செங்கல்பட்டு அருகே சரக்கு வேன் மோதி கர்ப்பிணி வயிற்றில் இருந்த 9 மாத குழந்தை பலி

9 மாத கர்ப்பிணியான ரம்யா பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு மாமண்டூர் பஸ்நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.அப்போது மதுராந்தகத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு வேன் ஒன்று திடீரென டிரைவரின் கட்டுபாட்டை இழந்து ரம்யா மீது மோதியது.
செங்கல்பட்டு அருகே சரக்கு வேன் மோதி கர்ப்பிணி வயிற்றில் இருந்த 9 மாத குழந்தை பலி
Published on

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர், முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தர், கூலி தொழிலாளி. இவரது மனைவி ரம்யா(வயது20). இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டு ஆகிறது.

இந்த நிலையில் ரம்யா 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவர் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு மாமண்டூர் பஸ்நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.

அப்போது மதுராந்தகத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு வேன் ஒன்று திடீரென டிரைவரின் கட்டுபாட்டை இழந்து ரம்யா மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கர்ப்பிணி ரம்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு ரம்யா வயிற்றில் இருந்த 9 மாத ஆண் குழந்தை இறந்து இருப்பது தெரிந்தது. ஆபரேசன் செய்து டாக்டர்கள் குழந்தையை அகற்றினர்.

பலத்த காயம் அடைந்த ரம்யாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து படாளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com