என் மலர்
இந்தியா
- வருகிற 19-ந் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறுகிறது.
- விடுமுறை நாட்கள் நீங்கலாக 15 அமா்வுகள் இந்த கூட்டத்தொடரில் இடம்பெற உள்ளன.
பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் இன்று (டிசம்பர் 1) தொடங்கியது. வருகிற 19-ந் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறுகிறது. விடுமுறை நாட்கள் நீங்கலாக 15 அமா்வுகள் இந்த கூட்டத்தொடரில் இடம்பெற உள்ளன.
12 மாநிலங்களில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.), டெல்லி குண்டு வெடிப்பு, வாக்கு திருட்டு, டெல்லி காற்று மாசு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல் வேறு பிரச்சனைகள் குறித்து அவையில் விவாதிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு விவாதிக்க மறுக்கும் என்பதால் இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் வாக்காளர் தீவிர திருத்தம் தொடர்பான பிரச்சனையை கிளப்புவார்கள்.
கடந்த ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடை பெற்ற மழைக்கால கூட்டத் தொட ரில் பீகாா் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்களுக்கான விவாதம் குறித்த எதிர்க்கட்சிகளின் அமளியால் பாதிக்கப்பட்டது. மழைக்கால கூட்டத்தொட ரில் மக்களவையின் செயல்பாடு 31 சதவீதமாகவும், மேல்-சபையின் செயல்பாடு 39 சதவீதமாகவும் இருந்தது. குளிா்கால கூட்டத்தொடரில் சிவில் அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி வழங்குவது, இந்திய உயா் கல்வி ஆணையம் அமைப் பது, பெருநிறுவன சட்டம் மற்றும் பங்குச்சந்தை உள்ளிட்ட 10 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
10 மசோதாக்களில் 4 நிதித்துறை தொடர்புடையவை, 2 சட்டம் மற்றும் நீதித்துறை தொடர்புடையவை. கல்வி, எரிசக்தி, போக்குவரத்து துறை, உள்துறை ஆகியவை தொடர்பான தலா ஒரு மசோதாவும் அடங்கும்.
வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு கொண்டாடப்படுவதால் அதன் வரலாறு குறித்த விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பாடலில் இருந்து முக்கிய வரிகள் கடந்த 1937-ம் ஆண்டு நீக்கப்பட்டதே இந்தியாவின் பிரிவினைக்கு காரணம் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டி இருந்தார். வந்தே மாதரம் பாடலின் வரலாறு, சுதந்திர இயக்கத்தில் அதன் பங்கு குறித்து இளைஞர்களுக்கு நினைவூட்டுவதற்காக விவாதம் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நமது அனைவரது நோக்கமும் இந்திய தேசத்தின் வளர்ச்சியை மட்டுமே கொண்டதாக இருக்க வேண்டும்.
- தோல்வியை ஜீரணிக்க முடியாத சில கட்சிகள் உள்ளன.
பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்குவதற்கு முன்னதாக பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* இந்தியா எப்போதும் ஜனநாயகத்தை போற்றும் நாடு.
* பீகாரில் நடந்து முடிந்து தேர்தல் நாட்டின் ஜனநாயகத்தின் வலிமையை உலகுக்கு கூறியுள்ளது.
* நமது அனைவரது நோக்கமும் இந்திய தேசத்தின் வளர்ச்சியை மட்டுமே கொண்டதாக இருக்க வேண்டும்.
* குளிர்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒத்துழைக்க வேண்டும்.
* இந்த கூட்டத்தொடர், இந்த நாடாளுமன்றம் நாட்டைப் பற்றி என்ன நினைக்கிறது, நாட்டிற்கு என்ன செய்ய விரும்புகிறது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இந்தப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். எதிர்க்கட்சிகளும் அதன் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். அவர்கள் இதுபோன்ற பிரச்சினைகளை, வலுவான பிரச்சினைகளை எழுப்ப வேண்டும்.
* தோல்வியின் ஏமாற்றத்தை அவர்கள் கடக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, தோல்வியை ஜீரணிக்க முடியாத சில கட்சிகள் உள்ளன. பீகார் முடிவுகள் வந்து இவ்வளவு நாள் கடந்துவிட்டதால், அவர்கள் கொஞ்சம் அமைதியடைந்திருக்கலாம் என்று நான் நினைத்தேன். ஆனால் நேற்று நான் கேள்விப்பட்டதிலிருந்து, தோல்வி அவர்களை தொந்தரவு செய்ததாகத் தெரிகிறது.
* விரக்தி மன நிலையில் இருந்து வெளியே வந்து பணியாற்றுமாறு எதிர்க்கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்தார்.
- தங்கத்தை போலவே வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
- பார் வெள்ளி ஒரு லட்சத்து 96 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமான சூழலே சில நாட்களாக நீடித்து வருகிறது. கடந்த வாரமும் இதே நிலை நீடித்தாலும், வார இறுதிநாளான கடந்த 29-ந்தேதி ஒரு சவரன் 95 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் தங்கம் மீண்டும் உச்சத்திற்கு சென்றது.
இந்த நிலையில், டிசம்பர் மாத தொடக்க நாளான இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,070-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,560 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 196 ரூபாய்க்கும் கிலோவுக்கு நான்காயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 96 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
30-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,400
29-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,400
28-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,400
27-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,400
26-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,400
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
30-11-2025- ஒரு கிராம் ரூ.192
29-11-2025- ஒரு கிராம் ரூ.192
28-11-2025- ஒரு கிராம் ரூ.183
27-11-2025- ஒரு கிராம் ரூ.180
26-11-2025- ஒரு கிராம் ரூ.176
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது.
- தமிழ்நாடு- புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் இருந்து 50 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது.
சென்னை:
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 90 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. கடலூரிலிருந்து 110, புதுச்சேரியிலிருந்து 90, காரைக்காலிருந்து 180 கி.மீ. தொலைவிலும் ஆழ்ந்த காற்றழுத்தம் நிலவுகிறது.
தமிழ்நாடு- புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் இருந்து 50 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. இதன்காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர் சிரமம் அடைந்துள்ளனர்.
இதனிடையே, பலத்த காற்று வீசுவதன் காரணமாக சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- டெல்லி, கொல்கத்தா, மும்பையிலும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது.
- வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
சென்னை:
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கின்றன.
அந்த வகையில், டிசம்பர் மாதத்திற்கான வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை 10 ரூபாய் 50 காசுகள் குறைந்து ரூ.1,739.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் ரூ.1,750-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று, மற்ற மெட்ரோ நகரங்களான டெல்லி, கொல்கத்தா, மும்பையிலும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.868.50-க்கு விற்பனையாகிறது.
- படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- விபத்து குறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் குன்னத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் அரசு பேருந்தும் வேனும் மோதிக்கொண்ட விபத்தில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற அரசு பேருந்தும், கூவத்தூரில் இருந்து வேலைக்குச் செல்ல 20 பேரை ஏற்றிக்கொண்டு வந்த வேனும் நேருக்க நேர் மோதி விபத்த ஏற்பட்டது. இந்த விபத்தில் வேனில் பயணித்த தனியார் நிறுவன பெண் தொழிலாளர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.
சென்னை:
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.
- அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு- புதுச்சேரி கடற்கரையில் நிலவி வந்த டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், டிட்வா புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதியில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பெண்கள் உள்பட 11 பேர் பலி.
- 13 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 13 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே, அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், 9 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்திருப்பதும், நாற்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதும், பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும், உயரிய சிகிச்சை அளிக்க, தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். அனைவரும், விரைவில் நலம்பெற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் சமீபகாலமாக, தொடர்ந்து பேருந்து விபத்துகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதனால் அதிக உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்த விபத்துகளுக்கான காரணங்களை ஆராய்ந்து, அதற்கான தீர்வு நடவடிக்கைகளை, உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும், தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பெண்கள் உள்பட 11 பேர் பலி.
- 13 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 13 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் - பிள்ளையார்பட்டி சாலையில் அரசுப் பேருந்துகள் இரண்டு, நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி, மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரணமாகக் குணமடையும் வகையில், தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தி, உயர்தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அனைத்து கட்சி கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.
- காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சி களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இதை யொட்டி பாராளுமன்றம் சுமூகமாக நடைபெற அனைத்து கட்சி கூட்டத் துக்கு அழைப்பு விடுக்கப் பட்டது.
அதன்படி, அனைத்து கட்சி கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா, கிரண் ரிஜிஜூ, அர்ஜூன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எதிர்கட்சிகள் தரப்பில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சி களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
- சர்தார் படேலின் பெருமைகளை மறைக்க காங்கிரஸ் முயற்சித்ததாக அவர் குற்றம்சாட்டினார்.
- மேடையில் இருந்த பாஜக தலைவர்கள் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை.
குஜராத் மாநிலம் வதோதராவில் நேற்று நடைபெற்ற சர்தார் படேல் 150 ஆண்டு நிகழ்வில் மத்திய அமைச்சரும் பாஜக தேசியத் தலைவருமான ஜே.பி. நட்டா காங்கிரசை காரசாரமாக விமர்சித்துக்கொண்டிருந்தார். சர்தார் படேலின் பெருமைகளை மறைக்க காங்கிரஸ் முயற்சித்ததாக அவர் குற்றம்சாட்டினார்.
அவர் பேசிக்கொண்டிருக்கும்போது மேடைக்கு முன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் மயங்கி விழுந்தார். அவரை மற்ற அதிகாரிகள் தூக்கிச் சென்றனர். ஆனால் நட்டா இவை எதையும் பொருட்படுத்தாமல் தனது உரையை நிறுத்தாமல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்ததை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இந்த வீடியோவை எக்ஸில் பகிர்ந்துள்ள இந்திய இளைஞர் காங்கிரஸ், ஜே.பி. நட்டா பேசிக்கொண்டிருந்தபோது, பாதுகாப்புப் பணியாளர் ஒருவர் மேடை அருகே மயங்கி விழுந்துள்ளார்.
இருப்பினும், நட்டா தனது பேச்சை நிறுத்தவில்லை .மேடையில் இருந்த பாஜக தலைவர்கள் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை.
கண் முன்னால் ஒருவர் விழுந்ததைக் கூடப் பொருட்படுத்தாத பாஜக தலைவர்கள், பணவீக்கம், வேலையின்மை, விவசாயிகள் பிரச்சினைகள் போன்ற பொதுமக்களின் கஷ்டங்களைப் பற்றி எப்படி அக்கறை செலுத்துவார்கள்?
அதிகாரம் மட்டுமே முக்கியம், பொதுமக்களின் கஷ்டங்கள் ஒரு பொருட்டல்ல என்பதே பாஜகவின் யதார்த்தம். பாஜக மனித நேயத்தை விற்றுவிட்டது என்று சாட்டியுள்ளது.
இதற்கிடையே மயங்கி விழுந்தவர், நீண்ட நேரம் நின்றதால் சோர்வினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மருத்துவ உதவிக்கு பின் அவர் உடல்நிலை சீரானதாக கூறப்படுகிறது.






