ட் கவர்னர் குர்மித்சிங் ஆகியோரும் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட வாய்ப்பு உள்ளது.
புதிய கவர்னர்கள் நியமனம் மற்றும் இடமாற்றம் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் நடைபெறும் என்று தெரிகிறது. மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தல் முடிந்த பிறகு கவர்னர்கள் மாற்றம் நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது.
கவர்னர்கள் மாற்றம் தொடர்பாக மத்திய அரசு ஆலோசிக்க தொடங்கி இருப்பதால் பா.ஜ.க. மூத்த தலைவர்களிடம் கவர்னர் பதவியை பெற கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க. முன்னாள் எம்.பி.க்கள் அஸ்வினி துபே, வி.கே.சிங், முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோரது பெயர்கள் புதிய கவர்னர்கள் பதவிக்கு அடிபடுகிறது.
- மாணவர் அமைப்பினருக்கும் அரசுக்கும் இடையே ஓர் உடன்படிக்கை கையெழுத்தானது.
- 1966 ஜனவரி 1 முதல் 1971 மார்ச் 24 நள்ளிரவுக்கு இடையில் குடியேறியவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டது.
அசாம் உடன்படிக்கையை அங்கீகரிக்கும் குடியுரிமை சட்ட பிரிவு செல்லும் என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.
அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியர வங்கதேசத்தினரை கண்டறிந்து அவர்களை வெளியேற்ற வலியுறுத்தி கடந்த 1979 -ம் ஆண்டு தொடங்கி 1985-ம் ஆண்டு வரை தொடர்ந்து 6 ஆண்டுகள் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. இதில் குறிப்பாக மாணவர் அமைப்பினர் சார்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. இதையடுத்து மாணவர் அமைப்பினருக்கும் அரசுக்கும் இடையே ஓர் உடன்படிக்கை கையெழுத்தானது.
அதில், 1966 ஜனவரி 1 முதல் 1971 மார்ச் 24 நள்ளிரவுக்கு இடையில் குடியேறியவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டது. இந்த கால கட்டத்துக்கு பிறகு, மாநிலத்தில் குடியேறுபவர்கள் சட்டவிரோத வெளிநாட்டவர் என்று அறிவிக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், அசாம் உடன்படிக்கையை அங்கீகரிக்கும் குடியுரிமை சட்ட பிரிவு 6ஏ செல்லும் என்றும் இந்த குடியுரிமை சட்ட திருத்தத்தை மேற்கொள்ள பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
- கடந்த 14 ஆண்டுகள் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றியிருக்கிறார்.
- நவம்பர் 10-ஆம் தேதியுடன் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஓய்வு பெறுகிறார்.
உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை நியமிக்கலாம் என்று தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் பரிந்துரை செய்துள்ளார். மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்திற்கு இது தொடர்பாக அவர் கடிதம் எழுதியுள்ளார்.
மரபுப்படி தலைமை நீதிபதிக்கு அடுத்த நிலையிலுள்ளளார் மூத்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா. கடந்த 14 ஆண்டுகள் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றியிருக்கிறார்.
இந்த பரிந்துரையை அரசு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், உச்ச நீதிமன்றத்தின் 51-வது நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பொறுப்பேற்பார்.
நவம்பர் 10-ஆம் தேதியுடன் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது.
- குவிண்டாலுக்கு ரூ.150 உயர்த்தப்பட்டு ஒரு குவிண்டால் ரூ.2,425 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 2025-26 மார்க்கெட்டிங் சீசனுக்கான ரபி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.150 உயர்த்தப்பட்டு, ஒரு குவிண்டால் ரூ.2,425 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடுகு மற்றும் கொண்டைக் கடலைக்கான எம்.எஸ்.பி. முறையே குவிண்டாலுக்கு ரூ.5,950 ஆகவும், ஒரு குவிண்டாலுக்கு ரூ.5,650 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
கடுகு ஒரு குவிண்டாலுக்கு ரூ. 300, கொண்டைக் கடலை குவிண்டாலுக்கு 210 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
மசூர் பருப்பு குவிண்டாலுக்கு ரூ. 275 உயர்த்தப்பட்டுள்ளது. இனி ரூ.6,700-க்கு கொள்முதல் செய்யப்படும்.
பார்லி குவிண்டாலுக்கு ரூ.130 உயர்த்தப்பட்டு, ஒரு குவிண்டால் ரூ.1,980 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
குங்குமப்பூ குவிண்டாலுக்கு ரூ.140 உயர்த்தப்பட்டு, ஒரு குவிண்டால் ரூ.5,940 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு லாபகரமான விலை உறுதி செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
- சுப்ரீம் கோர்ட் நூலகத்தில் தலைமை நீதிபதி டி.ஓ. சந்திரசூட் இந்த சிலையை திறந்துவைத்தார்.
- சட்டம் குருடு அல்ல என்ற வாசகத்துடன் புதிய நீதி தேவதை சிலை அமைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட் நூலகத்தில் நடந்த விழாவில் புதிய நீதி தேவதை சிலையை தலைமை நீதிபதி சந்திரசூட் இன்று திறந்து வைத்தார்.
இப்புதிய நீதிதேவதை சிலை, சட்டம் குருடு அல்ல என்பதையும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உணர்த்தவே கறுப்பு துணி அகற்றப்பட்டுள்ளது.
இடது கையில் தராசுக்கு பதிலாக அரசியல் சாசன புத்தகம் உள்ளது.
ஏற்கனவே இருந்த நீதி தேவி சிலையில், அதன் கண்கள் கறுப்பு துணியால் கட்டப்பட்டும், இடது கையில் வாளும், வலது கையில் தராசும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- நேரடியாக இந்தியாவில் தேசிய பாதுகாப்பை பாதிக்கிறது.
- தேசிய நலனைப் பாதுகாப்பதில் இந்திய அரசு கடமைப்பட்டுள்ளது.
இந்தியா எதிர்ப்பு காலிஸ்தான் அமைப்பின் ஆதரவு பெற்ற சிறு குழுக்கள் கனடாவில் செயல்பட்டு வருகிறது. காலிஸ்தான் தலைவர் நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையிலான ராஜாங்க ரீதியிலான நட்பு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளும் தூதர்களை திருப்பி அனுப்பும் நடிவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில் கனடாவில் காலிஸ்தான் செயல்பாடுகள் இந்தியாவுக்கு மிகவும் கவலை அளிக்கக்கூடிய விசயம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் "கனடாவில் இந்தியாவுக்கு எதிரான காலிஸ்தான் அமைப்பின் ஒரு பகுதியினரின் செயல்பாடுகள் மிகவும் கவலை அளிக்கக்கூடிய விசயம். இது நேரடியாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பை பாதிக்கிறது. தேசிய நலனைப் பாதுகாப்பதில் இந்திய அரசு கடமைப்பட்டுள்ளது. இதற்கு இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் முழுவதும் ஆதரவு உள்ளது.
இந்தியாவுக்கு எதிராக கனடா அரசின் பல்வேறு அதிகாரப்பூர்வ அதிகாரிகளால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை இந்திய அரசு நிராகரித்துள்ளது. லாரன்ஸ் பிஷ்னாய் கிரிமினல் கும்பலின் பங்கு உள்பட இந்த விவகாரங்களில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையை இந்திய அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுடுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆண்டுக்கு இரண்டு முறை மாற்றியமைக்கப்படும்.
- 3 சதவீதத்துடன் தற்போது 45 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட இருக்கிறது.
மத்திய அரசுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியில் 3 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய அமைச்சரவை இன்று காலை கூடியது. தீபாவளி மற்றும் பண்டிகை காலம் ஆகிவற்றை கணக்கில் கொண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த 3 சதவீதத்துடன் மொத்தம் 45 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட இருக்கிறது.
விலைவாசி உயர்வை சமாளிக்கும் வகையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது. தற்போதைய நுகர்வோரின் விலை குறியீட்டை கணக்கில் எடுத்துக் கொண்டு வருடத்திற்கு இரண்டு முறை அகவிலைப்படி மாற்றியமைக்கப்படும்.
- டெல்லி- சிகாகோ விமானம் கனடாவிற்கு திருப்பி விடப்பட்டு சோதனை.
- ஜெய்ப்பூர்- பெங்களூரு விமானம் அயோத்தியில் தரையிறக்கப்பட்டது.
இன்று பல விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், ஐந்து விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டன. சோதனைக்குப்பின் அவை அனைத்தும் போலி மிரட்டல் எனத் தெரியவந்தது.
டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சிகாகோ நகரத்திற்கு சென்று ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் இந்த விமானம் கனடாவில் தரையிறக்கப்பட்டது.
ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் இருந்து பெங்களூருவுக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், தமாம் (சவுதி அரேபியா)- லக்னோ இண்டிகோ விமானம், தர்பங்கா- மும்பை ஸ்பைஸ்ஜெட், சிலிகுரி- பெங்களூரு ஆகாசா ஏர் ஆகிய விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் பல்வேறு விமான நிலையங்களில் பாதுகாப்பு அமைப்புகளால் பயங்கரவாத தடுப்பு பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இறுதியில் வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது.
ஜெய்ப்பூர்- பெங்களூரு விமானம் அயோத்தி வழியாக செல்லும் விமானம் ஆகும். இந்த விமானம் அயோத்தியில் தரையிறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. ஸ்பைஸ்ஜெட், ஆகாசா ஏர் விமானங்கள் தரையிறக்கப்பட்டன.
விமானங்கள் தரையிறக்கப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன என விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
டெல்லியில் இருந்து சிகாகோ சென்ற ஏர் இந்தியா விமானம் கனடாவிற்கு திருப்பி விடப்பட்டு அங்கு பாதுகாப்பு சோதனைகள் செய்யப்பட்டன.
இதேபோன்று நேற்று மும்பையில் இருந்து புறப்பட்ட மூன்று சர்வதேச விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அவைகளும் புரளி எனத் தெரியவந்தது.
- நாங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை நிர்வகிக்கவில்லை.
- மாதிரி அளவு உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் தொடர்பாக சுயபரிசோதனை தேவை.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் அரியானா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் இழுபறி நீடிக்கும், அரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என மீடியாக்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டன.
ஆனால் வாக்கு எண்ணிக்கையின்போது ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாடு- காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
அரியானாவில் தொடக்க சுற்றின்போது காங்கிரஸ் 50 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றது. அடுத்த சில நிமிடங்களில் பா.ஜ.க. முன்னிலை பெற ஆரம்பித்தது. பின்னர் 48 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது.
இந்த நிலையில் இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ராஜிவ் குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ராஜிவ் குமார் பதில் அளித்து கூறியதாவது:-
நாங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை நிர்வகிக்கவில்லை. மாதிரி அளவு உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் தொடர்பாக சுயபரிசோதனை தேவை. சுயபரிசோதனைக்குரிய அமைப்புகள் உள்ளன. அந்த அமைப்புகள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்வதற்கான நேரம் வந்துவிட்டது.
எதிர்பார்ப்பிற்கும் உண்மைக்கும் இடையிலான இடைவேளி விரக்தியை ஏற்படுத்த வழிவகுக்கும். யாராலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை டிரென்ட் உடன் எதிர்பார்க்க முடியாது.
அரியானாவில் காலையில் 8.05 அல்லது 8.10-க்கும் முடிவுகள் வெளியாக தொடங்கிவிட்டது. இது அர்த்தமற்றது. வாக்கு எண்ணிக்கை 8.30 மணிக்கு தொடங்கியது. 9.30 மணியில் இருந்து 2 மணி நேரத்திற்கு ஒருமுறை முடிவை நாங்கள் வெளியிட்டோம். இது இணையதளத்தில் வெளியாக கூடுதலாக அரைமணி நேரம் எடுத்துக் கொள்ளும். தற்போது வாக்கு எண்ணிக்கை மையத்தில் சரியான விவரங்களை பெற முடியும்.
ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கை 30 நிமிடத்திற்கு முன்னதாக முடியாது. எனவே வழக்கமாக முதல் சுற்று முடிவுகள் வெளிவருவதற்கு 8.50 ஆகும், அது தேர்தல் கமிஷன் இணையதளத்தில் 9.30-க்குள் கிடைக்கும்.
இவ்வாறு ராஜிவ் குமார் தெரிவித்தார்.
- ராகுல் காந்தி வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.
- வயநாடு தொகுதியில் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வயநாடு மற்றும் ரேபரேலி என இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
சட்டப்படி, ஒரு தொகுதியின் எம்.பியாக மட்டுமே ஒருவர் தொடர முடியும் என்பதால் ராகுல் காந்தி வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதன்மூலம் ராகுல்காந்தி ரேபரேலி எம்.பியாக ராகுல் காந்தி தொடர்கிறார்.
வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்த நிலையில், அந்த தொகுதியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டார்.
இதனையடுத்து வயநாட்டில் ஏற்பட்ட மோசமான நிலச்சரிவில் சிக்கி எண்ணற்றோர் உயிரிழந்தனர். இதனால் வயநாடு தொகுதியின் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தலுடன் சேர்த்து வயநாடு இடைத்தேர்தல் தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி நவம்பர் 13 ஆம் தேதி வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும், மகாராஷ்டிராவின் நான்தேட் பாராளுமன்ற தொகுதிக்கு நவம்பர் 20 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கையோடு சேர்த்து இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நவம்பர் 23 ஆம் தேதி நடைபெறுகிறது.
- மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நவம்பர் மாதம் 20-ம் தேதி நடைபெறுகிறது.
- ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் இரு கட்டமாக நடைபெற உள்ளது.
புதுடெல்லி:
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
மொத்தம் 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை பதவிக்காலம் நவம்பர் மாதம் 26-ந்தேதி முடிவடைகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் நவம்பர் 20-ம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளது.
அதேபோல், 81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபையின் பதவிகாலம் ஜனவரி 5-ம் தேதியுடன் முடிவடைகிறது.
ஜார்க்கண்டில் இரு கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்றும், நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.
இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் நவம்பர் 23ம் தேதி எண்ணப்பட உள்ளன.
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாரதிய ஜனதா, அஜித்பவார் கூட்டணி ஆட்சியும் ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி ஆட்சியும் நடைபெற்று வருகின்றன.
- 2024 இந்தியா மொபைல் காங்கிரஸ் இன்று டெல்லியில் தொடங்கியது.
- இந்நிகழ்வில் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கலந்து கொண்டார்.
இந்திய தலைநகர் டெல்லியில் இன்று தொடங்கிய 2024 இந்தியா மொபைல் காங்கிரஸை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 4 நாள் நடக்கக்கூடிய இந்த நிகழ்வு ஆசியாவிலேயே மிகப்பெரிய டெக் நிகழ்ச்சியாகும்.
இந்த நிகழ்வில் ஜியோ நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானி பிரதமர் மோடி மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோரிடம் 2 முக்கியமான பரிந்துரைகளை முன்வைத்தார்.
விழாவில் பேசிய ஆகாஷ் அம்பானி, AI (செயற்கை நுண்ணறிவு) மற்றும் இந்திய பயனர்களின் டேட்டாக்களை சேமிக்க இந்தியாவில் டேட்டா மையங்களை உருவாக்க வேண்டும் என்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் மிக வேகமாக வளர்ந்து வருவதால் டேட்டா சென்டர் பாலிசி 2020-ஐ மேம்படுத்த வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுத்தார்.






