ரஜினியை சந்தித்த RDX இயக்குனர்

ரஜினிகாந்த் நடிக்கும் 170 ஆவது திரைப்படம் வேட்டையன். இந்த படத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
ரஜினியை சந்தித்த RDX இயக்குனர்
Published on

ரஜினிகாந்த் நடிக்கும் 170 ஆவது திரைப்படம் வேட்டையன். இயக்குநர் ஞானவேல் இயக்கும் இந்த படத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நாடு முழுக்க பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த நிலையில், இப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தற்பொழுது வெளியாகியது.

சில நாட்களுக்கு முன் வேட்டையன் படப்பிடிப்பு பாண்டிச்சேரி நடைப்பெற்றது அப்போழுது மலையாள இயக்குனரான நஹஸ் ஹிதயத் , ரஜினிகாந்துடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஹெலிகாப்டர் முன் புகைப்படம் எடுத்துள்ளனர். ஒரு புகைப்படத்தில் அன்பற்வ் மாஸ்டர் இருவரும் இருக்கின்றனர்.

ஆர் டி எக்ஸ் திரைப்படத்திற்கு அன்பறிவ் மாஸ்டர் தான் ஸ்டண்ட் காட்சிகளை இயக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com