என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • விளாடிமிர் புதினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஏற்கனவே கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
    • போர்க்களத்திலிருந்து அப்புறப்படுத்தி, அவர்களை பாதுகாக்கவே இந்த செயல்

    'Bring Kids Back UA' முயற்சியின் ஒரு பகுதியாக 2000 குழந்தைகள் ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். 2000 குழந்தைகள் நாட்டிற்கு திரும்பினாலும் இன்னும் ஆயிரக்கணக்கான குழந்தைகளால் ரஷ்யாவால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

    பிப்ரவரி 2022-ல் இருந்து ரஷ்ய ராணுவம் ஆக்கிரமித்த உக்ரைன் பகுதிகளிலிருந்து வலுக்கட்டாயமாக சுமார் 20,000 குழந்தைகள் நாடுகடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்திய குற்றச்சாட்டின் கீழ், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஏற்கனவே கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

    குழந்தைகளை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்ததாக தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டிற்கு ரஷ்யா மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் போர்க்களத்திலிருந்து அவர்களை அப்புறப்படுத்தி, அவர்களை பாதுகாக்கவே அப்படி செய்ததாக தெரிவித்துள்ளது. மேலும் உறவினர்கள் முன்வந்து, குழந்தைகளின் அடையாளத்தை உறுதிசெய்யும் பட்சத்தில், அவர்களைத் திருப்பி அனுப்பத் தயாராக இருப்பதாகவும் ரஷ்யா தெரிவிக்கிறது.

     

    • ராகுல் காந்தி என்னை விட 30 வயது இளையவர்.
    • அவருடன் பணிபுரியும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காதபோது, ​​நான் எப்படி 'ராகுலியன்' ஆவேன் என்று எதிர்பார்க்க முடியும்?

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணி சங்கர் அய்யர், மற்ற காங்கிரஸ் கட்சி தலைவர்களை கடுமையான விமர்சனம் செய்து வருகிறார். சமீபத்தில் வேணுகோபால் ரவுடி எனக் கூறியிருந்தார். சசி தரூர் பாகிஸ்தானுக்கு எதிரானவர். இவர் வெளியுறவுத்துறை மந்திரி பதவியை விரும்புகிறார். கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் ராகுலியன் இல்லை என்று மணி சங்கர் அய்யர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மணி சங்கர் அய்யர் கூறியதாவது:-

    நான் காந்தியன் (காந்தி கொள்கையை பின்பற்றுபவன்), நேருவியன். ராஜிவியன். ஆனால் ராகுலியன் அல்ல. ஏனென்றால் அவர் என்னைவிட மிகவும் இளமையானவர். எனது அரசியல் வாழ்க்கையில் என்னிடம் இருந்து மிகத் தொலைவில் இருக்கிறார்.

    நான் இந்திராவியன் (இந்திராகாந்தி கொள்கைளை பின்பற்றுபவன்) என்று சொல்லமாட்டேன். ஏனென்றால் எமர்ஜென்சியை அறிவித்து ஜனநாயகத்தை கொடுங்கோன்மையாக இந்திராகாந்தி மாற்றிய நான் முற்றிலுமாக ஏற்கவில்லை.

    ராகுல் காந்தி என்னை விட 30 வயது இளையவர். அவருடன் பணிபுரியும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காதபோது, நான் எப்படி 'ராகுலியன்' ஆவேன் என்று எதிர்பார்க்க முடியும்?

    இவ்வாறு மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.

    • மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
    • இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராக உள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் விஜயின் கடைசி படம் என கூறப்படுவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. மேலும் இப்படம் ஜனவரி மாதம் 9-ந்தேதி வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால் இதுவரை வெளியாகாமல் உள்ளது.

    'ஜன நாயகன்' படத்தில் பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, பூஜா ஹெக்டே, மமிதா பைஜு மற்றும் நரேன் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை ஜெகதீஷ் பழனிசாமி மற்றும் லோஹித் என்.கே ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

    இதனிடையே, 'ஜன நாயகன்' படத்தில் நடித்துள்ள மமிதா பைஜு, விஜயுடன் பணிபுரிந்த அனுபவத்தை நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளார். மமிதா பைஜு கூறியதாவது:- விஜய் சார் படப்பிடிப்பு தளத்திற்கு மிகவும் சரியான நேரத்தில் வருபவர். மிகவும் நிதானமான இயல்புடையவராக இருந்தாலும், அவர் மிகவும் இனிமையானவர். நாம் அவரிடம் சிறிய சிறிய விஷயங்களைச் சொன்னாலும், அவர் அவற்றை நினைவில் வைத்திருப்பார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு நான் அவரைச் சந்தித்தாலும், அவர் திடீரென்று என்னிடம் அதைப் பற்றிக் கேட்பார்.

    அவருக்குப் பிடித்த உணவுகள் பற்றியும் நான் தெரிந்துக்கொண்டேன். அவர் எப்போதும் மதிய உணவாக சால்மன் (மீன்) சாப்பிடுவார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு நான் எப்போதும் அவரிடம், "சார், நீங்கள் சால்மன் (மீன்) சாப்பிட்டீர்களா?" என்று கேட்பேன், அவர் ஒவ்வொரு முறையும் புன்னகையுடன் கூறுவார்" என்றார்.

    • தேர்தல் கமிஷனர்கள் மேற்கண்ட 5 மாநிலங்களிலும் ஏற்கனவே சுற்றுப்பயணம் செய்யத் தொடங்கி விட்டனர்.
    • வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

    தமிழக சட்டசபையின் பதவிக்காலம் 10-5-2026 அன்று நிறைவடைகிறது. புதுச்சேரி சட்டசபை 15-6-2026-ல் முடிவடைகிறது. இதுபோல மேற்கு வங்காள சட்டசபை 7-5-2026-லும், அசாம் சட்டசபை 20-5-2026-லும், கேரள சட்டசபை 23-5-2026-லும் நிறைவடைகிறது. இதனால் இந்த மாநிலங்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

    இந்த தேர்தல்களுக்கான அட்டவணை மார்ச் மாத மத்தியில் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தேர்தலை முன்னிட்டு. தேர்தல் கமிஷனர்கள் மேற்கண்ட 5 மாநிலங்களிலும் ஏற்கனவே சுற்றுப்பயணம் செய்யத் தொடங்கி விட்டனர். தேர்தல் தயார்நிலையை மதிப்பிடுவதற்காக தேர்தல் அதிகாரிகள் அசாமில் முகாமிட்டனர்.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. கடந்த 2021-ம் ஆண்டு இந்த 5 மாநிலங்களுக்கும் பிப்ரவரி மாதம் 26-ந் தேதி தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாத மத்தியில்தான் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பள்ளி இறுதித் தேர்வுகளை கருத்தில்கொண்டு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் வைத்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

    தேர்தலைப் பொறுத்தவரை கடந்த முறை மேற்கு வங்காளத்தில் 8 கட்ட தேர்தல் நடைபெற்றது. அசாமில் 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • மீண்டும் சந்திக்க அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
    • சில வழிகாட்டுதல் கொள்கைகளில் உடன்பாட்டிற்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

    ஓமன் மத்யஸ்தத்தில் அமெரிக்கா ஈரான் இடையில் அணுசக்தி தொடர்பாக சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நேற்று நடந்தது.

    இந்நிலையில் பேச்சுவார்த்தைக்கு பிறகு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அவர் கூறியதவாது, "பேச்சுவார்த்தை சில வழிகளில் நன்றாகவே சென்றது. மீண்டும் சந்திக்க அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால், அதிபர் டிரம்ப் வகுத்துள்ள சில எல்லைக்கோடுகளுக்கு  ஈரான் இன்னும் அங்கீகரிக்கத் தயாராக இல்லை" என்று தெரிவித்தார்.

    மேலும், ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து அமெரிக்கா கொண்டுள்ள கவலைகளுக்கு ஈரான் தீர்வு காணாவிட்டால், ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று டிரம்ப் எச்சரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்.

    ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி பேசுகையில், இரு நாடுகளும் மோதலைத் தவிர்ப்பதற்கான சில வழிகாட்டுதல் கொள்கைகளில் உடன்பாட்டிற்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

    இந்த இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும், விரைவில் ஒரு வரைவு ஒப்பந்தத்தை தயாரிக்கும் பணி தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

    இந்த பேச்சுவார்த்தையில், ஈரானின் எண்ணெய் விற்பனை மீதான தடைகளை நீக்க வேண்டும் என்பது ஈரானின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.    

    • நீதிமன்றத்திற்கு வரும்போது நடுநிலையான மனுவுடன் வாருங்கள்.
    • நீதிமன்ற உத்தரவால் ஒருவரின் எண்ணங்களை மாற்றிவிட முடியுமா?

    நாட்டில் அதிகரித்து வரும் வெறுப்பு பேச்சுக்கு எதிராக 12 பேர் இணைந்து தாக்கல் செய்த பொதுநல மனுவை தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி நாகரத்னா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு நேற்று விசாரித்தது.

    மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், மனுதாரர்கள் சார்பில் ஆஜராகி, "நாட்டில் நிலவும் சூழல் மிகவும் நச்சுத்தன்மையுடன்மாறியுள்ளது. உச்ச நீதிமன்றத்தால் மட்டுமே இதனை சரிசெய்ய முடியும்" என்று வாதிட்டார்.

    இந்த மனுவில் பாஜகவைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத்(உ.பி), ஹிமந்த விஸ்வ சர்மா(அசாம்), தேவேந்திர பட்னாவிஸ்(மகாராஷ்டிரா), புஷ்கர் சிங் தாமி(உத்ராகண்ட்) உள்ளிட்ட சில முதல்வர்கள் மற்றும் தலைவர்களின் பெயர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி சூர்யகாந்த், "வெறுப்புப் பேச்சுகளில் ஈடுபடும் மற்றவர்களை விட்டுவிட்டு, ஒரு குறிப்பிட்ட தரப்பை மட்டும் இலக்கு வைப்பது ஏன்?" என்று கேள்வி எழுப்புனார்.

    மேலும், நீதிமன்றத்திற்கு வரும்போது நடுநிலையான மனுவுடன் வாருங்கள். வெறுப்புப் பேச்சு என்பது அனைத்துத் தரப்பிலும் உள்ளது.

    வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட வேண்டுமானால், அவை அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொருந்தக் கூடியதாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    வெறுப்புப் பேச்சு என்பது ஒருவரின் எண்ணத்திலிருந்து உருவாகிறது. நீதிமன்ற உத்தரவால் ஒருவரின் எண்ணங்களை மாற்றிவிட முடியுமா?" என்று நீதிபதி நாகரத்னா கேள்வி எழுப்பினார்.

    நீதிமன்றத்தின் விமர்சனத்தைத் தொடர்ந்து, மனுவில் உள்ள தனிநபர்களின் பெயர்களை நீக்கிவிட்டு, திருத்தப்பட்ட புதிய மனுவைத் தாக்கல் செய்ய வழக்கறிஞர் கபில் சிபல் ஒப்புக்கொண்டார். இதற்கு நீதிமன்றம் இரண்டு வார கால அவகாசம் வழங்கியுள்ளது.  

    • இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தை இன்று எதிர்கொள்கிறது.
    • பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    அகமதாபாத்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அமெரிக்கா, நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன.

    மும்பையில் அமெரிக்காவை 29 ரன் வித்தியாசத்திலும், டெல்லியில் நமீபியாவை 93 ரன் வித்தியாசத்திலும், கொழும்பில் பாகிஸ்தானை 61 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

    இந்நிலையில், இந்திய அணி 4-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தை இன்று எதிர் கொள்கிறது.

    அகமதாபாத்தில் இரவு 7 மணிக்கு இந்தப் போட்டி நடக்கிறது.நெதர்லாந்தை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இந்திய அணி இருக்கிறது.

    பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்தப் போட்டித் தொடரில் இந்திய அணி பல சாதனைகளைப் புரிந்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் ரன் குவிப்பில் புதிய சாதனை படைக்குமா என ஆவலுடன் எதிர்பார்க்கப் படுகிறது.

    டி20 போட்டியில் இந்திய அணி வங்காள தேசத்துக்கு எதிராக 297 ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராகும். இதைத் தாண்டி புதிய சரித்திரம் படைக்க காத்திருக்கிறது.

    சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்று விட்டதால் விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் மட்டுமே இதுவரை ஆடவில்லை. உடல் தகுதியுடன் இருந்தால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கருதப்படுகிறது. வெற்றி அணியே தேவை என்று கருதினால் மாற்றம் இருக்காது.

    பேட்டிங்கில் இஷான் கிஷன் (158 ரன்), கேப்டன் சூர்யகுமார் யாதவ் (128 ரன்), திலக்வர்மா, ஷிவம் துபே ஆகியோரும், பந்து வீச்சில் வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல் (தலா 6 விக்கெட்), பும்ரா (3 விக்கெட்) நல்ல நிலையில் உள்ளனர். ஆல்ரவுண்டர் பணியில் ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக செயல்படுகிறார்.

    டி20 போட்டியில் இந்திய அணி நெதர்லாந்துடன் மோதுவது 2-வது முறை. இதற்குமுன் 2022 உலகக் கோப்பையில் சிட்னியில் நடந்த ஆட்டத்தில் 56 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.

    நெதர்லாந்து ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் 2 புள்ளி பெற்றுள்ளது. பாகிஸ்தானிடம் 3 விக்கெட் வித்தியாசத்திலும், அமெரிக்காவிடம் 93 ரன் வித்தியாசத்திலும் தோற்றது. நமீபியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருந் தது.

    • தொழில்நுட்பத்தால் வேலை அழிந்துவிடாது என்பதை வரலாறு காட்டுகிறது.
    • அதன் இயல்பு மாறுகிறது மற்றும் புதிய வகையான வேலைகள் உருவாக்கப்படுகின்றன.

    செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தால் வேலை வாய்ப்பு பறிபோகும் என அஞ்சப்படுகிறது. குறிப்பாக தொழில்நுட்ப துறையில் வேலையிழப்பு குறித்து அதிக அச்சம் நிலவி வருகிறது. டெல்லியில் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடு நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடி ஏ.என்.ஐ. (ANI) செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தொழில்நுட்பத்தால் வேலை அழிந்துவிடாது என்பதை வரலாறு காட்டுகிறது. அதன் இயல்பு மாறுகிறது மற்றும் புதிய வகையான வேலைகள் உருவாக்கப்படுகின்றன. சில வேலைகள் மறுவரையறை செய்யப்படலாம் என்றாலும், டிஜிட்டல் மாற்றம் இந்தியாவின் பொருளாதாரத்தில் புதிய தொழில்நுட்ப வேலைகளையும் சேர்க்கும்.

    பல நூற்றாண்டுகளாக புதுமை மற்றும் தொழில்நுட்ப புரட்சிகள் வேலைகளை அழித்துவிடும் என்ற அச்சம் உள்ளது. இருப்பினும், புதுமை நிகழும் போதெல்லாம் புதிய வாய்ப்புகள் உருவாகும் என்பதை வரலாறு நமக்குக் கற்பிக்கிறது. AI யுகத்திலும் இதுவே உண்மையாக இருக்கும்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    • மரகத நாணயம் இரண்டாம் பாகத்தையும் ஏகேஆர் சரவணன்தான் இயக்குகிறார்
    • இப்படத்தில் கதாநாயகிகளாக நிக்கி கல்ராணி, பிரியா பவானி சங்கர் நடிக்கின்றனர்.

    தமிழ் திரையுலகில் பேண்டஸி மற்றும் நகைச்சுவை இணைந்து வெற்றிகரமாக உருவான சில படங்களில், ஒன்று மரகத நாணயம். நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி நடிப்பில், இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் வெளியான இந்த படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

    இதனைத்தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இரண்டாம் பாகத்தையும் ஏகேஆர் சரவணன்தான் இயக்குகிறார். இதில் ஆதி, நிக்கி கல்ராணி, பிரியா பவானி சங்கர், முனிஷ்காந்த், சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

    பேஷன் ஸ்டூடியோஸ், அக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி இணைந்து படத்தை தயாரித்துள்ளது. அண்மையில் மரகத நாணயம் 2' படத்தின் பூஜை நடைபெற்றது.பூஜையில் நடிகர் கார்த்தி, இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

    இந்நிலையில், 'மரகத நாணயம் 2' படப்பிடிப்பின் பூஜை வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 

    • எம்.ஜி.ஆரின் இதயக்கனி படம் வெற்றிகரமாக 225வது நாளை எட்டியுள்ளது
    • எடப்பாடி பழனிசாமி ரசிகர்களுடன் இதயக்கனி படம் பார்த்தார்.

    சென்னையில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் இதயக்கனி படம் வெற்றிகரமாக 225வது நாளை எட்டியுள்ளது.

    ஆல்பர்ட் தியேட்டரில் MGR-ன் இதயக்கனி படத்தின் 225வது நாள் வெற்றி விழாவில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ரசிகர்களுடன் படம் பார்த்தார்.

    அப்போது முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, செல்லூர் ராஜு, வேலுமணி ஆகியோர் எடப்பாடி பழனிசாமியுடன் படத்தை பார்த்தனர்.

    படம் பார்த்த பின்பு பேசிய எடப்பாடி பழனிசாமி, "எம்.ஜி.ஆர். பெயரை சொல்பவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது" என்று தெரிவித்தார்.

    எம்.ஜி.ஆர். குறித்து தவெக தலைவர் விஜய் அண்மையில் அடிக்கடி பேசிவரும் நிலையில், இதயக்கனி பட வெற்றி விழாவில் விஜயை மறைமுகமாக தாக்கி எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

    • சூப்பர் 8 சுற்றில் அகமதாபாத், சென்னை, கொல்கத்தாவில் இந்திய அணி விளையாடுகிறது.
    • சென்னையில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது.

    டி20 உலகக் கோப்பையில் ஒவ்வொரு அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி வருகின்றன. இதுவரை இந்தியா, இலங்கை, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 7 அணிகள் தகுதி பெற்றுள்ளன. "ஏ" பிரிவில் பாகிஸ்தான் அல்லது அமெரிக்கா ஆகியவற்றில் ஒரு அணி தகுதி பெற வேண்டியுள்ளது.

    இந்த நிலையில் சூப்பர் 8 சுற்றில் இந்தியா மோதும் போட்டிகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    குரூப் 1-ல் இந்தியா X1, வெஸ்ட் இண்டீஸ் X2, ஆஸ்திரேலியா X3, தென்ஆப்பிரிக்கா X4 என்று அழைக்கப்படுகிறது.

    அதன்படி இந்தியா வருகிற ஞாயிற்றுக்கிழமை (22-ந்தேதி) தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி அகமதாபாத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

    26-ந்தேதி (வியாழக்கிழமை) ஜிம்பாப்வேவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

    3-வது மற்றும் கடைசி போட்டியில் வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்கிறது. இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மார்ச் 1-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

    • தாரிக் ரஹ்மான் கட்சி 297 இடங்களில் 209 இடங்களில் வெற்றி பெற்றது.
    • 17 வருடத்திற்குப் பிறகு சொந்த நாடு திரும்பி ஆட்சியை பிடித்துள்ளார்.

    வங்கதேச நாட்டின் புதிய பிரதமராக கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் இன்று மதியம் பதவி ஏற்றுக் கொண்டார். 17 வருடத்திற்குப் பிறகு சொந்த நாடு திரும்பிய நிலையில் தேர்தல் களத்தில் நின்று பெற்றி பெற்றுள்ளார்.

    60 வயதான வங்கதேசம் தேசியவாத கட்சி (BNP) தலைவர் தாரிக் ரஹ்மான் இன்று பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து அமைச்சரவை பதவி ஏற்க உள்ளது. முன்னதாக பாராளுமன்ற BNP கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 5 ஆண்டுகள் பிரதமாக இருப்பார்.

    வங்கதேசத்தின் 13-வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த 12-ந்தேதி நடைபெற்றது. இதில் 297 இடங்களில் 209 இடங்களில் பிஎன்பி கட்சி வெற்றி பெற்றது. வலது சாரி கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி 68 இடங்களை பிடித்தது.

    ×