டிரம்ப் நிபந்தனைகளுக்கு உடன்பட மறுக்கும் ஈரான்.. ராணுவ நடவடிக்கைக்கு வாய்ப்பு என வான்ஸ் மிரட்டல்

மீண்டும் சந்திக்க அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.சில வழிகாட்டுதல் கொள்கைகளில் உடன்பாட்டிற்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார்.
டிரம்ப் நிபந்தனைகளுக்கு உடன்பட மறுக்கும் ஈரான்.. ராணுவ நடவடிக்கைக்கு வாய்ப்பு என வான்ஸ் மிரட்டல்
Published on

ஓமன் மத்யஸ்தத்தில் அமெரிக்கா ஈரான் இடையில் அணுசக்தி தொடர்பாக சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நேற்று நடந்தது.

இந்நிலையில் பேச்சுவார்த்தைக்கு பிறகு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதவாது, "பேச்சுவார்த்தை சில வழிகளில் நன்றாகவே சென்றது. மீண்டும் சந்திக்க அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால், அதிபர் டிரம்ப் வகுத்துள்ள சில எல்லைக்கோடுகளுக்கு  ஈரான் இன்னும் அங்கீகரிக்கத் தயாராக இல்லை" என்று தெரிவித்தார்.

மேலும், ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து அமெரிக்கா கொண்டுள்ள கவலைகளுக்கு ஈரான் தீர்வு காணாவிட்டால், ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று டிரம்ப் எச்சரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்.

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி பேசுகையில், இரு நாடுகளும் மோதலைத் தவிர்ப்பதற்கான சில வழிகாட்டுதல் கொள்கைகளில் உடன்பாட்டிற்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும், விரைவில் ஒரு வரைவு ஒப்பந்தத்தை தயாரிக்கும் பணி தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

இந்த பேச்சுவார்த்தையில், ஈரானின் எண்ணெய் விற்பனை மீதான தடைகளை நீக்க வேண்டும் என்பது ஈரானின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.    

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com