என் மலர்
இந்தியா

வாலிபர் வயித்துக்குள்ள உயிரோடு நடமாடிய கரப்பான்பூச்சி.. அதுக்கு அப்புறம் என்ன ஆச்சு?
- சாலையோர உணவகத்தில் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கடுமையான வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டார்.
- அந்த கரப்பான்பூச்சி 3 சென்டிமீட்டர் நீளம் கொண்டதாக இருந்துள்ளது.
டெல்லியை சேர்ந்த வாலிபரின் வயிற்றிலிருந்து உயிருடன் இருந்த கரப்பான்பூச்சியை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. டெல்லியை சேர்ந்த 23 இளைஞர் ஒருவர் சாலையோர உணவகத்தில் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கடுமையான வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டார்.
3 நாட்கள் வலியால் அவதிப்பட்ட அவர் கடைசியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை எண்டோஸ்கோப்பி பரிசோதனைக்கு உட்படுத்திய மருத்துவர்கள் அவரது வயிற்றில் கரப்பான்பூச்சி ஒன்று உயிருடன் இருப்பதை அறிந்தனர்.
உடனே எண்டோஸ்கோப்பி முறையில் 10 நிமிடத்தில் அவரது வயிற்றில் இருந்த கரப்பான்பூச்சியை வெற்றிகரமாக மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். அந்த கரப்பான்பூச்சி 3 சென்டிமீட்டர் நீளம் கொண்டதாக இருந்துள்ளது.
இளைஞர் சாப்பிடும்போது கரப்பான் பூச்சியை விழுங்கி இருக்கலாம் என்றும் தக்க சமயத்தில் சிகிச்சை அளித்ததால்தான் சிக்கலின்றி அவரை காப்பாற்ற முடிந்தது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.






