மகாராஷ்டிராவில் நவம்பர் 20: ஜார்க்கண்ட்டில் இருகட்டமாக சட்டசபை தேர்தல்

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நவம்பர் மாதம் 20-ம் தேதி நடைபெறுகிறது.ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் இரு கட்டமாக நடைபெற உள்ளது.
மகாராஷ்டிராவில் நவம்பர் 20: ஜார்க்கண்ட்டில் இருகட்டமாக சட்டசபை தேர்தல்
Published on

புதுடெல்லி:

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

மொத்தம் 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை பதவிக்காலம் நவம்பர் மாதம் 26-ந்தேதி முடிவடைகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் நவம்பர் 20-ம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளது.

அதேபோல், 81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபையின் பதவிகாலம் ஜனவரி 5-ம் தேதியுடன் முடிவடைகிறது.

ஜார்க்கண்டில் இரு கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்றும், நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.

இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் நவம்பர் 23ம் தேதி எண்ணப்பட உள்ளன.

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாரதிய ஜனதா, அஜித்பவார் கூட்டணி ஆட்சியும் ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி ஆட்சியும் நடைபெற்று வருகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com