என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • விடாமுயற்சி படத்தில் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது.
    • இந்த படத்தில் அஜித்குமார் 'டூப்' இல்லாமல் துணிச்சலாக நடித்து இருக்கும் வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

    மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அஜித்தின் 62 - வது ஆக்ஷன் படமாக இது உருவாகி வருகிறது.

    இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் நடிகர் அர்ஜுன் மற்றும் ஆரவ்  நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

    இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. அதன் பின் வடமாநிலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது.

    இந்த படத்தில் அஜித்குமார் 'டூப்' இல்லாமல் துணிச்சலாக நடித்து இருக்கும் வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி இருந்தது.

    இந்நிலையில் இப்படத்தின் 70% படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

    இதனையடுத்து ஆதி ரவிசந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் அஜித் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது.

    அதனால் விடாமுயற்சி படம் கைவிடப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் தீ போல பரவின.

    இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜூன் 3 ஆவது வாரத்தில் மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1-ந் தேதி விடாமுயற்சி படத்தை 'ரிலீஸ்' செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தனுஷ் தனது 50 வது படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். இப்படத்துக்கு 'ராயன்' என பெயரிடப்பட்டுள்ளது.
    • கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ், நடிப்பையும் தாண்டி பின்னணிப் பாடகராகவும், பாடலாசிரியராகவும், ப. பாண்டி படத்தின் மூலம் இயக்குனராகவும் தன்னை நிரூபித்தவர் ஆவார். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தனுஷ் தனது 50 வது படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். இப்படத்துக்கு 'ராயன்' என பெயரிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தாயரிக்கும் இப்படத்துக்கு ஏர்.ரகுமான் இசையமைக்கிறார்.

    இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன்,பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம் , சுதீப் கிசன், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் தனுஷ். இப்படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிரச் செய்துள்ளது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    கடந்த மே 9 ஆம் தேதி இப்படத்தில் ஏர்.ஆர் ரகுமான் இசையில் தனுஷ் பாடிய 'அடங்காத அசுரன்' என்ற முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் 1 ஆம் தேதி பிரமாண்டமான நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இந்த விழாவில் இதுவரை தனுஷை வைத்து படம் இயக்கிய இயக்குனர்களை அழைத்து கவுரவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ராயன் படம் ஜூன் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கார்த்திக் சுப்புராஜ் நடிகர் சூர்யாவை வைத்து புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.
    • இந்த படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணி கதைக்களமாக உருவாகவுள்ளது.

    கடந்த ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்த ஜிகர்தண்டா பாகம் 2 மக்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்றது

    இந்நிலையில் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் நடிகர் சூர்யாவை வைத்து புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.

    சூர்யாவின் 44 ஆவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகவுள்ளது. சூர்யா இத்திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்க திருநாவுகரசு ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். 24, பேட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் திருநாவுக்கரசு என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.

    சூர்யா தற்பொழுது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். அதற்கடுத்து இப்படத்தில் நடிக்கவுள்ளார்.

    இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் முதல் வாரத்தில் அந்தமானில் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தியாவின் உள்கட்டமைப்பு, சாலை திட்டமிடல் உட்பட எல்லாமே அற்புதமாகவுள்ளது.
    • 20 கிமீ நீளம் கொண்ட பாலத்தை 7-8 வருடங்களில் கட்டி முடித்துள்ளார்கள். இதை பற்றி விவரிக்க வார்த்தைகளே இல்லை.

    மும்பை:

    மும்பை மற்றும் நவிமும்பை நகரங்களை இணைக்கும் வகையில் அரபிக்கடலில் 22 கி.மீ. தூரத்துக்கு கட்டப்பட்டுள்ள பிரமாண்ட பாலத்தை அண்மையில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    நவிமும்பை நவசேவா துறைமுகத்தை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளதால், இது 'மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்' என அழைக்கப்படுகிறது. இருப்பினும் இந்த கடல்வழி பாலத்துக்கு 'அடல் சேது' என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இந்த அடல் சேது பாலம் பற்றி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசிய பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா, "2 மணி நேர பயணம் தற்போது 20 நிமிடங்களாக குறைந்து விட்டது. இதை உங்களால் நம்ப முடிகிறதா? இப்படி ஒரு மாற்றம் நிகழும் என்று யாராவது நினைத்திருப்பார்களா?

    நவி மும்பையில் இருந்து மும்பை, கோவாவில் இருந்து மும்பை, பெங்களூரில் இருந்து மும்பை என எல்லா பயணங்களும் அற்புதமான உள்கட்டமைப்புகளை கொண்டுள்ளது. இதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும்.

    இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் மிக வேகமாக வளர்ந்துள்ளது. இந்தியாவின் உள்கட்டமைப்பு, சாலை திட்டமிடல் உட்பட எல்லாமே அற்புதமாகவுள்ளது. 20 கிமீ நீளம் கொண்ட பாலத்தை 7-8 வருடங்களில் கட்டி முடித்துள்ளார்கள். இதை பற்றி விவரிக்க வார்த்தைகளே இல்லை என்று அவர் தெரிவித்தார்.

    2020 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் விராஜ்பேட்டை பகுதியில் உள்ள ராஷ்மிகா மந்தனாவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    அப்போது கணக்கில் வராத 25 லட்சம் ரூபாய் பணத்தை ரொக்கமாகவும், 3.94 கோடி மதிப்பிலான சொத்து பத்திரங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆனது.
    • அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிக்கும் 171 ஆவது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது. சமீபத்தில் இந்த படத்தின் தலைப்பை அறிவிக்கும் டீசர் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆனது.

    அந்த வகையில், ரஜினிகாந்த் நடிக்கும் 171 ஆவது படத்திற்கு "கூலி" என தலைப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இப்படத்தின் கதை தங்க கடத்தல் சம்பவங்களை தழுவி உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    ரஜினிகாந்த் நடித்து வெளியான ஜெயிலர் படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தனது மகள் இயக்கிய லால் சலாம் படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்து இருந்தார். இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. லால் சலாம் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் இயக்குநர் ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்தார்.

    இந்த படத்தில் ரஜினிகாந்த் தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் "கூலி" படத்தின் படப்பிடிப்பு பணிகள் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கார்த்திக்குமார் நண்பர்களுடன் அடிக்கடி மும்பை சென்று விடுவார்.
    • அனைத்து பாலினங்களும் பெருமை மற்றும் ஆதரவுக்கு உரியவர்களே.

    பிரபல பாடகியான சுசித்ரா சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் அவரது முன்னாள் கணவர் கார்த்திக்குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார்.

    கார்த்திக்குமார் பற்றி சுசித்ரா கூறும்போது, "கார்த்திக்குமார் நண்பர்களுடன் அடிக்கடி மும்பை சென்று விடுவார். அவர் ஓரினச்சேர்க்கையாளர் என்று எனக்கு சந்தேகம் இருந்தது உள்பட பல கருத்துக்களை கூறி இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    சுசித்ராவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து கார்த்திக்குமார் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது:-

    நான் ஓரின சேர்க்கையாளராக இருந்தால் அதற்காக வெட்கப்பட போவதில்லை. பாலியல் விஷயத்தில் நான் எந்த விருப்பத்தில் இருந்தாலும் அதை பெருமையாக கருதுகிறேன்.

    அனைத்து பாலினங்களும் பெருமை மற்றும் ஆதரவுக்கு உரியவர்களே. இதில் அவமானம் எதுவும் இல்லை. பெருமை மட்டுமே.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


    • புரிதலும், போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்படுவது துரதிஷ்டவசமானது.
    • இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததன் பின்னணியையும், காரணங்களையும் என்னுடன் நெருங்கிய பழகிய நண்பர்கள், உறவினர்கள் நன்கறிவார்கள்.

    இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷும், சினிமா பின்னணி பாடகி சைந்தவியும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இவர்களுக்கு நான்கு வயது பெண் குழந்தை உள்ளது. மனைவி சைந்தவியை பிரிந்து விட்டதாக ஜி.வி.பிரகாஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.

    இது ஜி.வி.பிரகாஷ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். 

    இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் தளத்தில்,

    புரிதலும், போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்படுவது துரதிஷ்டவசமானது. பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல. தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் அது "யாரோ ஒரு தனிநபரின்" வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா...?

    இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததன் பின்னணியையும், காரணங்களையும் என்னுடன் நெருங்கிய பழகிய நண்பர்கள், உறவினர்கள் நன்கறிவார்கள். அனைவரிடமும் கலந்தாலோசித்து பின்புதான் இருவரும் இந்த முடிவை மேற்கொண்டோம். எங்களை பிரபலங்களாக உருவாக்கிய உரிமையிலோ அல்லது என் தனிப்பட்ட வாழ்க்கை மீது தங்களுக்கு இருந்த பேரன்பின் வெளிப்பாடாகவோ தங்களின் ஆதங்கமான விமர்சனங்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் மனதை அது மிகவும் காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன். ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள். தங்களின் பேரன்புக்கும் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி என்று தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வெப்பன் படத்தை மில்லியன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது.
    • இந்த படத்தை குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார்.

    குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர் படம் "வெப்பன்." இந்த படம் மே மாதம் ரிலீசாக இருக்கிறது.

    படம் குறித்து பேசும் போது, "சூப்பர் ஹ்யூமன் எலிமெண்ட்டை அடிப்படையாகக் கொண்டு சயின்ஸ் ஃபிக்ஷன் ஆக்ஷன் த்ரில்லராக 'வெப்பன்' படத்தை உருவாக்கியுள்ளோம். படத்தின் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை பல திருப்பங்களுடன் கூடிய பரபரப்பான ஆக்ஷன் கதை இதில் இருக்கும்."

     


    "மில்லியன் ஸ்டுடியோவின் தயாரிப்பாளர்கள் எம்.எஸ்.மன்சூர், எம்.எஸ்.அப்துல் காதர் மற்றும் எம்.எஸ்.அஜீஷ் ஆகியோரின் ஆதரவு இல்லாமல் இந்தப் படம் சாத்தியமில்லை."

    "முதன்முறையாக சத்யராஜ் சூப்பர் ஹ்யூமன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது அர்ப்பணிப்பும் ஆர்வமும் எனக்கும் ஊக்கம் கொடுத்தது. நடிகர் வசந்த் ரவியின் ஸ்கிரீன் பிரசன்ஸ் நிச்சயம் கவனம் ஈர்க்கும். படத்தில் நீங்கள் எதிர்பார்காத நிறைய திருப்பங்கள் இருக்கும்."

    "ராஜீவ் மேனன் சார் இந்த படத்தில் ஸ்டைலான அதேசமயம் பவர்ஃபுல்லான வில்லனாக நடித்துள்ளார். தன்யா ஹோப்பின் நடிப்பு நிச்சயம் பாராட்டப்படும். இந்தப் படத்தை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருந்த ஒட்டுமொத்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கு எனது பணிவான நன்றிகள்," என்று இப்படத்தின் இயக்குநர் குகன் சென்னியப்பன் தெரிவித்தார்.

    மில்லியன் ஸ்டுடியோ தயாரித்திருக்கும் இந்தப் படத்தை குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார். நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தன்யா ஹோப், ராஜீவ் பிள்ளை உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்ய, படத்திற்கு கோபி கிருஷ்ணா படத்தொகுப்பையும், கலை சுபேந்தர் பி.எல் மேற்கொண்டுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    'அங்காடித் தெரு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக தனது முத்திரையை பதித்தவர் வசந்த பாலன். அந்த படத்திற்காக தேசிய விருது பெற்ற வசந்தபாலன், சமீபத்தில் அர்ஜுன் தாஸை வைத்து இவர் இயக்கிய அநீதி திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது.

    முதலாளித்துவதை தொடர்ந்து தனது படங்களின் மூலம் எதிர்த்து வரும் வசந்தபாலன் இயக்கத்தில் பரத், ஆடுகளம் கிசோர் ஆகியோர் நடிப்பில் 'தலைமைச் செயலகம்' என்ற வெப் சீரிஸ் உருவாகியுள்ளது. தனது படங்களில் தொடர்ந்து அரசியல் பேசி வரும் வசந்தபாலன், முழுக்க முழுக்க அரசியல் சார்ந்து இதை இயக்கியுள்ளதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த தொடர் வரும் மே 17 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

    இந்நிலையில் இந்த வெப் சீரிஸ் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் வசந்த பாலன் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், அரசியல் படங்கள் என்றாலே முதல்வர் கெட்டவர் என்ற கோணத்தில்தான் காட்டப்படுகிறது இதை உடைத்து ஊழல் குற்றம் சுமத்தப்பட்ட ஒரு முதல்வரின் அக சிக்கல்களைப் பேச வேண்டும் என்று நினைத்து இந்த வெப் சீரீஸை இயக்கியுள்ளேன். மக்கள் மீது கொண்டிருக்கும் காதலின் பெயர் தான் நீதி, அந்த நீதியை காப்பாற்றும்போது சில தவறுகள் நடக்கலாம், அதைப்பற்றியே இந்த சீரிஸின் மூலம் பேசியுள்ளேன்.

    மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் பெரிய அளவில் முன்னேறியுள்ளது. தமிழகத்தில் நம்மை 50 ஆண்டுகாலமாக வழி நடத்தி வந்த பெரியாரிய, அம்பேதகரிய, மார்க்சிய கருத்துக்களால் தான் இது சாத்தியமானது. நம் பெயருக்கு பின்னால் சாதி போடாததே ஒரு அரசியல் தான், நீ என்ன சாதி என கேட்காமல் இருப்பதே அரசியல் தான், இதைப் பற்றி விரிவாகப் பேசுவதற்கான சூழலை இந்த வெப் சீரிஸ் உருவாக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    • தி வெர்டிக்ட் படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
    • இந்த படத்தின் மூலம் ஆதித்யா ராவ் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

    அக்னி எண்டர்டெயின்மெண்ட் அதன் சென்னை துணை நிறுவனத்துடன் இணைந்து கோலிவுட்டில் தனது முதல் திரைப்படத்தை அறிவித்து இருக்கிறது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவின் டெக்சாஸ், ஆஸ்டினில் படமாக்கப்பட்டுள்ளது.

    அக்னி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் முதல் திரைப்படமாக உருவாகும் "தி வெர்டிக்ட்" கோர்ட்ரூம் டிராமா, திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர்கள் பிரகாஷ் மோகன்தாஸ், இயக்குநர் கிருஷ்ணா சங்கர் டெக்சாஸில் வசிப்பவர்கள்.

    இப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவின் ஆஸ்டின், டெக்சாசில் படமாக்கப்பட்ட முதல் சர்வதேச இந்தியத் திரைப்படம் ஆகும். இந்த படம் முழுக்க முழுக்க 23 நாட்களில் படமாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த படத்தில் நடிகை சுஹாசினி மணிரத்னம், வரலக்ஷ்மி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், வித்யுலேகா ராமன் & பிரகாஷ் மோகன்தாஸ் ஆகியோரோடு உள்ளூர் அமெரிக்கக் கலைஞர்களும் ஐந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    அரவிந்த் கிருஷ்ணா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, சதீஷ் சூர்யா படத்தொகுப்பு செய்துள்ளார். பிரபல இளம் பாடகர் ஆதித்யா ராவ் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். சினேகா மற்றும் பிரசன்னா தம்பதியினர் "தி வெர்டிக்ட்" படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • படத்தில் இடம்பெறும் 'தீரா' பாடலின் லிரிக் வீடியோ, டிரைலர் சமீபத்தில் வெளியானது.
    • எலக்சன் படத்திற்கான சென்சார் சான்றிதழ் அறிவிக்கப்பட்டுள்ளது.

    உறியடி படத்தை இயக்கி அதில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் விஜய்குமார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான "ஃபைட் கிளப்" படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

    அதைதொடர்ந்து 'சேத்துமான்' படத்தை இயக்கிய இயக்குனர் தமிழ் அடுத்ததாக இயக்கும் எலக்சன் திரைப்படம் வரும் 17ம் தேதி வெளியாகிறது.

    'எலக்சன்' திரைப்படத்தில் விஜய்குமார், 'அயோத்தி' புகழ் பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, 'வத்திக்குச்சி' திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம், நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

    எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை சி. எஸ். பிரேம்குமார் கையாண்டிருக்கிறார்.

    படத்தில் இடம்பெறும் 'தீரா' பாடலின் லிரிக் வீடியோ, டிரைலர் சமீபத்தில் வெளியானது.

    இந்நிலையில், எலக்சன் படத்திற்கான சென்சார் சான்றிதழ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எலக்சன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

    • கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் மாகி (Mr & Mrs Mahi) என்ற படத்தில் ஜான்வி கபூர் நடித்து முடித்துள்ளார்.
    • மஹிமா என்ற காதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜான்வி கபூரின் ப்ரோமோஷன் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது

    மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார். அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வரும் ஜான்வி கபூர், கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் மாகி (Mr & Mrs Mahi) என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஜ்குமார் ராவ் நடித்துள்ள இந்தப் படம் வரும் மே 31 ஆம் தேதி வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

    இந்த படத்தில் மஹிமா என்ற காதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜான்வி கபூரின் படத்தின் ப்ரோமோஷன் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. அந்த புகைப்படங்களில் அவர் அணிந்திருந்த ஸ்லீவ்லெஸ் டாப்ஸில் '6' என்ற எண் இடம்பெற்றிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில் அதுபற்றி ஜான்வி கபூர் மனம் திறந்துள்ளார். '6' என்ற என்ற எண் கொண்ட உடையை அணிவதற்கான காரணத்தை அவர் விளக்கியுள்ளார்.

    இதுபற்றி பேசிய அவர், '7' என்பது கிரிக்கெட் வீரர் தோனியின் ஜெர்சிக்கு நம்பர் ஆகும். அது அவருடைய எண் மட்டுமே ஆகும். வேறு யாருக்கும் சொந்தம் கிடையாது. எனவே மஹிமா கதாப்பாத்திரத்தின் ஜெர்சிக்கு அதுபோல மற்றோரு என்னை தேர்வு செய்ய வேண்டி இருந்ததால் எனது லக்கி நம்பரான '6' என்ற என்னை பயன்படுத்திக்கொண்டோம், இந்த எண் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என்று நம்புகிறேன். என்று தெரிவித்தார்.


     



    மேலும் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் மாஹி படம் பற்றி பேசிய அவர், இது காதல், கிரிக்கெட் மற்றும் குடும்ப படமாக எமோஷனலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×