எலக்சன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்..!

படத்தில் இடம்பெறும் 'தீரா' பாடலின் லிரிக் வீடியோ, டிரைலர் சமீபத்தில் வெளியானது.எலக்சன் படத்திற்கான சென்சார் சான்றிதழ் அறிவிக்கப்பட்டுள்ளது.
எலக்சன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்..!
Published on

உறியடி படத்தை இயக்கி அதில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் விஜய்குமார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான "ஃபைட் கிளப்" படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

அதைதொடர்ந்து 'சேத்துமான்' படத்தை இயக்கிய இயக்குனர் தமிழ் அடுத்ததாக இயக்கும் எலக்சன் திரைப்படம் வரும் 17ம் தேதி வெளியாகிறது.

'எலக்சன்' திரைப்படத்தில் விஜய்குமார், 'அயோத்தி' புகழ் பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, 'வத்திக்குச்சி' திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம், நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை சி. எஸ். பிரேம்குமார் கையாண்டிருக்கிறார்.

படத்தில் இடம்பெறும் 'தீரா' பாடலின் லிரிக் வீடியோ, டிரைலர் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், எலக்சன் படத்திற்கான சென்சார் சான்றிதழ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எலக்சன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com