search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வயநாடு இடைத்தேர்தல்"

    • வயநாடு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
    • ஜம்மு காஷ்மீர், அரியானா மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டது.

    வயநாடு தொகுதியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார்.

    உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றதால், வயநாடு தொகுதி பதவியை ராஜினாமா செய்தார்.

    ராகுல் காந்தி ராஜினாமா செய்ததால், வயநாடு மக்களவை தொகுதி தற்போது காலியாக உள்ளது. இதனால், வயநாடு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இந்த சூழலில் கடந்த ஜூலை 29ம் தேதி அன்று வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நிலச்சரிவில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    மேலும், 4 மாநில சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் ஜம்மு காஷ்மீர், அரியானா மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், வயநாட்டில் இடைத்தேர்தல் நடைபெறுமா என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம் அளித்தார்.

    அதன்படி, வயநாட்டில் இயற்கை பேரிடம் காரணமாக தற்போது இடைத்தேர்தல் நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இருப்பினும் உரிய நேரத்திற்குள் வயநாடு மக்களவை தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பால் வயநாடு மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
    • விசாரணை நீதிமன்றம் வழங்கி உள்ள குறிப்பிட்ட அவகாசம் தீர்ந்துவிடும் முன் இடைத்தேர்தலுக்கு அவசரம் இல்லை.

    புதுடெல்லி:

    கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்கு மே மாதம் 10-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் நேற்று அறிவித்தார்.

    அத்துடன் காலியாக உள்ள பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மக்களவை தொகுதிக்கும், ஒடிசாவின் ஜார்சுகுடா, உத்தரபிரதேசத்தின் சான்பே, சுவர் மற்றும் மேகாலயாவின் சோஹியாங் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கும் மே 10-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

    ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பால் வயநாடு மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

    இதுபற்றி தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் கூறியதாவது:-

    பிப்ரவரி மாதம் வரையில் காலியான தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு மேல்முறையீடு செய்வதற்கு சூரத் கோர்ட்டு 30 நாள் அவகாசம் வழங்கி உள்ளது. எனவே அங்கு தேர்தல் நடத்த அவசரம் இல்லை. நாங்கள் காத்திருப்போம்.

    விசாரணை நீதிமன்றம் வழங்கி உள்ள குறிப்பிட்ட அவகாசம் தீர்ந்துவிடும் முன் இடைத்தேர்தலுக்கு அவசரம் இல்லை. எனவே வயநாடு தொகுதி தேர்தல் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

    அங்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

    எஞ்சிய பதவிக்காலம் ஓராண்டுக்குள் இருந்தால் இடைத்தேர்தல் நடத்தப்படுவதில்லை. வயநாடு தொகுதியைப் பொறுத்தமட்டில் எஞ்சிய காலம் ஓராண்டுக்கு மேல் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வயநாடு தொகுதி எம்.பி.ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் விளக்கம்.
    • தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு ஒரு மாதம் அவகாசம் உள்ளது.

    வயநாடு தொகுதி எம்.பி.ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, வயநாடு தொகுதி காலியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், வயநாடில் இடைத்ததேர்தல் நடைபெறுவது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் விளக்கம் அளித்துள்ளது.

    அப்பேது அவர், "கேரள மாநிலம் வயநாடு பாராளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்க 6 மாதம் வரை அவகாசம் உள்ளது.

    தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு ஒரு மாதம் அவகாசம் உள்ளதால் இடைத்தேர்தல் அறிவிக்க அவசரம் இல்லை" என்றார்.

    ×