என் மலர்tooltip icon

    இந்தியா

    சமத்துவம்-சமூக நீதிக்காக காங்கிரஸ் போராடி வருகிறது- பிரியங்கா காந்தி
    X

    சமத்துவம்-சமூக நீதிக்காக காங்கிரஸ் போராடி வருகிறது- பிரியங்கா காந்தி

    • நான் 35 ஆண்டுகளாக பல்வேறு தேர்தல்களுக்காக பிரசாரம் செய்து வருகிறேன்.
    • உங்களுக்கு சேவையாற்ற எனக்கு வாய்ப்பு தாருங்கள்.

    திருவனந்தபுரம்:

    வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி, இன்று ரோடு-ஷோ மூலமாக தனது பிரசாரத்தை இன்று தொடங்கினார். ரோடு-ஷோவிற்கு பிறகு நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசியதாவது:-

    நான் 35 ஆண்டுகளாக பல்வேறு தேர்தல்களுக்காக பிரசாரம் செய்து வருகிறேன். பலமுறை கட்சி நிர்வாகிகளுக்கு பிரசாரம் செய்துள்ளேன். 1989-ம் ஆண்டு 17 வயதில் என்னுடைய தந்தைக்காக பிரசாரம் செய்தேன். எனது தாய், சகோதரர் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்காக பல்வேறு தேர்தல்களில் பிரசாரம் செய்துள்ளேன்.

    இப்போது எனக்காக பிரசாரம் செய்கிறேன். எனக்காக பிரசாரம் செய்வதே இதுவே முதன்முறையாகும். இது எனக்கு புது அனுபவமாக இருக்கிறது. தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு தந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    நானும், எனது குடும்பமும் எப்போதும் உங்களுடன் இருப்போம். உங்களுக்கு சேவையாற்ற எனக்கு வாய்ப்பு தாருங்கள். சமத்துவம் மற்றும் சமூக நீதிக்காக காங்கிரஸ் போராடி வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×