என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • வருமானம் ஈட்டாத கடனை வாங்கி செலவு செய்யும் அரசாக தி.மு.க. அரசு உள்ளது.
    • உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 2% அளவிற்கு குறைந்துள்ளது.

    தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் கோவையில் தமிழக பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தி.மு.க. அரசின் பட்ஜெட்டால் தமிழக மக்களுக்கு எந்தப் பலனும் இல்லை.

    * வருமானம் ஈட்டாத கடனை வாங்கி செலவு செய்யும் அரசாக தி.மு.க. அரசு உள்ளது.

    * தி.மு.க. அரசு தனது கடைசி பட்ஜெட் உரையிலும் பொதுமக்களை ஏமாற்றுவதை விடவில்லை.

    * பல்வேறு மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் பட்ஜெட்டில் பொய் சொல்லுவேன் என நிதி அமைச்சர் அடம்பிடித்திருக்கிறார்.

    * எது குறித்தும் அக்கறை இல்லாமல் வழக்கம்போல பட்ஜெட்டில் பொய்களை வாசித்துள்ளார் நிதி அமைச்சர்.

    * 2027 மார்ச் 31-ல் தமிழகத்தின் மொத்த கடன்தொகை 10.62 லட்சம் கோடியாக இருக்கும் என்று பட்ஜெட்டில் உள்ளது.

    * கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்க திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை நிதியமைச்சர் ஏன் சமர்ப்பிக்கவில்லை.

    * உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 2% அளவிற்கு குறைந்துள்ளது.

    * கோவில்கள் புனரமைப்புக்காக ரூ.8,200 கோடி செலவு செய்துள்ளதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    * வெறும் ரூ.82 கோடி மட்டுமே கோவில்கள் புனரமைப்புக்காக செலவிடப்பட்டுள்ளது.

    * கோவில்கள் புனரமைப்பு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    * தி.மு.க. அரசின் தோழி திட்டம், கலைஞர் கனவு திட்டம் ஆகியவை மத்திய அரசின் திட்டங்கள்.

    * தமிழ்நாட்டுக்கு மொத்தமாக பூஜ்ஜியத்தை மட்டுமே கொடுத்துள்ளது தி.மு.க. அரசின் பட்ஜெட்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2,171 கோடி மதிப்பீட்டில் மடிக்கணிகள் வழங்கப்பட்டுள்ளன.
    • சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.17,088 கோடி ஒதுக்கீடு.

    சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * பெண் ஓதுவார் நியமனம் தமிழக அரசின் மகத்தான சாதனை.

    * 6 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 19 தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    * தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41 சதவீதம் பேர் தமிழ்நாட்டு பெண்கள்.

    * ஏழை எளிய தாய்மார்களின் துயரை துடைக்கும் வகையில் காலை சிற்றுண்டித் திட்டம். ரூ.1884 கோடியில் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் நடைமுறையில் உள்ளது.

    * 25 இடங்களில் மூத்த குடிமைக்களுக்காக அன்பு சோலை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    * பெண்கள் பெயரில் சொத்துக்களை பதிவு செய்வதற்கான கட்டணத்தில் 1 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

    * அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு, பணி உயர்விலும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    * அரசு மருத்துவமனைகளில் மிகவும் பாதுகாப்பான பிரசவங்களில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

    * மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூ.1,471 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    * நாட்டிலேயே முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

    * அனைத்து சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கும் ரூ.5,463 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    * TNWESafe தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு பாதுகாப்பு திட்டம்.

    * மதுரையில் உள்ள கலைஞர் நூலகம் தென் தமிழ்நாட்டில் அறிவாலயமாக உள்ளது.

    * பள்ளிக்கல்வித்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.48,534 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    * கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2,171 கோடி மதிப்பீட்டில் மடிக்கணிகள் வழங்கப்பட்டுள்ளன.

    * சேலம், கோவை, நெல்லை அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன்மிகு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    * கடந்த 5 ஆண்டுகளில் 38 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.

    * உயர்கல்வித்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.8,505 கோடி ஒதுக்கீடு

    * உயர்கல்வியில் தேசிய சராசரியை விட 47% என்ற அளவில் தமிழகம் முதலிடம்.

    * முதலமைச்சரின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    * குடிமைப் பணித் தேர்வுகளில் வென்ற 59 பேரில் 52 பேர் நான் முதல்வன் திட்ட பயனாளிகள்.

    * சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.17,088 கோடி ஒதுக்கீடு

    * மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண்கள் திட்டத்தில் 6.95 லட்சம் கல்லூரி மாணவிகள் பயனடைந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கீழடி, பொருநை அருங்காட்சியகங்கள் திறக்கப்பட்டு மக்களின் வரவேற்பை பெற்றுள்ளன.
    • வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களின் பிள்ளைகள் 1,400 பேர் தமிழ் கற்று பயனடைந்துள்ளனர்.

    சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

    நான்கரை ஆண்டுகளில் தி.மு.க. அரசு செய்த சாதனைத் திட்டங்களை பட்டியலிட்டு அமைச்சர் தங்ககம் தென்னரசு சட்டசபையில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்கும் இறுதிப்போரை தொடங்கி உள்ளோம்.

    * அனைவருக்கும் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய நீர் வளம் பெருக்கி உணவு உற்பத்தியில் வரலாறு காணாத சாதனையை செய்துள்ளோம்.

    * உலகை வெல்லும் இளைஞர்களை உருவாக்கிட நாம் வடிவமைத்த திட்டங்கள் அனைத்தும் வெற்றி.

    * மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை உள்ளிட்ட சவால்களுடன் பயணம் செய்து வருகிறோம்.

    * பன்னாட்டுத் தனித் தமிழ் கருத்தரங்கம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

    * கீழடி, பொருநை அருங்காட்சியகங்கள் திறக்கப்பட்டு மக்களின் வரவேற்பை பெற்றுள்ளன.

    * தந்தை பெரியாரின் நூல்கள் 21 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன.

    * கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவரின் சிலைக்கு பேரறிவுச் சிலை என பெயர் சூட்டியவர் முதலமைச்சர்.

    * தமிழக அரசின் திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கி இருக்கின்றன.

    * வரவு செலவு திட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதை கலைஞர் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

    * தமிழ்தாய் வாழ்த்தை மாநில பாடலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது

    * தமிழக அரசின் முத்திரை திட்டங்களில் முதன்மையானது மகளிர் உரிமைத் தொகை திட்டம். ஒரு கோடியே 31 லட்சம் மகளிர் வங்கிக் கணக்கில் 3 மாத தொகை ரூ.3000, கோடை கால சிறப்புத் தொகை ரூ.2000 என ரூ.5000 வரவு வைக்கப்பட்டது.

    * ஒரே நாளில் ரூ.6500 கோடி நிதியை ஏழை எளியவரின் கரங்களுக்கு சென்று சேர்த்தவர் முதலமைச்சர்.

    * மகளிர் தற்சார்பு வாழ்வுக்காக சுய உதவிக்குழுக்களை கலைஞர் கருணாநிதி தொடங்கினார்.

    * விடியல் பயணம் திட்டம் மூலம் 881 கோடி முறை மகளிர் பாதுகாப்பாக பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    * வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களின் பிள்ளைகள் 1,400 பேர் தமிழ் கற்று பயனடைந்துள்ளனர்.

    * கைம்பெண்களின் கண்ணிய வாழ்வை உறுதி செய்திட நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

    * மகப்பேறு இறப்பு விகிதம் ஒரு லட்சத்திற்கு 35 என்ற அளவில் உள்ளது.

    * புதிய அருங்காட்சியகங்கள் அமைப்பதற்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.285 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    * மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு ரூ.630 கோடியில் 10,469 வீடுகள் கட்டித்தரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடித்து 'ஸ்லிம்' ஆகியுள்ளார்.
    • தமிழில் 2010-ம் ஆண்டு வெளியான 'பெண் சிங்கம்' படத்தில் ரம்பா கடைசியாக நடித்திருந்தார்.

    90 கிட்ஸ்களின் விருப்பமான நடிகைகளில் முக்கியமானவர் ரம்பா. 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தில் 'அழகிய லைலா...' பாடலில் ரம்பாவின் உடை பறக்கும் ஆட்டத்தை யாருமே மறக்க முடியாது. அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள ரம்பாவுக்கு ரசிகர்கள் ஏராளம்.

    'தொடை அழகி' என ரசிகர்களால் வர்ணிக்கப்பட்ட ரம்பா, 2010-ம் ஆண்டு தொழில் அதிபர் இந்திரகுமாரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ரம்பா, தற்போது கனடாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சுமார் 16 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருந்த ரம்பா, அவ்வப்போது சின்னத்திரையில் மட்டும் தலைகாட்டி வந்தார். தற்போது விரைவில் வெள்ளித்திரைக்கும் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். இதற்காக உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடித்து 'ஸ்லிம்' ஆகியுள்ளார். புதிய கதைகள் கேட்டு வரும் ரம்பா ஓரிரு கதைகளை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழில் 2010-ம் ஆண்டு வெளியான 'பெண் சிங்கம்' படத்தில் ரம்பா கடைசியாக நடித்திருந்தார். இதன்மூலம் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு பிறகு சினிமாவில் மறுபிரவேசம் எடுக்கவுள்ளார் 49 வயதாகும் ரம்பா. இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

    • இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொள்கிறார்.
    • யூனுஸ் தொலைக்காட்சியில் உரையாற்றினார்.

    வங்கதேசத்தில் 2024 ஆகஸ்டில் மாணவர் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது. தொடர்ந்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.

    ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த 18 மாதங்கள் கழித்து கடந்த பிப்ரவரி 12 அன்று அங்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது.

    மொத்தம் உள்ள 300 இடங்களில் 212 இடங்களைக் கைப்பற்றி தாரிக் ரஹ்மான் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாதக் கட்சி (BNP) கூட்டணி வெற்றி அமோக வெற்றி பெற்றது.

     BNP சார்பில் போட்டியிட்ட நான்கு சிறுபான்மை சமூக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் கோயேஷ்வர் சந்திர ராய் மற்றும் நிதாய் ராய் சவுத்ரி ஆகிய இரண்டு இந்துத் தலைவர்களும் அடங்குவர். 

    இந்நிலையில் வங்கதேசத்தில் நிலவி வந்த இடைக்கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ள நிலையில், அந்நாட்டின் இடைக்காலத் தலைவர் முஹம்மது யூனுஸ் தனது பதவியை நேற்று அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தார்.

    தொடர்ந்து தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராக இன்று பொறுப்பேற்கிறார். முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனான தாரிக் ரஹ்மான் கடந்த 17 ஆண்டுகளாக லண்டனில் வசித்து வந்தார்.

    கடந்த டிசம்பரில் தாய் கலீதாவின் மரணத்தின் பின் அவர் நாடு திரும்பினார். கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற 3 மாதத்தில் மாபெரும் வெற்றி பெற்று வங்கதேச பிரதமர் ஆகிறார். சுமார் 32 முதல் 42 பேரை கொண்ட அமைச்சரவையை தாரிக் ரஹ்மான் அமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    இன்று அவரின் பதவியேற்பு விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொள்கிறார்.

    இதற்கிடையே தொலைக்காட்சியில் உரையாற்றிய யூனுஸ், "இன்று இடைக்கால அரசு விலகுகிறது. ஆனால், நாம் தொடங்கியுள்ள ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

    • திருமணத்திற்கு முன் யாரையும் முழுமையாக நம்பிவிடக் கூடாது.
    • ஒருவேளை நாங்கள் பழமைவாதிகளாக இருக்கலாம்.

    திருமணம் செய்வதாகப் பொய் வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவரால் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்ட நபரின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் நேற்று விசாரித்தது.

    விசாரணையில் நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளது.

    நீதிபதி நாகரத்னா கூறியதாவது, திருமணத்திற்கு முன்பு ஒரு ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் முற்றிலும் அந்நியர்களே.

    அவர்களது உறவு எவ்வளவு நெருக்கமானதாக இருந்தாலும், திருமணத்திற்கு முன்பே அவர்கள் எப்படி உடலுறவில் ஈடுபட முடிகிறது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    ஒருவேளை நாங்கள் பழமைவாதிகளாக இருக்கலாம், ஆனால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திருமணத்திற்கு முன் யாரையும் முழுமையாக நம்பிவிடக் கூடாது.

    உடலுறவில் ஈடுபடுவதற்கு முன் அதன் விளைவுகளைச் சிந்திப்பது அவசியம்" என்று கூறினார்.

    மேலும், புகாரளித்த பெண், குற்றம் சாட்டப்பட்டவருடன் சம்மதத்துடன் உறவு வைத்ததாக தெரிவதாகக் குறிப்பிட்டனர்.

    எனவே பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இழப்பீடு வழங்கி வழக்கை முடிக்க முடியுமா என்பது குறித்து ஆராயுமாறு இரு தரப்பிற்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.  

    • கடந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா தனது முதல் போட்டியில் தோற்றது.
    • அதன்பின் தொடர்ந்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது- எம்.ஏ. பேபி

    கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பினராயி விஜயன் தலைமையிலான LDF-க்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மேயர் பதவியை பாஜக கைப்பற்றியுள்ளது. இது வரவிருக்கின்ற சட்டசபை தேர்தலிலும் தொடரும் என பாஜக சொல்கிறது.

    இந்த நிலையில் இந்த தோல்வி தற்காலிகமானது. பினராயி விஜயன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக எம்.ஏ. பேபி கூறியதாவது:-

    கடந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா தனது முதல் போட்டியில் சவுதி அரேபியாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. ஆனால், அதன்பின் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆகவே, எங்களுடைய உள்ளாட்சி தேர்தல் பின்னடைவு இதேபோல் சென்று கொண்டிருக்கிறது.

    டெல்லியில் இருந்து வந்த காங்கிரஸ் தலைவர் (மணிசங்கர் அய்யர்) பினராயி விஜயன் மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று கூறியுள்ளார். பொதுவாக மக்களின் நினைப்பதை அவர் கூறியுள்ளார்.

    இவ்வாறு எம்.ஏ. பேபி தெரிவித்துள்ளார்.

    • போஸ்ட்பெயிட் திட்டங்களில் அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகிறது.
    • ஏர்டெல் நிறுவனம் முதலில் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு வழங்கியது.

    இந்திய டெலிகம் சந்தையில் முன்னணி நிறுவனமான ஏர்டெல் தனது போஸ்ட்பெயிட் பயனர்கள் அனைவருக்கும் அன்லிமிட்டெட் டேட்டா வழங்கியுள்ளது. அன்லிமிட்டெட் டேட்டா சலுகை தற்போது அனைத்து போஸ்ட்பெயிட் திட்டங்களுக்கும் வழங்கப்படுகிறது. கொல்கத்தா வட்டாரத்தில் உள்ள அனைத்து போஸ்ட்பெயிட் திட்டங்களிலும் அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகிறது.

    குறைந்த விலையில் கிடைக்கும் என்ட்ரி லெவல் திட்டம் தொடங்கி விலை உயர்ந்த திட்டம் வரை அனைத்திலும் பயனர்கள் அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் ஏர்டெல் போஸ்ட்பெயிட் திட்டத்தின் அடிப்படை விலை மாதம் ரூ. 449 முதல் தொடங்குகிறது. தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் அன்லிமிட்டெட் டேட்டா திட்டத்தில் பயனர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 300 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படும்.

    இதேபோன்ற அறிவிப்பை ஏர்டெல் நிறுவனம் முதலில் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு வழங்கியது. எனினும் தேர்வு செய்யப்பட்ட ரீசார்ஜ்களில் மட்டுமே அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகிறது. போஸ்ட்பெயிட் திட்டங்களை பொறுத்தவரை அனைத்து திட்டங்களிலும் பயனர்கள் அன்லிமிட்டெட் டேட்டா பயன்படுத்தலாம். 

    • நயினார் நாகேந்திரனை கண்டித்து நடிகை திரிஷா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    • திரிஷாவின் அறிக்கைக்கு பிறகு செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் பேசினார்

    த.வெ.க தலைவர் விஜய் மற்றும் திரிஷாவை ஒப்பிட்டு அநாகரிகமாக விமர்சித்தது தொடர்பாக நயினார் நாகேந்திரனை கண்டித்து நடிகை திரிஷா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், "அரசியல் துறையில் உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒரு கட்சித் தலைவரிடம் இருந்து இத்தகைய பேச்சை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை" என்று திரிஷா குறிப்பிட்டுள்ளார்.

    திரிஷாவின் அறிக்கைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், "நடிகை திரிஷா குறித்த கருத்துக்கு மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

    • மாணிக்கம் தாகூரின் பேச்சு திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
    • கார்கேவை சந்திக்க மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பெங்களூரு புறப்பட்டார்.

    மதுரையில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.

    இந்த கூட்டத்தில் பேசிய மாணிக்கம் தாகூர், "எங்கள் பலம் இல்லாமல் நீங்கள் (திமுக) அரியணையில் ஏறி இருக்க முடியாது என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் செய்ததையும் நாங்கள் மறக்கவில்லை. தோழமையாக இருக்கும்போது நாங்கள் கேட்பது என்னவென்றால், நாங்கள் உங்களுக்கு மரியாதை கொடுக்கிறோம். நீங்களும் எங்களுக்கு அதே மரியாதையை கொடுக்க வேண்டும் என்பதுதான். எங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லையென்றால் திருப்பி அடிப்போம்" என்று தெரிவித்தார்.

    மாணிக்கம் தாகூரின் பேச்சு திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கேவை சந்திக்க மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பெங்களூரு புறப்பட்டார்.

    இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, "மதுரை காங்கிரஸ் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து எனக்குத் தெரியாது. இத்தனை காலம் பேசாமல் தேர்தல் நேரத்தில் சர்ச்சை கருத்தை பேசுவது ஏன்?"

    கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக் கூடாது என காங்கிரஸ் தலைமை கூறியுள்ளது. அகில இந்தியத் தலைவர்களை விட மாணிக்கம் தாகூர் பெரிய ஆளா?

    அறைக்குள் பேச வேண்டியதை பொது வெளியில் பேசினால் எப்படி அனுமதிக்க முடியும்? அவர் மீதான புகார் குறித்து ஆலோசிக்கவே பெங்களூரு செல்கிறேன்" என்று தெரிவித்தார்

    • பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் பேச்சு அடிப்படை மனிதாபிமானம் அற்றது.
    • இத்தகைய நச்சுக்கருத்துக்களைத் தமிழக வெற்றிக் கழகம் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது

    மதுரையில் இன்று காலை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,"விஜய் கூட்டங்களில் உயிரிழப்புகள் நடந்தது நல்ல சகுணம் தானே" என சிரித்துக் கொண்டே பேசினார்.

    இதற்கு தவெக தரப்பில் கண்டனம் எழுந்துள்ளது. தவெக பரப்புரை செயலாள் நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    அரசியலில் புதிய பாய்ச்சலை நிகழ்த்தி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சியைக் கண்டு அஞ்சும் சக்திகள், இன்று தங்களின் மனிதாபிமானமற்ற முகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

    அறிவாலய கொத்தடிமை ஊதுகுழலாகவே மாறிவிட்ட கமலாலய கள்ளக்கூட்டணி தலைவருக்கு கண்டனம். ஒருவர் உயிரிழந்த நிகழ்வு"நல்ல சகுனம்" என்று கேலி செய்துள்ள பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் பேச்சு அடிப்படை மனிதாபிமானம் அற்றது.

    அரசியல் நாகரிகம் என்பது எதிரிகளுக்கும் பொதுவானது. ஆனால், அதிகார மமதையில் இருப்பவர்களுக்கும், தங்களை அறிவாலயத்தின் "கொத்தடிமை ஊதுகுழலாக" மாற்றிக்கொண்டு செயல்படும் கமலாலயத்தின் "கள்ளக்கூட்டணி" தலைவர்களுக்கும் மனிதாபிமானம் என்றால் என்னவென்றே தெரியவில்லை.

    திராவிட மாடல் என்று தம்பட்டம் அடிக்கும் திமுகவும், அவர்களுக்கு மறைமுகமாகத் துணை போகும் பாஜகவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பது இந்த இழிவான கருத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

    மரணத்தில் கூட அரசியல் லாபம் தேடும் இந்த "கள்ளக்கூட்டணி" மனநிலை அருவருக்கத்தக்கது.

    ஒரு இழப்பை ஏளனம் செய்வது, தமிழக வெற்றிக் கழகத்தின் கோடிக்கணக்கான தம்பிகளின் இதயங்களில் நெருப்பை மூட்டுவதற்குச் சமம். மக்களின் உணர்வுகளோடு விளையாடும் இதுபோன்ற தலைவர்கள், வரும் தேர்தலில் மக்களால் தக்க பாடம் புகட்டப்படுவார்கள்.

    அறிவாலயத்தின் ஆணைக்கிணங்க செயல்படும் இத்தகைய ஊதுகுழல்கள், நமது கழகத்தின் வளர்ச்சியைத் தடுக்கப் போடும் சதித் திட்டங்கள் அனைத்தும் தவிடுபொடியாகும். மக்களின் துயரத்தில் இன்பம் காணும் இத்தகைய நச்சுக்கருத்துக்களைத் தமிழக வெற்றிக் கழகம் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது.

    தொடர்ந்து கொச்சையான அநாகரீக மனிதாபிமானமற்ற கருத்தை வெளியிட்டு வரும் நயினார் நாகேந்திரன் உடனடியாகத் தனது பேச்சிற்குப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பாபர் அசாம் 5 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
    • உஸ்மான் கான் அதிகபட்சமாக 34 பந்தில் 44 ரன்கள் அடித்தார்.

    டி20 உலகக் கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி கொழும்பில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் சேர்த்தது. இஷான் கிஷன் 40 பந்தில் 77 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 29 பந்தில் 32 ரன்களும், ஷிவம் துபே 17 பந்தில் 27 ரன்களும் அடித்தனர். ரிங்கு சிங் 4 பந்தில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் அணியில் சயீம் ஆயுப் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. ஹர்திக் பாண்ட்யா முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரின் 4-வது பந்தில் சஹிப்சதா ஃபர்ஹான் ரிங்கு சிங்குடன் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஓவரை ஹர்திக் பாண்ட்யா மெய்டன் ஓவராக வீசினார்

    2-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை ஆயுப் சிக்சருக்கு தூக்கினார். 2-வது பந்தில் எல்.பி.பி.டபிள்யூ ஆனார். 5-வது பந்தில் பவுண்டரி அடித்த சல்மான் ஆகா, கடைசி பந்தில் ஹர்திக் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் பாகிஸ்தான் 13 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்த வந்த பாபர் அசாம் 5 ரன்னில் அக்சர் படேல் பந்தில் வெளியேறினார்.

    விக்கெட் கீப்பர் உஸ்மான் கான் சிறப்பாக விளையாடி 34 பந்தில் 44 ரன்கள் எடுத்து அக்சர் படேல் பந்தில் ஸ்டம்பிங் ஆனார்.

    அதன்பின் பாகிஸ்தான விக்கெட்டுகள மளமளவென சரிந்தது. இதனால் பாகிஸ்தான் 18 ஓவரில் 114 ரன்களில் ஆல்அவுட் ஆகி 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. பும்ரா, அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம் இந்தியா 3 போட்டிகளில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

    ×