search icon
என் மலர்tooltip icon
    • கலெக்டர் வளர்மதி வழங்கினார்
    • தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த சிப்காட்டில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் கடந்த 16-ந் தேதி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியின் போது விஷவாயு தாக்கியது.

    இதில் வேலூர் மாவட்டம், சதுப்பேரி கிராமத்தைச் சார்ந்த தொழிலாளி செந்தமிழ் செல்வன் (31) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து செந்தமிழ் செல்வன் குடும்பத்திற்கு அரசின் உடனடி நிவாரணத் தொகையாக ரூ.6 லட்சத்திற்கான காசோலையினை , மாவட்ட கலெக்டர் வளர்மதி, உயிரிழந்த செந்தமிழ் செல்வனின் மனைவி ஷீலாவிடம் வழங்கினார்.அப்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் பூங்கொடி உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    மேலும் இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-

    தொழிற்சாலையில் நடந்த இந்த விபத்து பெரும் அபாயகரமானது. இனி வரும் காலங்களில் இது போன்ற விபத்துகள் நடைபெறாத வண்ணம் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தொடர் கண்காணிப்பு இருத்தல் வேண்டும்.

    அதன் அடிப்ப டையில் ராணி ப்பேட்டை மாவட்டத்தில் பல மாதங்களாக இயங்காத அனைத்து தொழிற்சா லைகளிலும், தொழிற்சா லையில் உற்பத்தி மற்றும் உற்பத்தி அல்லாத பணியை தொடங்குவதற்கு முன் தொழிற்சாலை நிர்வாகத்தினர், மேலாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் மாவட்ட கலெக்டர்,தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார அலுவலர், மாசுகட்டுப்பாட்டு வாரியம், போலீஸ் நிலையங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு முன்அறிவிப்பு தெரிவித்த பின் பணியை தொடங்க வேண்டும்.

    தொழிற்சாலையில் மேற்கண்ட பணியை மேற்கொள்ள எந்தவொரு அறிவிப்புமின்றி பணி செய்தால் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடி சட்டரீதியான குற்றவியல் நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் என இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்
    • மெஷினை சரி செய்த போது விபரீதம்

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஐ ய்பேடு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 48). இவர் தனக்கு சொந்த மான இடத்தில் பாக்கு மட்டை தயாரிப்பு தொழில் செய்து வருகிறார்.

    சில தினங்களுக்கு முன்பு பாக்கு மட்டை தயாரிக்கும் மெஷின் பழுதடைந்துள்ளது. இதனால் பழுதடைந்த மெஷினை சரி செய்வதற் காக நாமக்கல் மாவட்டம் சூளிப்பாளையம் பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார்(40) என்பவரை நேற்று ஐப்பேடு கிராமத்திற்கு அழைத்து வந்தார்.

    அப்போது பாக்கு மட்டை தயாரிப்பு மெஷினை நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் சரிசெய்து கொண்டிருந்தார். மெஷினை சரி செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அதிலிருந்த மின் சாரம் ரமேஷ் குமாரை தாக்கியது.

    இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ரமேஷ் குமார் ஏற்க னவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சோளிங்கர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மெக்கானிக் சுரேஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாய் போலீசில் புகார்
    • உதவி கலெக்டர் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ஆற்காடு அடுத்த கீழ்விஷாரத்தை சேர்ந்தவர் பிச்சாண்டி, இவரது மகள் பிரியா (23).

    இவரும் லாரி டிரைவரான பாலு என்பவரும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். அம்மூர் அடுத்த ரெட்டியூர் பகுதியில் தனியாக வசித்து வந்தனர்.

    இந்த தம்பதிக்கு 3 வயதில் தஸ்வின், 1 வயதில் பவினேஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது குழந்தை அழும் சத்தம் கேட்டு பாலு எழுந்து பார்த்துள்ளார்.

    அப்போது பிரியா மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உடனடியாக பிரியாவை சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இது பற்றி தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் பிரியாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் பிரியா இறப்பதற்கான காரணம் என்ன? எப்படி இறந்தார் என்ற விவரம் தெரியாததால், அவரது தாய் ரமா (48) தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும் போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும் என ராணிப்பேட்டை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரியாவின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் திருமணமாகி 4 வருடங்களே ஆகி இருப்பதால் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வினோத் குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஒரு மணி நேரம் போராடி பிடித்தனர்
    • பொன்னூர் காப்பு காட்டில் விடப்பட்டது

    வந்தவாசி:

    வந்தவாசியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் 6 அடி நீல சாரை பம்பு பிடிபட்டது.

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் மக்களை அச்சுறுத்தி வந்த 6 அடி நீளம் சாரை பாம்பு பிடிபட்டது.

    வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தெரேசாபெரியநாயகம். இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. இவரது வீட்டில் 6 நீள சாரை பாம்பு புகுந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து வந்தவாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி 6 அடி நீல சாரைப்பாம்பை லாவகமாக பிடித்து பொன்னூர் காப்பு காட்டில் விட்டனர்.

    • இலக்கு மக்கள் பட்டியலில் முறைகேடாக பயனாளிகள் தேர்வு செய்வதாக புகார்
    • 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த கல்லாங்குத்து கிராமத்தில் இலக்கு மக்கள் பட்டியலில் முறைகேடாக பயனாளிகள் தேர்வு செய்யப்படுவதாக புகார் தெரிவித்து அந்த கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தமிழக அரசு ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், மகளிர் மேம்பாட்டு உள்ளிட்டவைக்காக வந்தவாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட கல்லாங்குத்து ஊராட்சியில் இலக்கு மக்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இந்த பட்டியலில் பயனாளிகளை ஊராட்சி நிர்வாகம் முறைகேடாக தேர்வு செய்வதாக புகார் தெரிவித்து அந்த கிராமத்தில் பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, கடந்த திங்கள்கிழமையே இதுகுறித்து வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

    தகவலறிந்து அங்கு வந்த கீழ்க்கொடுங்காலூர் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக சமரசம் செய்ததையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் வந்தவாசி- மேல்மருவத்தூர் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • மாலையில் தீமிதி விழா நடைபெற்றது
    • ஏராளமானோர் சாமி தரிசனம்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள கீழ்நகர் கிராமத்தில் அருள்மிகு திரௌபதியம்மன் கோயிலில் கடந்த மாதம் 30-ம்தேதி அலகு நிறுத்தி மகாபாரத அக்னி வசந்த விழா தொடங்கியது.

    தொடர்ந்து தினமும் பிற்பகல் 2 மணி அளவில் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்றது. கடந்த 6ம்தேதி முதல் தினமும் இரவில் மகாபாரத நாடகங்கள் நடைபெற்று வந்தது.

    பின்னர் கடந்த 17-ந் தேதி காலை கோயில் முன்பு அமைக்கப்பட்ட பிரமாண்ட துரியோதனன் சிலை முன்பு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

    மாலையில் தீமிதி விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் வருகைதந்து தந்து அம்மனை தரிசனம் செய்தார்.கோயில் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் ராணிதண்டபாணி சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.

    நேற்று தருமர் பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் விழாக்குழுவினர், இளைஞர்கள் செய்திருந்தனர்.

    • போக்குவரத்து பாதிப்பு
    • போலீசார் பேச்சுவார்த்தை

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த கொருக்கை பகுதியில் அர்ஜுனன் காலனி உள்ளது. இங்கு 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்தப் பகுதியில் கடந்த 5 வருடங்களாக சாலை குண்டும் குழியுமாக உள்ளது.

    இதே போல புதிதாக கட்டப்பட்ட தண்ணீர் தொட்டியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் முறையாக வருவதில்லை.

    இதுகுறித்து பலமுறை தலைவரிடமும், அதிகாரிகளும் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை கொருக்கை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவலறிந்து செய்யாறு போலீசார் மற்றும் கொருக்கை தலைவர் அருள் நரசிம்மன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    மேலும் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் அடைந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆம்பூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நடந்தது
    • சாலை அமைக்கும் பணி மந்தமாக நடைபெறுவதாக புகார்

    ஆம்பூர்:

    ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட ஏ.கஸ்பா மெயின் ரோடு அரசு உயர்நிலைப்பள்ளி முதல் காந்தி சிலை வரை ரூ.1.36 கோடியில் தார் சாலை அமைப்பதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டன.

    ஏற்கனவே இருந்த சாலை தோண்டி எடுக்கப்பட்டு புதிய சாலை அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனால் அச்சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள் ளாகி வருகின்றனர். சாலையில் ஜல்லி கற்கள் கொட்டப்பட் டுள்ளதால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் பழுதாகின் றன. மேலும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடை கின்றனர்.

    சாலை அமைக்கும் பணி தரமில்லாமல் நடைபெறுவதால் சாலை அமைக்கப்பட்ட பிறகு வெகுவிரைவிலேயே சாலை சேதமடையும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறி முன்னாள் நகர மன்ற உறுப்பினர் சுரேஷ்பாபு நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விரைவில் சாலையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென நகராட்சி அலுவலகத்தில் சங்கு ஊதி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். இச்சம்பவத்தால் நகராட்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கலெக்டர் வளர்மதி தொடங்கி வைத்தார்
    • கட்டணமாக மொத்தம் 45 ரூபாய் ஆன்லைனில் செலுத்த வேண்டும்

    ராணிப்பேட்டை:

    புதிய மின்னணு அட்டைகள் வட்ட வழங்கல் அலுவலகங்கள், உணவு பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மண்டல் அலுவலகங்கள் மூலமாக பயனாளிகள் பெற்று வருகின்றனர்.

    உறுதி செய்யப்பட்ட சேவையினை அளிக்கும் பொருட்டும், நேரடியான தொடர்பினை தவிர்க்கும் பொருட்டும், இந்திய தபால் துறையின் மூலம் பயனாளிகளின் இருப்பி டத்திற்கு, பயனாளிகளின் விண்ணப்பத்தின் பேரில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அனுப்பப்படுகிறது.

    புதிய ரேசன் அட்டை மற்றும் நகல் ரேசன் அட்டையினை தங்களின் இருப்பிடத்திலலேயே பெற விருப்பம் தெரிவிக்கும் பயனாளி களிடம் அஞ்சல் கட்டணம் வசூலித்து நகல் ரேசன் அட்டைகள் சம்பந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

    பயனாளி கள் புதிய ரேசன் அட்டை மற்றும் நகல் ரேசன் அட்டைக்கு விண்ணப்பி க்கும் போது ரேசன் அட்டையினை தபாலில் பெற விரும்புகிறாரா அல்லது நேரில் பெற விரும்புகிறாரா என விருப்பம் தெரிவிக்க www.tnpds.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த விருப்பத்தின் பேரில் பயனாளிக்கு தபால் மூலம் குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.

    இதற்கான தபால் கட்டணம் புதிய ரேசன் அட்டைக்கு ரூ.25ம், நகல் அட்டைக்கு கட்டணம் ரூ.20, தபால் கட்டணம் ரூ.25 என மொத்தம் 45 ரூபாய் ஆன்லைனில் செலுத்த வேண்டும். அஞ்சல் வழியாக பெற விருப்பம் இல்லாத நபர்களுக்கு தற்போதைய நடைமுறைப்படியே குடும்ப அட்டை வழங்கப்படுகிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 210 பயனாளிகள் ரேசன் அட்டையில் திருத்தம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பொழுது அஞ்சல் வழியாகவே புதிய திருத்தம் செய்யப்பட்ட மின்னணு நகல் அட்டையினை பெற விருப்பம் தெரிவித்து கட்டணம் செலுத்தி இருந்தனர். அவர்களுக்கான புதிய மின்னணு அட்டைகள் வரப்பெற்று தபால் அலுவலகம் வாயிலாக பயனாளிகளின் முகவரிக்கு அனுப்பும் நடைமுறையினை கலெக்டர் வளர்மதி தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி, தபால் துறை விற்பனை மேலாளர் இலியாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
    • மொத்தம் 21 மனுக்கள் பெறப்பட்டன

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயலாளர் மோகன் கொடுத்த மனுவில்,வாலாஜா அடுத்த வன்னிவேடு கிராமத்தில் புவனேஸ்வரி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது.இந்த கோவிலின் பூட்டை உடைத்து தொடர்ந்து திருட்டு சம்பவம் நடைபெற்று வருகிறது. இதற்காக கோவிலில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது, அவற்றையும் சேதப்படுத்தியும், திருடிச் சென்று விட்டனர்.

    இந்த தொடர் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக வாலாஜா போலீசார் தீவிர விசாரணை நடத்தியோ, தனிப்படை அமைத்தோ திருட்டில் ஈடுபட்டவர்களை பிடித்து கோவிலுக்கு சொந்தமான பொருட்களை மீட்க வில்லை.

    எனவே இனி வரும் காலங்களில் கோவிலில் திருட்டு சம்பவத்தை தடுக்க வேண்டும். கோவிலைச் சுற்றி உயர்கோபுரங்கள் அமைத்து அதில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். வாலாஜா போலீஸ் நிலையத்திலிருந்து நேரடியாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    இது தவிர பொதுமக்களிடமிருந்து மொத்தம் 21 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்று கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மனுக்கள் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்
    • வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்

    ஆரணி:

    ஆரணி தாலுக்கா இன்ஸ்பெக்டர் புகழ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆரணி அடுத்த விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த தீர்த்தம்மாள், லாடவாரம் பகுதியை சேர்ந்த ஆந்தாயி மட்டதாரி கிராமத்தை சேர்ந்த சுசிந்திரன் ஆகிய 3 பேர் அரசு மதுபாட்டிகள் பதுக்கி வைத்து விற்று கெண்டிருந்தனர். அவர்கள் போலீசார் பிடித்து சுமார் 52 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் 3 பேர் மீது வழக்கு பதிந்து ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • 6 வாகனங்கள் அனுமதி ரத்து
    • முதலுதவி, தீயணைப்பான் உள்ளிட்ட வசதிகளின்றி இருந்ததால் நடவடிக்கை

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூர் ஊராட்சிக்குபட்ட ரகுநாதபுரம் கூட்ரோடு அருகில் ஆரணி மோட்டார் வாகன அலுவலகம் இயங்கி வருகினறது.

    ஆரணி போளுர் செய்யார் சேத்பட் உள்ளிட்ட பகுதிகளில் 45 தனியார் பள்ளி உள்ளன. இந்த பள்ளி பஸ்களை மோட்டார் வாகன அலுவலர் சரவணன், ஆய்வாளர் முருகேன் ஆய்வு மேற்கொண்டனர்.

    மேலும் இதில் 353 வாகனங்களில் முதல்கட்ட மாக 230 தனியார் பள்ளி வாகனங்களில் 22 வாகனங்கள் ஆய்வு செய்தனர். முதலுதவி தீயணைப்பான் உள்ளிட்ட வசதிகளின்றி உள்ள 6 வாகனங்கள் அனுமதி ரத்து செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    மற்ற வாகனங்களை தொடர்ந்து மோட்டார் வாகன அலுவலர்கள் தணிக்கையில் ஈடுபட்டனர். தாசில்தார் மஞ்சுளா, ஆரஞ்ச் பள்ளி சேர்மன் சிவக்குமார், வாகன ஓட்டுனர் பயிற்சி பள்ளி சங்கத் தலைவர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ×