என் மலர்
கிரிக்கெட் (Cricket)

வான்கடேவில் தனது பெயரில் ஸ்டான்ட்.. நான் இருந்தாலும், மறைந்தாலும் நிலைத்து நிற்கும்- ரோகித் நெகிழ்ச்சி
- இந்த ஸ்டான்ட் எனக்கு மிகவும் ஸ்பெஷல்.
- நான் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இது எப்போதும் நிலைத்து நிற்கப்போகிறது.
மும்பை வான்கடே மைதானத்தில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்படும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், சரத் பவார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெயரில் ஸ்டாண்டு திறக்கப்பட்டது. அந்த ஸ்டாண்டை ரோகித் சர்மா அப்பா- அம்மா, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் சேர்ந்து திறந்து வைத்தனர்.
மேலும் மும்பை வான்கடே மைதானத்தில் ரோகித் சர்மா, அஜித் வடேகர், சரத் பவார் பெயரில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்பட்டது.
இந்நிலையில் வான்கடே மைதானம் குறித்த நினைவுகளை ரோகித் சர்மா பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
ரெயிலில் இவ்வழியாக செல்லும் போதெல்லாம் வான்கடே மைதானத்தை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என நினைத்துக்கொண்டே பயணித்த நாட்களை நினைவுகூர்கிறேன். இந்த ஸ்டான்ட் மிகவும் ஸ்பெஷல். நான் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இது எப்போதும் நிலைத்து நிற்கப்போகிறது.
இவ்வாறு ரோகித் கூறினார்.






