search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wankhede Stadium"

    • வான்கடே ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ள டெண்டுல்கர் சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது.
    • சிலை திறப்பு விழாவில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 100 சதங்கள் விளாசிய ஒரே வீரர் என்ற பெருமைக்குரியவர். மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 16-ந் தேதி வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக தனது 200-வது டெஸ்ட் போட்டியில் ஆடிய டெண்டுல்கர் அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.

    'சாதனை நாயகன்', 'கிரிக்கெட் கடவுள்' என்று வர்ணிக்கப்படும் டெண்டுல்கரை பெருமைப்படுத்தும் வகையில் மும்பை வான்கடே மைதானத்தில் உள்ள கேலரியின் ஒரு பகுதிக்கு டெண்டுல்கர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    கடந்த ஏப்ரல் மாதம் டெண்டுல்கர் தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடினாா். டெண்டுல்கரின் பொன்விழாவை கொண்டாடும் வகையில் வான்கடே மைதானத்தில் அவர் பெயர் சூட்டப்பட்ட பார்வையாளர் கேலரி அமைந்து உள்ள பகுதியில் அவருக்கு சிலை வைக்க மும்பை கிரிக்கெட் சங்கம் முடிவு செய்தது. இதையடுத்து அங்கு டெண்டுல்கரின் முழு உருவ சிலை நிறுவப்பட்டுள்ளது.

    இந்நிலையில் வான்கடே ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ள டெண்டுல்கர் சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது.

    சிலை திறப்பு விழாவில் டெண்டுல்கர், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, சரத் பவார், ராஜூவ் சுக்லா, பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த ஏப்ரல் மாதம் டெண்டுல்கர் தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடினாா்.
    • வான்கடே ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ள டெண்டுல்கர் சிலை இன்று திறந்து வைக்கப்படுகிறது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் அதிக ரன் குவித்தவர் உள்பட பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 100 சதங்கள் விளாசிய ஒரே வீரர் என்ற பெருமைக்குரிய டெண்டுல்கர் மும்பையை சேர்ந்தவர் ஆவார். மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 16-ந் தேதி முடிவடைந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக தனது 200-வது டெஸ்ட் போட்டியில் ஆடிய டெண்டுல்கர் அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.


    அவர் 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 51 சதங்களுடன் 15, 921 ரன்னும், 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 49 சதங்களுடன் 18,426 ரன்களும் குவித்துள்ளார். 'சாதனை நாயகன்', 'கிரிக்கெட் கடவுள்' என்று வர்ணிக்கப்படும் டெண்டுல்கரை பெருமைப்படுத்தும் வகையில் மும்பை வான்கடே மைதானத்தில் உள்ள கேலரியின் ஒரு பகுதிக்கு டெண்டுல்கர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    கடந்த ஏப்ரல் மாதம் டெண்டுல்கர் தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடினாா். டெண்டுல்கரின் பொன்விழாவை கொண்டாடும் வகையில் வான்கடே மைதானத்தில் அவர் பெயர் சூட்டப்பட்ட பார்வையாளர் கேலரி அமைந்து உள்ள பகுதியில் அவருக்கு சிலை வைக்க மும்பை கிரிக்கெட் சங்கம் முடிவு செய்தது. இதையடுத்து அங்கு டெண்டுல்கரின் முழு உருவ சிலை நிறுவப்பட்டுள்ளது.

    மராட்டிய மாநிலம் அகமதுநகரை சேர்ந்த பிரபல சிற்ப கலைஞர் பிரமோத் காம்ளே அந்த சிலையை வடிவமைத்துள்ளார்.

    வான்கடே ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ள டெண்டுல்கர் சிலை இன்று திறந்து வைக்கப்படுகிறது.

    சிலை திறப்பு விழாவில் டெண்டுல்கர், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி அஜித்பவார் உள்ளிட்ட பலர் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டோனி அடித்த சிக்சர் இறங்கிய இடத்தில் இந்த நினைவகம் கட்டப்படும்.
    • 2011 உலகக் கோப்பை இறுதி போட்டியில் ஆட்டநாயகன் விருதை டோனி வென்றார்.

    மும்பை:

    கடந்த 2011-ல் டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இரண்டாவது முறையாக ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியன் ஆனது இந்தியா.

    இறுதிப் போட்டி மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர்களில் 274 ரன்கள் எடுத்திருந்தது. 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. சேவாக் மற்றும் சச்சினை இந்திய அணி விரைவாக இழந்தது. கோலி, 35 ரன்கள் எடுத்து அவுட்டானார். யாரும் எதிர்பார்க்காத வகையில் டோனி முன்கூட்டியே பேட் செய்து போட்டியை மாற்றியமைத்தார்.

    குலசேகரா வீசிய 48.2 பந்தை டோனி சிக்சருக்கு விரட்டி அணியை வெற்றி பெற செய்தார். இதன் மூலம் இந்திய அணி வீரர்கள் உலக சாம்பியன் பட்டத்தை வென்று கெத்து காட்டினார்கள். இதில் ஆட்டநாயகன் விருதை டோனி வென்றார்.

    இந்நிலையில் இந்தியாவின் 2011 உலகக் கோப்பை வெற்றியினை கொண்டாடும் வகையில் வான்கடே ஸ்டேடியத்தில் ஒரு சிறிய நினைவு சின்னத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது. அதன்படி டோனி அடித்த சிக்சர் இறங்கிய இடத்தில் இந்த நினைவு சின்னம் கட்டப்படும்.

    நினைவு சின்னம் திறப்பு விழாவிற்கு டோனியை அழைக்கவுள்ளதாக எம்சிஏ தலைவர் அமோல் காலே கூறியுள்ளார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்சை வீழ்த்தியது #IPL2019 #MIvDC

    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்சை வீழ்த்தியது. ரிஷாப் பான்ட் 18 பந்தில் அரைசதம் விளாசினார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 3-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது. ஐ.பி.எல். வரலாற்றில் இது 700-வது ஆட்டமாகும்.

    ‘டாஸ்’ வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் டெல்லியை பேட் செய்ய பணித்தார். இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய டெல்லி அணிக்கு தொடக்கம் திருப்திகரமாக அமையவில்லை. பிரித்வி ஷா (7 ரன்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (16 ரன்) அடுத்தடுத்து வெளியேறினர். இதன் பின்னர் காலின் இங்ராமும், ஷிகர் தவானும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். இங்ராம் 47 ரன்களும், ஷிகர் தவான் 43 ரன்களும் எடுத்தனர்.

    இறுதி கட்டத்தில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் ருத்ரதாண்டவம் ஆடினார். சிக்சர் மழை பொழிந்த அவர் 18 பந்துகளில் அரைசதத்தை எட்டி அமர்க்களப்படுத்தினார். உலகத்தரம் வாய்ந்த பவுலரான ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சிலும் 2 சிக்சர்களை ஓடவிட்டார். ரிஷாப் பான்டுவின் வாணவேடிக்கையால் டெல்லி அணி 200 ரன்களை எளிதில் கடந்தது.

    நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. மும்பைக்கு எதிராக டெல்லி அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 21 வயதான ரிஷாப் பான்ட் 78 ரன்களுடன் (27 பந்து, 7 பவுண்டரி, 7 சிக்சர்) களத்தில் இருந்தார்.

    அடுத்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி தடுமாற்றத்திற்கு உள்ளானது. கேப்டன் ரோகித் சர்மா 14 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 2 ரன்னிலும், குயின்டான் டி காக் 27 ரன்னிலும், பொல்லார்ட் 21 ரன்னிலும், ஹர்திக் பாண்ட்யா ரன் ஏதுமின்றியும் பெவிலியன் திரும்பினர். இந்த சறுக்கலில் இருந்து மும்பை அணியால் கடைசி வரை நிமிர முடியவில்லை. மும்பை அணிக்காக முதல் முறையாக அடியெடுத்து வைத்த யுவராஜ்சிங் அரைசதம் (53 ரன், 35 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) அடித்தது மட்டுமே உள்ளூர் ரசிகர்களுக்கு ஒரே ஆறுதலாக அமைந்தது.

    மும்பை அணி 19.2 ஓவர்களில் 176 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. கையில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா பேட் செய்ய வரவில்லை. இதன் மூலம் டெல்லி அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் இஷாந்த் ஷர்மா, ரபடா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ×