வெப்பன் படத்திற்காக சூப்பர் ஹ்யூமன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சத்யராஜ்

வெப்பன் படத்தை மில்லியன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. இந்த படத்தை குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார்.
வெப்பன் படத்திற்காக சூப்பர் ஹ்யூமன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சத்யராஜ்
Published on

குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர் படம் "வெப்பன்." இந்த படம் மே மாதம் ரிலீசாக இருக்கிறது.

படம் குறித்து பேசும் போது, "சூப்பர் ஹ்யூமன் எலிமெண்ட்டை அடிப்படையாகக் கொண்டு சயின்ஸ் ஃபிக்ஷன் ஆக்ஷன் த்ரில்லராக 'வெப்பன்' படத்தை உருவாக்கியுள்ளோம். படத்தின் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை பல திருப்பங்களுடன் கூடிய பரபரப்பான ஆக்ஷன் கதை இதில் இருக்கும்."

"மில்லியன் ஸ்டுடியோவின் தயாரிப்பாளர்கள் எம்.எஸ்.மன்சூர், எம்.எஸ்.அப்துல் காதர் மற்றும் எம்.எஸ்.அஜீஷ் ஆகியோரின் ஆதரவு இல்லாமல் இந்தப் படம் சாத்தியமில்லை."

"முதன்முறையாக சத்யராஜ் சூப்பர் ஹ்யூமன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது அர்ப்பணிப்பும் ஆர்வமும் எனக்கும் ஊக்கம் கொடுத்தது. நடிகர் வசந்த் ரவியின் ஸ்கிரீன் பிரசன்ஸ் நிச்சயம் கவனம் ஈர்க்கும். படத்தில் நீங்கள் எதிர்பார்காத நிறைய திருப்பங்கள் இருக்கும்."

"ராஜீவ் மேனன் சார் இந்த படத்தில் ஸ்டைலான அதேசமயம் பவர்ஃபுல்லான வில்லனாக நடித்துள்ளார். தன்யா ஹோப்பின் நடிப்பு நிச்சயம் பாராட்டப்படும். இந்தப் படத்தை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருந்த ஒட்டுமொத்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கு எனது பணிவான நன்றிகள்," என்று இப்படத்தின் இயக்குநர் குகன் சென்னியப்பன் தெரிவித்தார்.

மில்லியன் ஸ்டுடியோ தயாரித்திருக்கும் இந்தப் படத்தை குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார். நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தன்யா ஹோப், ராஜீவ் பிள்ளை உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்ய, படத்திற்கு கோபி கிருஷ்ணா படத்தொகுப்பையும், கலை சுபேந்தர் பி.எல் மேற்கொண்டுள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com