''சூர்யா 44'' படப்பிடிப்பு எப்போது துவங்கும்? - வெளியான புதிய தகவல்

கார்த்திக் சுப்புராஜ் நடிகர் சூர்யாவை வைத்து புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.இந்த படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணி கதைக்களமாக உருவாகவுள்ளது.
''சூர்யா 44'' படப்பிடிப்பு எப்போது துவங்கும்? - வெளியான புதிய தகவல்
Published on

கடந்த ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்த ஜிகர்தண்டா பாகம் 2 மக்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்றது

இந்நிலையில் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் நடிகர் சூர்யாவை வைத்து புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.

சூர்யாவின் 44 ஆவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகவுள்ளது. சூர்யா இத்திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்க திருநாவுகரசு ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். 24, பேட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் திருநாவுக்கரசு என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.

சூர்யா தற்பொழுது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். அதற்கடுத்து இப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் முதல் வாரத்தில் அந்தமானில் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com