என் மலர்
ஆசிரியர் தேர்வு
- இது உணவு மட்டுமல்ல; உயர்வுக்கான உரம்!
- நாட்டுக்கே முன்னோடியாகத் திகழும் நமது பணிகள் தொடரும்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
காலை உணவுத் திட்டத்தில், இனி 20 இலட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் பசியாறுவார்கள்!
நீதிக்கட்சி முதல் நமது #DravidianModel அரசு வரை பள்ளிக் குழந்தைகளுக்கு உணவளித்து வயிற்றுப்பசியைப் போக்கி, அறிவுப்பசிக்குக் கல்வி வழங்குகிறோம். இது உணவு மட்டுமல்ல; உயர்வுக்கான உரம்!
வரும் 26-08-2025 அன்று நகர்ப்புறங்களிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் #CMBreakfastScheme விரிவாக்கம் செய்கிறோம்.
நாட்டுக்கே முன்னோடியாகத் திகழும் நமது பணிகள் தொடரும்! தமிழ்நாடு நாளும் உயரும்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 24 வருடத்திற்குப் பிறகு ஆப்பிரிக்காவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்.
- தென்ஆப்பிரிக்காவில் 8 இடங்களில் 44 போட்டிகளை நடத்த திட்டம்.
2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆப்பிரிக்காவில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. ஆப்பிரிக்கா கண்டம் என்றாலும் பெரும்பாலான போட்டிகளில் தென்ஆப்பிரிக்காவில்தான் நடைபெறும். தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் அதற்கான பணிகளை செய்து வருகிறது.
இந்த நிலையில் மொத்த போட்டிகளில் 44 போட்டிகள் தென்ஆப்பிரிக்காவில் நடைபெறும். 8 இடங்களில் போட்டி நடத்தப்படும். 10 போட்டிகளில் நமீபியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளில் நடத்தப்படும் என உலகக்கோப்பை தொடருக்கான தங்களது திட்டங்களை தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் விவரித்துள்ளது.
2003ம் ஆண்டு ஆப்பிரிக்கால் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அதன்பின் 24 வருடங்கள் கழித்து தற்போது அங்கு நடைபெற இருக்கிறது.
- கனமழை காரணமாக சிற்றாறில் வெள்ளம் பெருக்கெடுத்து காட்டாறாக ஓடியது.
- தனது மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பையுடன் சாகச பயணத்தை மேற்கொண்டார்.
சிம்லா:
இமாசலபிரதேசம் மண்டி அருகே உள்ள சவுகார்காட் பகுதியில் சுந்தர் என்ற மலைக்கிராமம் உள்ளது. ஆஸ்பத்திரி எதுவும் இல்லாத அவலநிலை கொண்ட இந்த கிராம மக்களுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக பக்கத்து ஊரான டிகாரில் இருந்துதான் டாக்டர் அல்லது நர்சு வரவேண்டும். இந்தநிலையில் அக்கிராமத்தில் வசித்துவரும் இளம்பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்து 2 மாதங்களாகின.
பச்சிளம் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டும் என்றநிலையில் மலைப்பகுதியில் அமைந்துள்ள அந்த கிராமத்தை கடந்த செல்ல சிற்றாறு ஒன்றை கடக்க வேண்டும். தற்போது அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக சிற்றாறில் வெள்ளம் பெருக்கெடுத்து காட்டாறாக ஓடியது. இதனால் தனது குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த முடியாமல் நோய்வாய்ப்பட்டுவிடுமோ என்று அதன் தாய் அஞ்சினார்.
ஆனால் டிகாரில் அரசு நர்சாக பணிபுரிந்து வரும் கமலாவோ, குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தியே ஆகவேண்டும் என ஒற்றைக்காலில் நின்றார். அதற்காக தனது மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பையுடன் சாகச பயணத்தை மேற்கொண்டார். இடையே முட்டுக்கட்டையாக இருந்த காட்டாற்றை, உயிரை துச்சமாக எண்ணி கடந்து கடமையை நிறைவேற்றிவிட்டு திரும்பினார்.
ஆர்ப்பரிக்கும் வெள்ளத்தோடு பாய்ந்தோடிய ஆற்றை கடக்க, அதனிடையே இருந்த பாறாங்கற்கள் மீது கமலாவின் கால்கள் துள்ளிக்குதிக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வலைத்தளவாசிகளின் நெஞ்சை உறைய செய்து 'வைரல்' ஆகி வருகிறது.
நர்சு கமலாவின் மனதிடத்துடன் கூடிய சேவை மனப்பான்மையை பாராட்டி வாழ்த்துகள் குவிகின்றன.
- சீனாவில் கட்டுமான பணியின்போது ரெயில்வே பாலம் இடிந்து விழுந்தது.
- இந்த விபத்தில் 12 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர்.
பீஜிங்:
சீனாவின் குயிங்காய் மாகாணத்தில் மஞ்சள் ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் மீது மிகப்பெரிய ரெயில்வே பாலம் கட்டப்பட்டு வருகிறது.
2 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த பாலம் கட்டுமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்தப் பாலம் இடிந்து விழுந்தது.
இதனால் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் ஆற்றில் விழுந்தனர். இதுகுறித்து மீட்பு படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் அவர்கள் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த ஆற்றில் இருந்து 12 பேர் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு அந்த நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் மேலும் 4 பேர் ஆற்றில் விழுந்து மாயமாகி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே ஹெலிகாப்டர், படகு மூலம் அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கட்டுமான பணியின்போதே பாலம் இடிந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுனில் கவாஸ்கர் 10,000 டெஸ்ட் ரன்களை எடுத்த முதல் வீரர்.
- அதிக டெஸ்ட் சதங்கள் (34) அடித்த வீரர் போன்ற பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.
மும்பை:
வான்கடே மைதானத்தில் மும்பை கிரிக்கெட்டிற்கு பெருமை சேர்த்த ஜாம்வான்களை கவுரவிக்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும், அது ஆகஸ்ட் மாதம் திறக்கப்படும் எனவும் மும்பை கிரிக்கெட் சங்கம் தெரிவித்திருந்தது. இதற்கு ஷரத்பவார் அருங்காட்சியகம் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வான்கடே மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள சரத்பவார் அருங்காட்சியகம் நேற்று திறந்துவைக்கப்பட்டது. இதன்
நுழைவாயிலில் இந்திய பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கரின் ஆளுயர சிலையை சரத்பவார் மற்றும் கவாஸ்கர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சுனில் கவாஸ்கர் 1971 முதல் 1987-ம் ஆண்டு வரை இந்தியா மற்றும் மும்பை அணிகளுக்காக விளையாடியவர்.
10,000 டெஸ்ட் ரன்களை எடுத்த முதல் வீரர், அதிக டெஸ்ட் சதங்கள் (34) அடித்த வீரர் போன்ற பல்வேறு சாதனைகளை அவர் படைத்துள்ளார். தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக உள்ளார்.
ஏற்கனவே வான்கடே மைதானத்தில் சச்சின் டெண்டுல்கருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- தலைநகர் டெல்லியில் உலக தலைவர்கள் மாநாடு நடைபெற்றது.
- நமது நிதிப் பற்றாக்குறை 4.4 சதவீதமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் உலக தலைவர்கள் மாநாடு இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:
சீர்திருத்தங்களின் தொடர்ச்சி மழைக்கால கூட்டத்தொடரில் தெளிவாகத் தெரிந்தது. எதிர்க்கட்சிகளின் பல குறுக்கீடுகள் இருந்தபோதிலும், நாங்கள் சீர்திருத்தங்களை விடாமுயற்சியுடன் கொண்டு வர முடிந்தது.
இந்த மழைக்கால கூட்டத்தொடரில் ஜன் விஸ்வாஸ் மசோதா 2.0 அறிமுகப்படுத்தப்பட்டது. இது நம்பிக்கை அடிப்படையிலான மற்றும் மக்கள் சார்பு நிர்வாகத்தை நோக்கமாகக் கொண்ட ஒரு பெரிய சீர்திருத்தமாகும்.
இன்று நமது நிதிப் பற்றாக்குறை 4.4 சதவீதமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கோவிட் நோயின் இவ்வளவு பெரிய நெருக்கடியை நாம் எதிர்கொண்டிருக்கும் போது, நிறுவனங்கள் மூலதனச் சந்தைகளில் இருந்து சாதனை நிதியை திரட்டுகின்றன.
நமது வங்கிகள் எப்போதும் இல்லாத அளவுக்கு வலுவானதாக உள்ளன. பணவீக்கம் குறைவாகவே உள்ளது, வட்டி விகிதங்கள் சாதகமாக உள்ளன. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை கட்டுப்பாட்டில் உள்ளது.
அந்நிய செலாவணி இருப்பும் மிகவும் வலுவாக உள்ளது. இது மட்டுமல்லாமல், உள்நாட்டு முதலீட்டாளர்கள் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான கோடிகளை சந்தைக்கு பங்களித்து வருகின்றனர். உள்நாட்டில் தயாரிக்கப்படும் செமிகண்டக்டர் சிப் இந்தாண்டு இறுதிக்குள் சந்தைக்கு வரும் என தெரிவித்தார்.
- பகல் இரவாக உழைக்கும் விவசாயிகளுக்கு அதில் ஒரு சதவீத லாபம் கூட கிடைப்பதில்லை.
- மொத்த உழைப்பும் 99% மக்களால் செய்யப்பட்டாலும், லாபம் 1% இடைத்தரகர்களிடம் செல்கிறது.
பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்ததுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றவும் பீகாரில் ஆகஸ்ட் 17 முதல் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக இன்று கதிஹாரில் உள்ள மக்கானா (தாமரை விதை) விவசாயிகளை சந்தித்து ராகுல் காந்தி கலந்துரையாடினார்.
அவர்களின் பிரச்சனைகள் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் பதிவிட்டுள்ளார்.
அதில், இந்தியாவின் 90 சதவீத மக்கானா உற்பத்தி பீகாரில் நடைபெறுகிறது. ஆனால், பகல் இரவாக உழைக்கும் விவசாயிகளுக்கு அதில் ஒரு சதவீத லாபம் கூட கிடைப்பதில்லை. பெரிய நகரங்களில் ஒரு கிலோ மக்கானா ரூ.1000-2000க்கு விற்கப்படும் நிலையில், விவசாயிகளுக்கு சொற்ப பணமே கிடைக்கிறது.

இந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித்-பகுஜன் சமூகங்களைச் சேர்ந்தவர்கள். மொத்த உழைப்பும் 99% மக்களால் செய்யப்பட்டாலும், லாபம் 1% இடைத்தரகர்களிடம் செல்கிறது.
"வாக்குத் திருட்டு" அரசாங்கம் இவர்களை மதிக்கவும் இல்லை, கவனித்துக் கொள்ளவும் இல்லை." என்று தெரிவித்தார்.
- மக்களின் உடல்நலனைக் காப்பதிலும் தமிழ்நாடுதான் ‘நம்பர் 1’
- நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் இதுவரை 3 வாரங்கள் நிறைவுற்றுள்ளன.
'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்திலன் கீழ் ரத்தப் பரிசோதனைகள், சர்க்கரை நோய், இருதய நோய் என எல்லாவிதமான பரிசோதனையும் அனைத்து தரப்பு மக்களும் இலவசமாக செய்து கொள்ள முடியும். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நடைபெறும் இந்த முகாம்களில் மக்கள் ஆர்வமாக கலந்து கொண்டு பரிசோதனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஆகஸ்ட் 2 தொடங்கி, சனிக்கிழமைதோறும் நடைபெற்று வரும் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் இதுவரை 3 வாரங்கள் நிறைவுற்றுள்ளன.
முதல் வாரம் ( ஆகஸ்ட் 2) - 44,795 மருத்துவப் பயனாளிகள்
இரண்டாம் வாரம் (ஆகஸ்ட் 9) - 48,046 மருத்துவப் பயனாளிகள்,
மூன்றாம் வாரம் (ஆகஸ்ட் 23) - 56,245 மருத்துவப் பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.
மருத்துவ சேவை வழங்குவதிலும் - மக்களின் உடல்நலனைக் காப்பதிலும் தமிழ்நாடுதான் 'நம்பர் 1' என உறுதிசெய்வோம்!" என்று பதிவிட்டுள்ளார்.
- ஜனநாயகன் தான் விஜயின் கடைசி திரைப்படம் என்று கூறப்படுகிறது
- ஜனநாயகன் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ந்தேதி வெளியாக உள்ளது.
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'.இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் எனவும் அதற்கு பின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுப்படபோவதாக கூறப்படுகிறது.
மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
இந்நிலையில், இயக்குனர்கள் அட்லி, லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் ஆகியோர் ஜனநாயக்ன் படத்தில் கேமியோ ரோலில் ஒரு காட்சியில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அதாவது 3 இயக்குனர்களும் பத்திரிகையாளர்கள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
விஜய்க்கு மிகவும் நெருக்கமான இயக்குனர்களான அட்லி, லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஏற்கனவே இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஜனநாயகன் திரைபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆன்ந்த் நடித்துள்ளதாக தகவல் வெளியானது.
- ராம் இயக்கிய ‘பறந்து போ’ படத்தில் கவுரவ வேடத்தில் தலைகாட்டியிருந்தார்.
- சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால் நடிப்பில் கடைசியாக 'மதகஜராஜா' படம் வெளியாகி ஹிட் அடித்தது.
இதையடுத்து ஆர்.பி.சவுத்ரி தயாரிப்பில் ரவி அரசு இயக்கும் புதிய படத்தில் விஷால் நடிக்கிறார். இது விஷால் நடிக்கும் 35-வது படம் ஆகும். விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது.
இந்தநிலையில் விஷால் படத்தில் அஞ்சலி இணைந்திருக்கிறார். ஏற்கனவே 'மதகஜராஜா' படத்தில் விஷாலுடன் அவர் இணைந்து நடித்திருந்தார்.
சென்னையை காலி செய்து ஐதராபாத்தில் முகாமிட்டுள்ள அஞ்சலி, சமீபத்தில் ராம் இயக்கிய 'பறந்து போ' படத்தில் கவுரவ வேடத்தில் தலைகாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மக்களின் விருப்பத்தையும், ஜனநாயகத்தின் அடிப்படையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது.
- “நியாயம் – சமத்துவம் – சமூக நீதி” என்பதையே தங்கள் அரசியல் லட்சியமாகக் கொண்டுள்ளனர்.
ராகுல்காந்தி ஒருபோதும் பிரதமராக முடியாது என்ற அமித்ஷாவின் கருத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
நெல்லையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய "ராகுல் காந்தி ஒருபோதும் பிரதமராக முடியாது" என்ற கருத்து, உண்மையில் மக்களின் விருப்பத்தையும், ஜனநாயகத்தின் அடிப்படையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது.
இந்த நாடு ஜனநாயக நாடாகும். பிரதமர் யார் ஆக வேண்டும் என்பதை தீர்மானிப்பது மக்களின் வாக்குகள் தான். ஒன்றிய உள்துறை அமைச்சர் அல்லது ஏதேனும் ஒருவரின் வாய்மொழிக் கட்டளையோ, தாழ்வான அரசியல் கருத்தோ அதைக் குறிக்கவில்லை.
இன்று முழு இந்தியாவிலும் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என கோடிக்கணக்கான மக்கள் "நியாயம் – சமத்துவம் – சமூக நீதி" என்பதையே தங்கள் அரசியல் இலட்சியமாகக் கொண்டுள்ளனர். அந்த இலட்சியங்களுக்காகத் தான் ராகுல் காந்தி அவர்கள் போராடுகிறார்.
நீதி, அன்பு, சமத்துவம் ஆகியவற்றை குரலாக எடுத்துரைக்கும் ஒருவரை மக்கள் பிரதமராக கொண்டு வருவார்களா, இல்லையா என்பதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள் . வரலாறு கூறுவது ஒரே உண்மை – மக்களின் விருப்பத்தை யாராலும் தடுக்க முடியாது.
உண்மையில், இந்த மாதிரியான ஆளும் கட்சியின் தோல்விப் பயத்தை வெளிப்படுத்தும் கூற்றுகளே, ராகுல்காந்தி அவர்கள் நாளைய பிரதமர் என்ற உண்மையை உறுதியாக்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி பீகாரில் யாத்திரை தொடங்கியுள்ளார்.
- இந்த யாத்திரையில் வரும் 27-ம் தேதியும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
பாட்னா:
வாக்கு திருட்டுக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவரும், பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி யாத்திரை தொடங்கியுள்ளார்.
இந்த யாத்திரையில் வரும் 26, 27-ம் தேதிகளில் பிரியங்காவும், 27-ம் தேதியும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 29-ம் தேதி கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
இதேபோல் உத்தர பிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், முதல் மந்திரிகள் ஹேமந்த் சோரன் (ஜார்க்கண்ட்), ரேவந்த் ரெட்டி (தெலுங்கானா), சுக்விந்தர் சுகு (இமாசலப் பிரதேசம்) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.






