என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • ஜி.வி.பிரகாஷ் தனது மனைவி சைந்தவியைப் பிரிவதாக அறிவித்துள்ளார்.
    • இந்தக் கடினமான நேரத்தில் உங்கள் புரிதல், ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

    சென்னை:

    பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி பிரகாஷ்குமார் கடந்த 2013-ம் ஆண்டு பாடகி சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் அன்வி என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு தமிழில் வெளியான வெயில் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், தற்பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

    இவருடைய பென்சில், திரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளன. மேலும் இவரது நடிப்பில் வெளிவந்த பேச்சுலர், ஜெயில், செல்பி, அடியே போன்ற படங்கள் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தைப் பெற்றிருந்தன.

    இதற்கிடையே, ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியானது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

    இந்நிலையில், பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ்குமார், தனது மனைவி சைந்தவியைப் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில், நீண்ட யோசனைக்குப் பிறகு சைந்தவியும் நானும் திருமணமாகி 11 வருடங்கள் கழித்து, ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையைக் காத்துக்கொண்டு, எங்கள் மன அமைதிக்காகவும் மேம்பாட்டிற்காகவும் பிரிந்து செல்ல முடிவு செய்தோம்.

    இந்த ஆழமான தனிப்பட்ட மாற்றத்தின்போது எங்கள் தனியுரிமையைப் புரிந்துகொண்டு மதிக்குமாறு ஊடகங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் பிரிந்து வருகிறோம் என்பதை ஒப்புக்கொண்டு, இது ஒருவருக்கொருவர் சிறந்த முடிவு என்று நாங்கள் நம்புகிறோம். இந்தக் கடினமான நேரத்தில் உங்கள் புரிதல் மற்றும் ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

    • என்னை நடிக்க வைக்க ஆசைப்பட்டவர் என் தந்தை என விஜயபிரபாகரன் உருக்கம்.
    • காலமும் நேரமும் எப்படி கை கொடுக்கிறது என பார்ப்போம்.

    ஜெட்லியின் சீனப்படமான 'மை பாதர் இஸ் ஏ ஹீரோ' என்கிற படத்தை விஜயகாந்தின் மகன் மூத்த மகன் விஜயபிரபாகன் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், " ஜெட்லியின் சீனப்படமான 'மை பாதர் இஸ் ஏ ஹீரோ' என்ற படம் அப்பாவுக்கு மிகவும் பிடிக்கும்.

    நானும் அவரும் நடிக்க வேண்டும் என்று அப்பா மிகவும் விரும்பினார்.

    ஆனால் அது நடக்காமலேயே போய்விட்டது. அப்பாவின் ஆசையை நிறைவேற்ற அந்த படத்தை எடுக்க முடிவு செய்துள்ளேன். காலமும் நேரமும் எப்படி கை கொடுக்கிறது என பார்ப்போம்" என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ரஜினிகாந்த் நடிக்கும் 170 ஆவது திரைப்படம் வேட்டையன்.
    • இந்த படத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

    ரஜினிகாந்த் நடிக்கும் 170 ஆவது திரைப்படம் வேட்டையன். இயக்குநர் ஞானவேல் இயக்கும் இந்த படத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

    லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நாடு முழுக்க பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த நிலையில், இப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தற்பொழுது வெளியாகியது.

    சில நாட்களுக்கு முன் வேட்டையன் படப்பிடிப்பு பாண்டிச்சேரி நடைப்பெற்றது அப்போழுது மலையாள இயக்குனரான நஹஸ் ஹிதயத் , ரஜினிகாந்துடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஹெலிகாப்டர் முன் புகைப்படம் எடுத்துள்ளனர். ஒரு புகைப்படத்தில் அன்பற்வ் மாஸ்டர் இருவரும் இருக்கின்றனர்.

    ஆர் டி எக்ஸ் திரைப்படத்திற்கு அன்பறிவ் மாஸ்டர் தான் ஸ்டண்ட் காட்சிகளை இயக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கருடன் படத்தை இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார்.
    • இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    'கருடன்' திரைப்படத்தில் பிரபல நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடித்து வருகிறார். இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கும் கருடன் திரைப்படத்தில் உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் நகைச்சுவை வேடத்தில் சூரி நடிக்கிறார்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கருடன் திரைப்படம் மே 31 ஆம் தேதி ரிலீசாகும் என படக்குழு புதிய போஸ்டர் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


     

    கருடன் படத்தை லார்க் ஸ்டூடியோஸ் மற்றும் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பில் கே. குமார் தயாரிக்கிறார். இந்த படத்தின் கதையை இயக்குநர் வெற்றிமாறன் எழுதியுள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரபல நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணி ரத்னத்துடன் ''நாயகன்' படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு 'தக் லைப்' என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்து உள்ளார்.
    • இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.

    பிரபல நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணி ரத்னத்துடன் ''நாயகன்' படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு 'தக் லைப்' என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்து உள்ளார்.

    இப்படத்தில் கமல்ஹாசன் , த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார் .

    இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்டம் செர்பியாவிலும் நடைப்பெற்றது. சமீபத்தில் சிம்பு தக் லைஃப் படத்தில் இணைந்தார். கமலுக்கு மகனாக இப்படத்தில் நடிக்கவுள்ளார். சமீபத்தில் சிம்பு கதாப்பாத்திரத்தின் ப்ரோமோ கிலிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் படத்தின் அடுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை ஏபி இண்டர்நேஷனல் மற்றும் ஹோம் ஸ்கிரீன் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த உரிமையை மட்டும் 63 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதுவே தமிழ் படத்திற்கு அதிக விலைக் கொடுத்து வாங்கிய திரைப்படமாகும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வேட்டையன் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
    • இப்படத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    ரஜினிகாந்த் நடிக்கும் 170 ஆவது திரைப்படம் வேட்டையன். இயக்குநர் ஞானவேல் இயக்கும் இந்த படத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

    லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நாடு முழுக்க பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த நிலையில், இப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

    வேட்டையன் படத்தை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும், இதற்கான பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ்.
    • விக்ரம் நடிப்பில் வெளிவந்த சாமி திரைப்படத்தில் பெருமாள் பிச்சை என்ற கதாப்பாத்திரத்தில் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார்.

    தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ். ஏராளமான திரைப்படங்களில் வில்லனாகவும், நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர நடிகராகவும் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரீனிவாச ராவ். அவரது தனித்துவமான சிரிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    விக்ரம் நடிப்பில் வெளிவந்த சாமி திரைப்படத்தில் பெருமாள் பிச்சை என்ற கதாப்பாத்திரத்தில் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார். அதன் பிறகு 2005 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த திருப்பாச்சி திரைப்படத்தில் சனியன் சகடை என்ற கதாப்பாத்திரம் மக்கள் மனதில் பதிந்தது. பின் 2011ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளிவந்த கோ திரைப்படத்தில் ஆளவந்தான் என்ர அரசியல்வாதி கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பார். அவர் வரும் காட்சிகள் இன்றும் சமூக வலைத்தளங்களில் மீம் டெம்ப்லேட்டுகளான உலா வந்து கொண்டு இருக்கின்றன.

    தற்போது 81 வயதாகும் கோட்டா ஸ்ரீனிவாச ராவ், கடந்த சில மாதங்களாகவே உடல் நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தார். இதனிடையே தெலுங்கானா மாநிலத்தில் இன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஐதராபாத் மக்களவைத் தொகுதியில் வசித்து வரும் ஸ்ரீனிவாசராவ் இன்று தனது வாக்கினை செலுத்துவதற்காக ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு வருகை தந்தார்.

    மனைவி மற்றும் உதவியாளர் ஒருவருடன் வருகை தந்த அவருக்கு, வாக்குச்சாவடிக்குள் அமர இருக்கைகள் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் தனது வாக்கினை செலுத்தினார். கம்பீரமான வில்லனாக பல திரைப்படங்களில் மிரட்டிய கோட்டா ஸ்ரீனிவாச ராவ், உடல் தளர்ந்து, வயோதிகம் காரணமாக நடந்து வந்ததை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஒரு காலத்தில் கம்பீரமான வில்லனாக வலம் வந்த அவர், இன்று நடக்க முடியாதபடி பிறரின் துணையோடு தள்ளாடியபடி வருகை தரும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளது. இந்த தள்ளாத வயதிலும் வாக்களிக்க வேண்டும் என்ற அவரது உறுதியை அவர்கள் பாராட்டி வருகின்றனர்.

     

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • முதல்வன், பம்பாய், இந்தியன் உள்பட பல படங்களில் நடித்து முன்னனி நடிகையாக திகழ்ந்தவர் மனிஷா கொய்ராலா.
    • சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான வெப் தொடர் ஹிரமண்டி. இந்த தொடர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

    முதல்வன், பம்பாய், இந்தியன் உள்பட பல படங்களில் நடித்து முன்னனி நடிகையாக திகழ்ந்தவர் மனிஷா கொய்ராலா. புற்றுநோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்பு மீண்டும் தற்போது சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

    சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான வெப் தொடர் ஹிரமண்டி. இந்த தொடர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. தொடரில் பாலியல் தொழில் செய்யும் மல்லிகாஜான் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்தியாவின் பிரிவினைக்கு முந்தைய காலத்தில் லாகூர் ஹீர மண்டியின் சிவப்பு விளக்கு பகுதி நிகழ்ச்சியின் பின்னணியாகும். பிரிட்டிஷ் ராஜ் சகாப்தத்தில் இந்திய சுதந்திர இயக்கத்தால் பாலியல் தொழிலாளிகளும் நவாப்புகளும் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்பதே இந்த தொடரின் கதை.

    சோனாக்ஷி சின்ஹா , அதிதி ராவ் ஹைதாரி, ரிச்சா சதா, ஷர்மின் சேகல், சஞ்சீதா ஷேக், பரிதா ஜலால், சேகர் சுமன், ஃபர்தீன் கான், அத்யாயன் சுமன் மற்றும் ஸ்ருதி ஷர்மா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இது பற்றி மனிஷா கொய்ராலா கூறியதாவது:-

    இந்த தொடரில் எனது கதாபாத்திரத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருவது மகிழ்ச்சி. தொடரில் தவறுகள் மீது விமர்சனங்கள் இருந்த போதும் வரவேற்பு பெற்றுள்ளது. படப்பிடிப்பில் 12 மணி நேரம் நீருக்குள் நான் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து நீருக்குள் நின்றதால் களைப்பை தந்தாலும் ஒரு ஆழ்ந்த மகிழ்ச்சியையும் தந்தது.

    தண்ணீர் சூடாகவும் சுத்தமாகவும் இருந்தாலும் சில நேரங்களில் சேரும் சகதியும் என் உடலில் ஏறியது. சில சமயங்கள் எனக்கு மன அழுத்தம் கொடுத்தாலும் நெகிழ்ச்சியையும் தந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
    • இப்படம் கடந்த 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    'டாடா' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஸ்டார்'. இப்படத்தை 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி பிரபலமான இளன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    இப்படம் கடந்த 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி சில நாட்களே ஆன நிலையில் பல திரையரங்குகளில் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

    ஒரு நடுத்தர குடும்பத்தில் இருந்த ஒருவன் சினிமாவில் நடிகனாக ஆசைப்படுகிறான். அவன் படும் கஷ்டங்கள், போராட்டத்தை பற்றி பேசக் கூடிய படமாக இது அமைந்துள்ளது.

    இந்நிலையில், படத்தின் வரவேற்புக்கு நன்றி தெரிவித்து இயக்குனர் இளன் கவிதை எழுதியுள்ளார். அதில்,

    முதல் நாள் காட்சியில், முகம் அறியா சகோதரன் ஒருவன் ஓடி வந்து கேட்டான் : உங்களை கட்டி புடிச்சுக்கலாமா? அந்த இரு கணம் அன்பு மட்டுமே வெளிப்பட்டது.

    திரையரங்கை சுத்தம் செய்யும் பணி பெண், கன்னத்தை பிடித்து சுத்திப்போட்டது என் தாயின் அன்பை வெளிப்படுத்தியது. பல இடங்களில் கைதட்டலும், கரகோஷமும் "லவ் யூ" என்று சொல்வதாகவே தோன்றியது.

    இறுதிக்காட்சியின் வரவேற்பு என்னுள் உள்ள எழுத்தாளனை இன்னும் தைரியசாலியாக மாற்றியுள்ளது. ரோலிங் கிரெடிட்ஸ் போட்டவுடன் எழுந்து செல்வதே வழக்கம். ஆனால், நான் கண்டதோ காதலியை விட்டு பிரிந்து செல்ல மனமில்லாத காதலர்களைதான். ஒரு சில (பல) விமர்சனங்கள், நான் ஒரு கலைஞனாய் மெருகேற உதவுகிறது.

    நம்பிக்கைக்கு நன்றி. கூட்டம் அலைமோதுகிறது. பகலிலும், மதியத்திலும், இரவிலும் சிலரின் கனவிலும் ஸ்டார் ஒளிர்கிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சமீபத்தில் திரைக்கு வந்து மிகுந்த வரவேற்பை பெற்ற படம் பிரேமலு. படத்தின் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்திருந்தார்.
    • விஜய் தேவரகொண்டா ராணுவ வீரராக புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

    சமீபத்தில் திரைக்கு வந்து மிகுந்த வரவேற்பை பெற்ற படம் பிரேமலு. படத்தின் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்திருந்தார். மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னட மொழி ரசிகர்களையும் கவர்ந்தார்.

    இதையடுத்து மமிதா பைஜூ திரையுலகினர் திரும்பி பார்க்கும் நடிகையாக உருவெடுத்தார். இந்த நிலையில் தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் விஜய் தேவரகொண்டா. இவரை தற்போது திரை உலகின் காதல் மன்னன் என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    விஜய் தேவரகொண்டா ராணுவ வீரராக புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஜெர்சி படத்தை இயக்கிய கவுதம் தின்னனூரி இயக்குகிறார். இப்படம் விஜய் தேவரகொண்டாவின் 12-வது திரைப்படமாகும். தற்காலிகமாக VD-12 என தலைப்பிடப்பட்டுள்ளது. படத்தில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்க இருக்கிறார். முதலில் ஸ்ரீலீலா இப்படத்தில் நடிக்கவிருந்தார் ஆனால் தற்பொழுது அவர் இதில் நடிக்கவில்லை.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சமீபத்தில் வெளிவந்த ஆடு ஜீவிதம் திரைப்படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார்.
    • சமீபத்தில் வெளிவந்த ஆடு ஜீவிதம் திரைப்படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார்.

    மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் பிரித்விராஜ் . சமீபத்தில் வெளிவந்த ஆடு ஜீவிதம் திரைப்படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார். ஆடு ஜீவிதம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும்.

    அதைத்தொடர்ந்து ப்ரித்விராஜ் குருவாயூர் அம்பல நடையில் திரைப்படத்தில் நடித்துள்ளார். விபின் தாஸ் இயக்கம் செய்யும் இப்படத்தில் பசில் ஜோசப், யோகி பாபு நிகிலா விமல், அனஸ்வரா ராஜன், ரேகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். E4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு நீரஜ் ரெவி ஒளிப்பதிவு செய்துள்ளார். அங்கித் மேனன் இசை அமைத்துள்ளார். கதையை தீப்பு பிரதீப் எழுதியுள்ளார்.

    விபின் தாஸ் இதற்கு முன் ஜெய ஜெய ஜெய ஹே மற்றும் குஞ்சிராமாயணம் போன்ற வெற்றி படங்களை இயக்கியவராவார்.

    இத்திரைப்படத்தின் முதல் தோற்றம் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் வரும் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது. பிரித்விராஜ் முற்றிலும் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். டிரைலர் காட்சிகள் மிகவும் நகைச்சுவையாக இருப்பதினால் மக்கலிடையே இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நிதி பற்றாக்குறையால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை கட்டி முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    • முன்னணி தமிழ் நடிகர்கள் பலர் முன்வந்து அதிகளவில் நிதி வழங்கி வருகின்றனர்.

    நிதி பற்றாக்குறையால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை கட்டி முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கட்டிடத்தை முழுமையாக கட்டி முடிக்க மேலும் ரூ.40 கோடி தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் சங்கத்தின் சார்பில் அதற்கான நிதி திரட்டப்பட்டு வருகிறது.

    முன்னணி தமிழ் நடிகர்கள் பலர் தாமாக முன்வந்து அதிகளவில் நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், கடந்த வாரம் நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதி வழங்கிய நிலையில், அதைத்தொடர்ந்து தற்போது, நடிகர் தனுஷ், சங்க கட்டிட பணிகளுக்காக ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளார். அவருக்கு நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

    முன்னதாக தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் கமல் ஹாசன், விஜய், நெப்போலியன் ஆகியோர் கட்டிட பணிகளுக்கு தலா ரூ.1 கோடி நிதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆண்டுக்குள் கட்டிட பணிகள் முழுமையாக நிறைவடையும் என்று நடிகர் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×