search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chengalpattu accident"

    • சுனில்குமார் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடியபடி கிடந்தார்.
    • விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு அருகே உள்ள திம்மாவரம் பகுதியை சேர்ந்தவர்கள் ஏழுமலை (வயது28), விமல்ராஜ்(23). இவர்கள் மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தனர்.

    நேற்று இரவு அவர்கள் பணிமுடிந்ததும் உடன் வேலைபார்க்கும் நண்பரான செய்யூரை சேர்ந்த சுனில்குமார் என்பவருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

    இரவு 11.30 மணியளவில் அவர்கள் மறைமலைநகர் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள கார் கம்பெனி அருகில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற லாரியின் பின்பக்கம் பயங்கரமாக மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த ஏழுமலை, விமல்ராஜ், சுனில்குமார் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.

    படுகாயம் அடைந்த ஏழுமலை மற்றும் விமல் ராஜ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். சுனில்குமார் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடியபடி கிடந்தார்.

    தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த சுனில் குமாரும் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • அண்ணன்-தம்பியான தங்கராஜ், அருண்ராஜ் ஆகிய இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.
    • அரசு பஸ்- வேன் ஆகியவற்றுக்கு இடையே சிக்கிய தங்கராஜ், அருண்ராஜ் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    வண்டலூர்:

    கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி, சிவாஜி நகர், 4-வது தெருவை சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மகன்கள் தங்கராஜ்(வயது35), அருண்ராஜ்(27). இருவரும் தாய் மாமாவுடன் சேர்ந்து கூடுவாஞ்சேரியில் லேத் பட்டறை வைத்து தொழில் செய்து வந்தனர்.

    இந்தநிலையில் ஊரப்பாக்கத்தில் உள்ள ஆய்வகத்தில் தாயின் மெடிக்கல் பரிசோதனை முடிவுகளை வாங்குவதற்காக அண்ணன்-தம்பியான தங்கராஜ், அருண்ராஜ் ஆகிய இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.

    கூடுவாஞ்சேரி, ஜி.எஸ்.டி.சாலையில் வந்தபோது முன்னாள் சென்ற அரசு பஸ் ஒன்று பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்குவதற்காக நின்றது. அதன்பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த தங்கராஜூம், அருண்ராஜூம் காத்திருந்தனர்.

    அந்த நேரத்தில் அவர்களது பின்னால் அதிவேகமாக வந்த வேன் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் அரசு பஸ்- வேன் ஆகியவற்றுக்கு இடையே சிக்கிய தங்கராஜ், அருண்ராஜ் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து நடந்ததும் வேனுடன் டிரைவர் தப்பி சென்று விட்டார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள். விபத்தில் அண்ணன்-தம்பி பலியான சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ஓட்டுனர் பால்பாண்டியின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தனியார் நிறுவனத்தின் பஸ் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது.
    • விபத்து குறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    காட்டாங்கொளத்தூர்:

    தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சென்ற போது காட்டாங்கொளத்தூர் அருகே வந்த போது ஓட்டுனர் பால்பாண்டியின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தனியார் நிறுவனத்தின் பஸ் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது.

    இதில் லாரி ஓட்டுனர் பால்பாண்டிக்கு படுகாயங்கள் ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் தீயணைப்பு துறை ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணிநேரம் போராடி ஓட்டுனர் பால்பண்டியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் வந்து கொண்டு இருந்தபோது அங்கு சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
    • ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் வந்து கொண்டு இருந்தபோது அங்கு சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

    வண்டலூர்:

    தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜ்குமார் (வயது 27), வினோத்(26). என்ஜினீயர்களான இருவரும் நண்பர்கள். அவர்கள் சென்னை துரைப்பாக்கம் பகுதியில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.

    கடந்த 12-ந்தேதி இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர். பின்னர் அவர்கள் நேற்று இரவு சென்னை நோக்கி திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

    நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் கூடுவாஞ்சேரி அடுத்த ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் வந்து கொண்டு இருந்தபோது அங்கு சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரி மீது மோதியது. இதில் நணபர்கள் ராஜ்குமார், வினோத் ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி ராஜ்குமாரும், வினோத்தும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் நண்பர்கள் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • திருவள்ளூர் மாவட்டம், காலடிப்பேட்டை அருகே உள்ள சின்ன மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
    • இதனால் அரசு பஸ் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்து உள்ளது.

    மதுராந்தகம்:

    மதுராந்தகத்தை அடுத்த அச்சரப்பாக்கம் அருகே தொழுப்பேடு என்ற இடத்தில் நேற்று முன்தினம் காலை சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற அரசு பஸ் முன்னால் இரும்பு கம்பிகள் ஏற்றிச்சென்ற லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மேல்மருவத்தூரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    விபத்து நடந்ததும் அரசு பஸ் டிரைவர் முரளி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் தலையில் பலத்த காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த திருவள்ளூர் மாவட்டம், காலடிப்பேட்டை அருகே உள்ள சின்ன மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதனால் அரசு பஸ் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் உத்திரமேரூர் அருகே உள்ள பருத்திகொள்ளை கிராமத்தைச் சோர்ந்த குமார் என்பவருக்கு இடது கை துண்டாகி உள்ளது. அவர் மிகவும் ஆபத்தானநிலையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதற்கிடையே விபத்தில் சிக்கிய அரசு பஸ்சின் டிரைவர் பண்ருட்டி தாலுகா கீழகொள்ளை கிராமத்தை சேர்ந்த முரளி (வயது 44) என்பவர் அச்சரப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

    அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது லாரியை முந்தி செல்லமுயன்றபோது கட்டுப்பாட்டை இழந்ததால் பஸ் மோதி விபத்து ஏற்பட்டதாக கூறி உள்ளார்.

    இதைத்தொடர்ந்து டிரைவர் முரளியை போலீசார் மதுராந்தகம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 9 மாத கர்ப்பிணியான ரம்யா பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு மாமண்டூர் பஸ்நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
    • அப்போது மதுராந்தகத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு வேன் ஒன்று திடீரென டிரைவரின் கட்டுபாட்டை இழந்து ரம்யா மீது மோதியது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர், முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தர், கூலி தொழிலாளி. இவரது மனைவி ரம்யா(வயது20). இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டு ஆகிறது.

    இந்த நிலையில் ரம்யா 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவர் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு மாமண்டூர் பஸ்நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.

    அப்போது மதுராந்தகத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு வேன் ஒன்று திடீரென டிரைவரின் கட்டுபாட்டை இழந்து ரம்யா மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கர்ப்பிணி ரம்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு ரம்யா வயிற்றில் இருந்த 9 மாத ஆண் குழந்தை இறந்து இருப்பது தெரிந்தது. ஆபரேசன் செய்து டாக்டர்கள் குழந்தையை அகற்றினர்.

    பலத்த காயம் அடைந்த ரம்யாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து படாளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுராந்தகம் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பஸ் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
    மதுராந்தகம்:

    சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 53 பேர் தனியார் சொகுசு ஆம்னி பஸ்சில் கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்றனர்.

    அவர்கள் 4 நாட்கள் சுற்றுலா முடிந்து மீண்டும் திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

    இன்று அதிகாலை 3.30 மணியளவில் மதுராந்தகம் அருகே மேலவலம்பேட்டை என்ற இடத்தில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்தனர். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பஸ் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதில் சென்னையை சேர்ந்த நாதிஷா (வயது50) என்பவர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

    விபத்து பற்றி அறிந்ததும் மதுராந்தகம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்த சென்னை திருவான்மியூரை சேர்ந்த டில்லிராணி உள்பட 20 பேரை மீட்டு சிகிச்சைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி டில்லிராணி பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கல்பட்டு அருகே ரெயில் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Death

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அருகே நத்தப்பேட்டை - வாலாஜாபாத் இடையே உள்ள தண்டவாளத்தில் 50வயது மதிக்கத்தக்க பெண் ரெயில் மோதி பலியாகி கிடந்தார். அவர் யார்? எந்த பகு தியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.

    இதுபற்றி செங்கல்பட்டு ரெயில் போலீசார் விசாரித்து வருகின் றனர்.

    ×