என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    காலை உணவுத் திட்டத்தில் இனி 20 லட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் பசியாறுவார்கள்!- மு.க.ஸ்டாலின்
    X

    காலை உணவுத் திட்டத்தில் இனி 20 லட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் பசியாறுவார்கள்!- மு.க.ஸ்டாலின்

    • இது உணவு மட்டுமல்ல; உயர்வுக்கான உரம்!
    • நாட்டுக்கே முன்னோடியாகத் திகழும் நமது பணிகள் தொடரும்!

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    காலை உணவுத் திட்டத்தில், இனி 20 இலட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் பசியாறுவார்கள்!

    நீதிக்கட்சி முதல் நமது #DravidianModel அரசு வரை பள்ளிக் குழந்தைகளுக்கு உணவளித்து வயிற்றுப்பசியைப் போக்கி, அறிவுப்பசிக்குக் கல்வி வழங்குகிறோம். இது உணவு மட்டுமல்ல; உயர்வுக்கான உரம்!

    வரும் 26-08-2025 அன்று நகர்ப்புறங்களிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் #CMBreakfastScheme விரிவாக்கம் செய்கிறோம்.

    நாட்டுக்கே முன்னோடியாகத் திகழும் நமது பணிகள் தொடரும்! தமிழ்நாடு நாளும் உயரும்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×