என் மலர்
டெல்லி
- இ-மெயில் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக இதுபோன்ற மிரட்டல்கள் விடுக்கப்படுவது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- துபாயில் இருந்து ஜெய்ப்பூருக்கு நேற்று நள்ளிரவு 189 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டு வந்தது.
புதுடெல்லி:
நாடு முழுவதும் சமீப காலமாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 40 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த விமானங்களில் சோதனை நடத்தப்பட்டபோது அவை புரளி என்பது தெரியவந்தது.
இ-மெயில் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக இதுபோன்ற மிரட்டல்கள் விடுக்கப்படுவது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுபோன்ற மிரட்டல்களை தடுப்பதற்காக கடும் சட்டம் இயற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக இதுபோன்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைதாகும் குற்றவாளிகளை விமானத்தில் பறக்க தடை விதிப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் மேலும் 2 விமானங்களுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் இருந்து லண்டனுக்கு நேற்றிரவு விஸ்தாரா விமானம் புறப்பட்டு சென்றது.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக விமான போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் வந்தது.
இதனால் சுதாரித்துக்கொண்ட அதிகாரிகள் விமானிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அந்த விமானத்தை நள்ளிரவு 12.40 மணி அளவில் ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட் விமான நிலையத்தில் தரை இறக்க முடிவு செய்தனர்.
அதன்படி பிராங்பர்ட் விமான நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த விமானம் அங்கு தரையிறக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதில், விமானத்தில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதும், மிரட்டல் வெறும் புரளி என்பதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து விமானம் 2½ மணி நேரம் தாமதமாக லண்டனுக்கு புறப்பட்டு சென்றது.
துபாயில் இருந்து ஜெய்ப்பூருக்கு நேற்று நள்ளிரவு 189 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டு வந்தது. விமானம் நடுவானில் பறந்து வந்த போது இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இதைத்தொடர்ந்து விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக இறங்கினர். தொடர்ந்து பயணிகளின் உடமைகள் மற்றும் விமானத்தில் சந்தேகத்திற்கிடமாக ஏதேனும் பொருட்கள் இருக்கிறதா? என சோதனை நடத்தப்பட்டது.
இதில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. அதன் பிறகே பயணிகள் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்த மிரட்டல் சம்பவத்தால் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
- இந்திய உளவுத் துறை முன்னாள் அதிகாரி மீது கூலிக்கு கொலை செய்தல், பணமோசடி பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- டெல்லியில் இருந்த அவரை சிறப்பு தனிப்படை போலீஸ் கைது செய்துள்ளது
அமெரிக்காவில் நியூ யார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு 'சீக்கியர்களுக்கு நீதி' என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங். இவர் இந்தியாவில் இருந்து சீக்கியர்களுக்கு தனி நாடு கோரும் காலிஸ்தான் ஆதரவாளர் ஆவார்.

இவரைக் கொலை செய்ய இந்தியா சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதை இந்தியா மறுத்து வந்த நிலையில் தற்போது இந்திய உளவு அமைப்பான ரா [RAW] அமைப்பைச் சேர்ந்த முன்னாள் அதிகாரி விகாஷ் யாதவ் என்பவருக்கு இந்த கொலை முயற்சியில் தொடர்பு உள்ளதாக அமெரிக்காவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர் ரா அமைப்பால் போர் கலை மற்றும் ஆயுதங்களைக் கையாளுதல் ஆகியவற்றில் அதிகாரிக்கான பயிற்சிகளைப் பெற்றுள்ளார்.
இந்திய அரசு அதிகாரியான இவர், மற்றொரு குற்றவாளியுடன் இணைந்து அமெரிக்க குடிமகனை கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறார் என்று எப்.பி.ஐ. இயக்குனர் கிறிஸ்டோபர் ரே கூறினார். இந்த கொலை வழக்கில் விகாஸ் யாதவ் முதன்மை குற்றவாளி அல்ல. "CC-1" (co-conspirator) அதாவது இணைச் சதிகாரர் என்று கருதப்படுகிறார். இந்த வழக்கின் முதன்மைக் குற்றவாளி நிகில் குப்தா கடந்த ஆண்டு செக் குடியரசு நாட்டில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
இந்நிலையில் அமெரிக்க காவல்துறையான FBI விகாஸ் யாதவை தேடி வந்த நிலையில் டெல்லியில் இருந்த அவரை சிறப்பு தனிப்படை போலீஸ் கைது செய்துள்ளது. இவ்வழக்கு தொடர்பாக அமெரிக்க நீதித்துறை (DoJ) குற்றப்பத்திரிகையில் புகைப்படத்துடன் தேடப்படும் குற்றவாளியாக விகாஸ் யாதவை அறிவித்து, அவர் மீது கூலிக்கு கொலை செய்தல், பணமோசடி உள்ளிட்ட குற்றங்கள் ஈடுபட்டதாக வழக்குப்பதிந்திருந்தது.
இந்த வழக்கில் அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பதாகக் கூறியுள்ள இந்திய அரசு விகாஷ் யாதவ் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. முன்னதாக கனடாவில் கடந்த ஜூன் மாதம் கொல்லப்பட்ட காலிஸ்தான் ஆதரவாளர் ஹாதீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசுக்கு தொடர்புள்ளதாகக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்வைத்த குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தின. இதனால் இரு நாட்டின் தூதரக உறவும் மொத்தமாக முறியும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய தூதரக ஆதிகாரிகள் லாரன்ஸ் பிஸ்னாய் தாதா கும்பலுடன் தொடர்பு வைத்து குற்றச்செயல்களை ஊக்குவிப்பதாக ட்ரூடோ குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
- 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளைத் திருமணம் செய்து உறவு கொண்டால் அது பாலியல் வன்கொடுமைக்கு ஈடாகும்.
- கடந்த 3 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளன
குழந்தை திருமணம் தடைச்சட்டத்தை எந்த ஒரு தனி நபர் சட்டங்களாலும் கட்டுப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தியாவில் ஆண்களின் திருமண வயது 21 என்றும் பெண்களின் திருமண வயது 18 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளைத் திருமணம் செய்து உறவு கொண்டால் அது பாலியல் வன்கொடுமைக்கு ஈடாகும்.
குழந்தை திருமண தடுப்புச் சட்டம், 2006 (பிசிஎம்ஏ) காரணமாகக் குழந்தைத் திருமணங்கள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலும் கடந்த 3 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளன என தரவுகள் தெரிவிக்கின்றன.
எனவே குழந்தைத் திருமணங்களை முற்றிலுமாக தடுத்து நிறுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கானது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் நேற்று [வெள்ளிக்கிழமை] விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதிகள், எந்தவொரு மதத்தின் தனிப்பட்ட சட்டங்களாலும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தைக் கட்டுப்படுத்த இயலாது; குழந்தை திருமணங்கள் தங்கள் துணையை தேர்ந்தெடுக்கும் தனிநபா் உரிமையைப் பறிக்கும் செயலாகும் என்று கூறினர்.
மேலும் குழந்தை திருமணங்களைத் தடுப்பதற்கென காவல் துறையில் சிறப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும். மாவட்ட அளவில் குழந்தை திருமண தடுப்பு அதிகாரிகளை நியமிப்பது உள்பட வழிகாட்டுதல்களை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.
- தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இருந்தபோது எடுக்கப்பட்ட முடிவின்படி, இவை ‘யூ டியூப்’ தளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படுகின்றன.
- சோதனை அடிப்படையில், நேற்று அனைத்து அமர்வுகளின் வழக்கு விசாரணைகளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன.
புதுடெல்லி:
தற்போது, சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வு முன்பு நடக்கும் வழக்கு விசாரணைகளும், தலைமை நீதிபதி அமர்வு முன்பு நடக்கும் பொது முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு விசாரணைகளும் மட்டும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இருந்தபோது எடுக்கப்பட்ட முடிவின்படி, இவை 'யூ டியூப்' தளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படுகின்றன.
இந்நிலையில், விரைவில் சுப்ரீம் கோர்ட்டின் அனைத்து அமர்வுகளிலும் வழக்கமான அனைத்து விசாரணைகளையும் நாள்தோறும் நேரடி ஒளிபரப்பு செய்ய சுப்ரீம் கோர்ட்டு திட்டமிட்டுள்ளது. நீதித்துறை செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உருவாக்க தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இம்முடிவை எடுத்துள்ளார்.
சோதனை அடிப்படையில், நேற்று அனைத்து அமர்வுகளின் வழக்கு விசாரணைகளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன.
- தமிழகம், டெல்லி இடையிலான போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
- முதல் நாளில் தமிழகம் 379 ரன்கள் குவித்தது. சாய் சுதர்சன் 202 ரன் எடுத்தார்.
புதுடெல்லி:
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடந்து வருகிறது. குரூப் டி பிரிவில் டெல்லியில் இன்று தொடங்கிய லீக் ஆட்டத்தில் தமிழகம், டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங் தேர்வு செய்தது.
இதையடுத்து, தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாய் சுதர்சன், ஜெகதீசன் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினர். ஜெகதீசன் அரைசதம் அடித்து 65 ரன்னில் அவுட் ஆனார்.
அடுத்து இறங்கிய வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சனுடன் இணைந்து நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடியைப் பிரிக்க முடியாமல் டெல்லி வீரர்கள் திணறினர். நிலைத்து நின்று ஆடிய சாய் சுதர்சன் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
இறுதியில் முதல் நாள் முடிவில் தமிழகம் 88 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 379 ரன்கள் குவித்தது. சாய் சுதர்சன் 202 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 96 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
- சத்யேந்திர ஜெயின் தாக்கல் செய்த ஜாமின் மனு பலமுறை தள்ளுபடி ஆனது.
- வழக்குடன் தொடர்புடைய தனி நபர்களுடன் தொடர்பு கொள்ளக் கூடாது என்றது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசில் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தவர் சத்யேந்திர ஜெயின். அவர் தொடர்புடைய நிறுவனங்களில் பணமோசடி நடந்ததாக 2017-ம் ஆண்டு சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இதன் அடிப்படையில் அமலாக்கத்துறையும் அவர் மீது வழக்குப்பதிவு செய்தது.
பிறகு 2022, மே 31-ம் தேதி பணமோசடி சட்டத்தின் கீழ், சத்யேந்திர ஜெயினை கைதுசெய்து திஹார் சிறையில் அடைத்தனர். இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுக்கள் பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டன.
இதற்கிடையே, 2023-ம் ஆண்டு மே மாதம் மருத்துவ காரணங்களுக்காக சத்யேந்திர ஜெயினுக்கு சுப்ரீம் கோர்ட் 6 வாரம் இடைக்கால ஜாமின் வழங்கியது. பிறகு அவர் நிரந்தர ஜாமின் கேட்டு அவர் மனு தாக்கல் செய்தார். இதனை நீதிமன்றம் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அவர் திஹார் சிறைக்கு திரும்பினார்.
டில்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் சத்யேந்திர ஜெயின் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். இதனை நீதிபதி விஷால் கோக்னே விசாரித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்து இருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
விசாரணையில் தாமதம், நீண்ட நாள் சிறைவாசம் மற்றும் வழக்கு விசாரணை துவங்க நீண்ட நாட்களாகும் என்ற உண்மையை கருத்தில் கொண்டு, குற்றம்சாட்டப்பட்டவர் நிவாரணம் பெற தகுதி உடையவர்.
பணமோசடி தடுப்பு சட்டம் போன்ற கடுமையான சட்டங்களின் கீழ் வரும் வழக்குகளில் தனிமனித சுதந்திரத்தையும் சுட்டிக்காட்டினார்.
ரூ.50 ஆயிரத்திற்கான தனி நபர் ஜாமின் பத்திரம், அதே தொகைக்கு இரண்டு பேர் உத்தரவாதம் வழங்கவேண்டும். சாட்சிகளுடனோ, வழக்குடன் தொடர்புடைய தனி நபர்களுடனோ தொடர்பு கொள்ளக்கூடாது.
விசாரணையில் எந்த வகையிலும் செல்வாக்கு செலுத்தக்கூடாது. நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என் நிபந்தனைகள் விதித்துள்ளது.
ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியினரில் ஜாமின் கிடைத்த 3வது நபர் இவர் ஆவார். இதற்கு முன்னர் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா ஆகியோரும் ஜாமினில் வெளியே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- டெல்லியின் காற்று மாசு அளவு 293 என்ற மோசமான நிலைக்கு வந்துள்ளது.
- தோல் மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
காற்று மாசு பிரச்னையால் திணறி வரும் தலைநகர் டெல்லியின் சூழல் நாளுக்குநாள் கடுமையாகி வருகிறது. இன்றைய தினம் [வெள்ளிக்கிழமை] டெல்லியின் காற்று மாசு அளவு 293 என்ற மோசமான நிலைக்கு வந்துள்ளது. டெல்லியில் பாயும் யமுனை நதியில் பனிப்படலம் போன்று ரசாயனங்கள் நுரைகளாக உருவாகி மக்களை அச்சுறுத்தி வருகிறது. காலிந்தி கஞ்ச் பகுதியில் உள்ள யமுனை ஆற்றில் காணப்பட்ட இந்த காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
நீரில் உருவாகியுள்ள நுரையில் அமோனியா மற்றும் பாஸ்பேட் அளவு அதிகம் உள்ளதால் மக்களின் ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் தோல் மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையே காற்று மாசு காரணமாக பாஜக செய்தி தொடர்பாளர் பூனாவாலா கேஸ் மாஸ்க் அணிந்து ஊடகத்துக்கு பேட்டியளித்த வீடியோவும் வைரலாகி வருகிறது. காற்று மாசை தடுக்க கடந்த டெல்லியில் பட்டாசு வெடிக்க முழுமையான தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- புதிய சிலையானது, தலையில் கிரீடம், நெற்றி திலகத்துடன் இருக்கும் வகையில் வடிவமைப்பட்டுள்ளது.
- சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் திறந்து வைத்தார்.
புதுடெல்லி:
ஆங்கியேலர் ஆட்சி காலத்தின் போது, சுப்ரீம் கோர்ட்டில் நீதி தேவதை சிலை நிறுவப்பட்டது. அந்த நீதி தேவதை சிலையின், கண்கள் கருப்பு துணியால் கட்டப்பட்டும், இடது கையில் தராசு, வலது கையில் வாளும் இருக்கும்படி அமைக்கப்பட்டு இருந்தது.
பாகுபாடு பார்த்து நீதி வழங்காமல் இருக்கவும், சரிசமமாக எடை போட்டு சரியான தீர்ப்பை வழங்க வேண்டும் என்பதையும், அநீதியை வீழ்த்த வாள் இடம் பெற வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் இந்த நீதி தேவதையின் சிலை வடிவமைக்கப்பட்டது.
இந்நிலையில், நீதி தேவதையின் சிலையில் சில மாற்றம் செய்து சுப்ரீம் கோர்ட்டில் உள்ள நூலகத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது. அதாவது நீதி தேவதையின் புதிய சிலையில், கண்களில் கருப்புத்துணி இல்லை. அதேபோல் வலது கையில் வைக்கப்பட்டிருந்த வாளுக்கு பதிலாக அரசியல் சாசன புத்தமும் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த புதிய சிலையானது, தலையில் கிரீடம், நெற்றி திலகத்துடன் இருக்கும் வகையில் வடிவமைப்பட்டுள்ளது.
இந்த புதிய நீதிதேவதை சிலை, சுப்ரீம் கோர்ட்டில் உள்ள நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் திறந்து வைத்தார்.
இந்த புதிய சிலை சொல்லும் செய்தி குறித்து வெளியான தகவலில், "சட்டம் ஒருபோதும் குருடாகாது. அது அனைவரையும் சமமாக பார்க்கிறது என்பதை வலியுறுத்தி நீதி தேவதையின் கண்கள் திறக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் சட்டங்களின்படி நீதி வழங்கப்படுகிறது என்பதை வலியுறுத்தும் வகையில், நீதி தேவதையின் வலது கையில் இடம் பெற்றிருந்த வாளுக்கு பதிலாக, அரசியலமைப்பு புத்தகம் இடம் பெற்றுள்ளது" என கூறப்பட்டுள்ளது.
- பைஜூஸ் நிறுவனம் கடந்த ஒரு ஆண்டாக பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது.
- சவால்களை எதிர்கொண்டுள்ள பைஜுவை மீண்டும் புதுப்பிக்க உள்ளேன் என்றார்.
புதுடெல்லி:
பைஜூஸ் நிறுவனம் கடந்த ஒரு ஆண்டாக பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் பைஜூஸின் அடிப்படை வணிகம் பூஜ்ஜியமாக குறைந்துள்ளது.
இந்நிலையில், பைஜூ ரவீந்திரன் மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
பைஜூசுக்கு பல துணை நிறுவனங்கள் உள்ளன. அவை தொடர்ந்து வருவாய் ஈட்டுகின்றன. துணை நிறுவனங்கள் வருவாய் ஈட்டி வருகின்றன.
இந்த துணை நிறுவனங்கள் மாணவர் சேர்க்கையில் வளர்ச்சியைக் கண்டு வருகின்றன மற்றும் நன்றாகச் செயல்படுகின்றன.
சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்டுள்ள பைஜுவை மீண்டும் புதுப்பிக்க உள்ளேன்.
நான் துபாய்க்கு ஓடினேன் என்று மக்கள் நினைப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. என் தந்தையின் சிகிச்சைக்காக ஒரு வருடம் துபாய் வந்தேன். இது இங்கு தொடர்ந்து தங்குவதற்கு வழிவகுத்தது. ஆனால் நான் எங்கும் ஓடவில்லை.
நான் மீண்டும் இந்தியாவுக்கு வருவேன், அரங்கங்களை நிரப்புவேன். நேரம் முடிவு செய்யப்படவில்லை, அது விரைவில் நடக்கும்.
அதைச் செயல்படுத்த நான் ஒரு சதவீத வாய்ப்பைப் பார்க்க வேண்டும். என்ன உத்தரவு வந்தாலும் நான் ஒரு வழியைக் கண்டுபிடிப்பேன்.
பைஜூஸ் மீண்டும் சந்தைக்கு புதிய அவதாரத்தில் வரும் என தெரிவித்தார்.
- வயநாடு பாராளுமன்ற தொகுதிக்கு நவம்பர் 13-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது
- இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்படுகின்றன.
புதுடெல்லி:
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்த வயநாடு பாராளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியையும் அறிவித்தது. அதன்படி அங்கு நவம்பர் 13-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்படுகின்றன.
இதையடுத்து வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்தார்.
இந்நிலையில், வயநாடு பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரான சத்யன் மோகேரி போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பினோய் விஸ்வம் அறிவித்துள்ளார்.
பா.ஜ.க. வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
- வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் முப்பையில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் ஏர் இந்தியா, விஸ்தாரா, இண்டிகோ உள்ளிட்ட 10 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
அதன்படி, மும்பையில் இருந்து லண்டன் சென்ற விமானம் லண்டன் விமான நிலையத்தில் தரையிறங்க ஒரு மணி நேரத்திற்கு முன்பு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியாவை சேர்ந்த 5 விமானங்களுக்கு, வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- 2014-15-ம் ஆண்டில் நேரடி வரி வசூல் 6.96 லட்சம் கோடி. 2023-24-ல் 19.60 கோடி ரூபாயாக உயர்வு.
- தனிப்பட்ட வருமான வரி வசூல் 10.45 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மோடி பிரதமராக பதவி ஏற்ற 10 ஆண்டுகளில் நேரடி வரி வசூல் 182 சதவீதம் உயர்ந்துள்ளதாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014-15 நிதியாண்டில் நேரடி வரி வசூல் 6.96 லட்சம் கோடியாக இருந்தது. இதில் கார்ப்பரேட் வரி 4.29 லட்சம் கோடியும், தனிப்பட்ட வருமான வரி வசூல் 2.66 லட்சம் கோடியாகும்.
இது 2023-24 நிதியாண்டில் 182 சதவீதம் உயர்ந்து 19.60 லட்சம் கோடி ரூபாய் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் தனிப்பட்ட வருமான வரி வசூல் 10.45 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது சுமார் 4 மடங்கு அதிகமாகும்.
2014-15-ம் ஆண்டில் income tax returns filed (including revised returns) 4.04 கோடியாக இருந்த நிலையில், 2023-24-ல் 8.61 கோடியாக உயர்ந்துள்ளது. Direct tax-to-GDP வீதம் 5.55 சதவீதத்தில் இருந்து 6.64 சதவீதமாக அதிகரித்துள்ளது.
வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 2014-15 (Assessment Year- AY) ஆண்டில் 5.70 கோடியாக இருந்த நிலையில், 2023-24-ல் 10.41 கோடியாக உயர்ந்துள்ளது.






