என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பாச்சி"

    • விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்
    • உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தவெக தரப்பில் தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

    கடந்த மாதம் 27-ந்தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தவெக தரப்பில் தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

    இந்நிலையில், விஜய்க்கு ஆதரவாக திருப்பாச்சி படத்தில் அவருக்கு தங்கையாக நடித்த மல்லிகா பேசியுள்ளார்.

    விஜய் குறித்து மல்லிகா வெளியிட்டுள்ள வீடியோவில், "இன்ஸ்டாகிராமில் விஜய் சார் பத்திதான் வீடியோ வருகிறது. அவருக்கு நிறைய பேர் சப்போர்ட் பண்ணி பேசுகிறார்கள். நானும் அவரைப் பத்தி பேசணும்'னு நினைக்கிறேன். படப்பிடிப்பில் எல்லாம் அவர் ரொம்ப அமைதியா இருப்பாரு. ஆனால் கட்சி தொடங்கி மக்கள் கிட்ட பேசும்போது அவர் கிட்ட நிறைய மாற்றம் தெரியுது. அதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா உள்ளது.

    அவர் கேமரா முன்னாடி மட்டும் தான் நடிப்பார் மக்கள் முன்னாடி அல்ல. நல்லது செய்ய வந்தால் தப்பா சில விஷயம் நடக்கும் ஆனா, கடைசியில அவர் தான் ஜெயிப்பார். கூட்டத்துல சதி பண்ண சிலர் வருவாங்க கொஞ்சம் பார்த்து உஷாரா இருங்க அண்ணா" என்று தெரிவித்துள்ளார். 

    • தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ்.
    • விக்ரம் நடிப்பில் வெளிவந்த சாமி திரைப்படத்தில் பெருமாள் பிச்சை என்ற கதாப்பாத்திரத்தில் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார்.

    தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ். ஏராளமான திரைப்படங்களில் வில்லனாகவும், நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர நடிகராகவும் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரீனிவாச ராவ். அவரது தனித்துவமான சிரிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    விக்ரம் நடிப்பில் வெளிவந்த சாமி திரைப்படத்தில் பெருமாள் பிச்சை என்ற கதாப்பாத்திரத்தில் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார். அதன் பிறகு 2005 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த திருப்பாச்சி திரைப்படத்தில் சனியன் சகடை என்ற கதாப்பாத்திரம் மக்கள் மனதில் பதிந்தது. பின் 2011ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளிவந்த கோ திரைப்படத்தில் ஆளவந்தான் என்ர அரசியல்வாதி கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பார். அவர் வரும் காட்சிகள் இன்றும் சமூக வலைத்தளங்களில் மீம் டெம்ப்லேட்டுகளான உலா வந்து கொண்டு இருக்கின்றன.

    தற்போது 81 வயதாகும் கோட்டா ஸ்ரீனிவாச ராவ், கடந்த சில மாதங்களாகவே உடல் நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தார். இதனிடையே தெலுங்கானா மாநிலத்தில் இன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஐதராபாத் மக்களவைத் தொகுதியில் வசித்து வரும் ஸ்ரீனிவாசராவ் இன்று தனது வாக்கினை செலுத்துவதற்காக ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு வருகை தந்தார்.

    மனைவி மற்றும் உதவியாளர் ஒருவருடன் வருகை தந்த அவருக்கு, வாக்குச்சாவடிக்குள் அமர இருக்கைகள் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் தனது வாக்கினை செலுத்தினார். கம்பீரமான வில்லனாக பல திரைப்படங்களில் மிரட்டிய கோட்டா ஸ்ரீனிவாச ராவ், உடல் தளர்ந்து, வயோதிகம் காரணமாக நடந்து வந்ததை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஒரு காலத்தில் கம்பீரமான வில்லனாக வலம் வந்த அவர், இன்று நடக்க முடியாதபடி பிறரின் துணையோடு தள்ளாடியபடி வருகை தரும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளது. இந்த தள்ளாத வயதிலும் வாக்களிக்க வேண்டும் என்ற அவரது உறுதியை அவர்கள் பாராட்டி வருகின்றனர்.

     

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×