search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீமிதி விழா"

    • தீக்குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து தீ மிதித்தனர்
    • தருமர் பட்டாபிஷேகம் நடந்தது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு மதுரா வீரக்கோவிலில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் கடந்த மாதம் மகாபாரத அக்னி வசந்த விழா தொடங்கியது.

    இதைமுன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து கொடியேற்றத்துடன் அலகு நிறுத்தப்பட்டது. நேற்று கோவில் முன்பு அமைக்கப்பட்ட பிரமாண்ட துரியோதனன் சிலை முன்பு துரியோதனன் பீமன் வேடமணிந்து துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் கோவில் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து தீ மிதித்தனர்.

    இன்று காலை தருமர் பட்டாபிஷேகம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை படவேடு கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • சிறப்பு அபிஷேகம் நடந்தது
    • மகாபாரத நாடகங்கள் நடைபெற உள்ளது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு மதுரா வீரக்கோவிலில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் கடந்த 18-ந் தேதி மகாபாரத அக்னி வசந்த விழா தொடங்கியது. இதைமுன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து கொடியேற்றத்துடன் அலகு நிறுத்தப்பட்டது.

    தினமும் பிற்பகல் 2 மணிமுதல் மாலை 5 மணிவரை தினமும் மேல்பள்ளிப்பட்டு வெ.கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகா பாரத சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது.

    வருகிற 25-ந் தேதி முதல் செப்டம்பர் 7-ந் தேதி வரை தினமும் கோவிலின் முன்பு போத்துராஜாமங்கலம் குழுவினரின் மகாபாரத நாடகங்கள் நடைபெற உள்ளது.

    • ஸ்ரீரேணுகாம்பாள் அம்மனின் புடவையை கட்டிக் கொண்டால் விரைவில் எண்ணம் கைகூடும்.
    • அக்னிதேவனுக்கு என்றே தனிச் சன்னதி அமைந்திருப்பது வியப்பானது.

    சென்னை குரோம்பேட்டை ஜமீன் ராயப்பேட்டையில் படவேட்டம்மன் ஆலயம் உள்ளது. இங்கு கருவறையில் அமர்ந்த கோலத்தில் ஸ்ரீரேணுகாம்பாள் அருள்பாலித்து வருகிறாள்.

    வலது கையில் அன்னம், உடுக்கையை பின்னிரு கைகள் தாங்கி நிற்க, முன்னிருகைகள் அபய ஹஸ்தமாகக் காட்சிதர, வருகின்ற பக்தர்களுக்கு கருணைக் கண்களோடு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.

    அம்மன் பீடத்துக்கு கீழே இரண்டு முக வடிவ விக்ரகம் காணப்படுகிறது. அதில் ஒன்று சுமார் ஆயிரம் வருடங்களாக முந்தையது என்கிறார்கள்.

    வேறு எந்தத் தலத்திலும் காண முடியாத வகையில் இத்தலத்தில் தென் கிழக்கில் அக்னிதேவனுக்கு என்றே தனிச் சன்னதி அமைந்திருப்பது வியப்பான செய்தியாகும். இக்கோவிலில் நடைபெறும் தீமிதி விழாவில் அக்னியை மூட்டி இந்த அக்னிதேவன் சன்னதியில் வைத்து ஆராதித்து வருகின்றனர்.

    இக்கோவிலில் மிகச் சிறப்பான விழாவாக, ஆடி மாதம் நாலாவது வார ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறும் தீமிதி விழா மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது. ஆயிரக் கணக்கான பக்தர்கள் தீமிதியில் பக்தியுடன் கலந்து கொள்கின்றனர்.

    கல்யாணம் ஆகாத பெண்கள் மற்றும் குழந்தைப் ேபறு வேண்டி நிற்பவர்கள் இத்தலத்து ஸ்ரீரேணுகாம்பாள் அம்மனின் புடவையை வாங்கி கட்டிக் கொண்டால் வெகு விரைவிலேயே எண்ணம் கைகூடுகிறது.

    • மாலையில் தீமிதி விழா நடைபெற்றது
    • ஏராளமானோர் சாமி தரிசனம்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள கீழ்நகர் கிராமத்தில் அருள்மிகு திரௌபதியம்மன் கோயிலில் கடந்த மாதம் 30-ம்தேதி அலகு நிறுத்தி மகாபாரத அக்னி வசந்த விழா தொடங்கியது.

    தொடர்ந்து தினமும் பிற்பகல் 2 மணி அளவில் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்றது. கடந்த 6ம்தேதி முதல் தினமும் இரவில் மகாபாரத நாடகங்கள் நடைபெற்று வந்தது.

    பின்னர் கடந்த 17-ந் தேதி காலை கோயில் முன்பு அமைக்கப்பட்ட பிரமாண்ட துரியோதனன் சிலை முன்பு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

    மாலையில் தீமிதி விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் வருகைதந்து தந்து அம்மனை தரிசனம் செய்தார்.கோயில் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் ராணிதண்டபாணி சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.

    நேற்று தருமர் பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் விழாக்குழுவினர், இளைஞர்கள் செய்திருந்தனர்.

    • வருகிற 23-ந் தேதி நடக்கிறது
    • வசந்த விழாசிறப்பு பூஜையுடன் தொடங்கியது

    கண்ணமங்கலம்:

    வேலூர் மாவட்டத்தில் உள்ள கம்மவான்பேட்டை கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் அக்னி வசந்த விழா நேற்று சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.

    இதைமுன்னிட்டு கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து அலகு நிறுத்தி தினமும் மகாபாரத சொற்பொழிவு நடக்கிறது.

    14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை)திரவுபதியம்மனுக்கு திருக்கல்யாணமும், 23- ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை துரியோதனன் படுகளமும், மாலை தீ மிதி விழாவும் நடக்கிறது.

    24-ந்தேதி தருமர் பட்டாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    • மாவுரெட்டி யில் உள்ள மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை யொட்டி நேற்று தீமிதி விழா நடைபெற்றது.
    • ஏராள மான ஆண்கள் மற்றும் பெண்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே மாவுரெட்டி யில் உள்ள மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை யொட்டி நேற்று தீமிதி விழா நடைபெற்றது. இதில் ஏராள மான ஆண்கள் மற்றும் பெண்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    தீமிதி திருவிழா கடந்த 9-ந் தேதி, கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து கடந்த 15-ந் தேதி மறுக்காப்பு கட்டி அம்மனுக்கு நாள்தோ றும் சிறப்பு அபிஷேக ஆரா தனைகளும், அலங்காரமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இரவு பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி யும் நடைபெற்றது.

    நேற்று காலை பொது மக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்த டைந்தனர். மாலை அம்மன் கோவில் முன்பு இருந்த தீ குண்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    இன்று மாலை பொங்கல், மாவிளக்கு மற்றும் வண்டி வேடிக்கை நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து நள்ளிரவு கம்பம் எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவ டைகிறது. விழாவிற்கான ஏற்பாடு களை மாவுரெட்டி மகா மாரியம்மன் கோவில் திருவிழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்

    • முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி விழா நடைபெற்றது.
    • பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    புதுக்கோட்டை:

    ஆவுடையார்கோவில் அருகே பாண்டிபத்திரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். கொரோனா பொது முடக்கத்தால் 2 ஆண்டுகளாக திருவிழா நடத்தப்படவில்லை. இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 21-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, முத்துமாரியம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் காலை மற்றும் இரவு நேரங்களில் நடைபெற்று வருகிறது. 10-ம் நாள் திருவிழாவான நேற்று விரதமிருந்த பக்தர்கள் பால்குடம், காவடிகளை சுமந்து கோவிலை 3 முறை சுற்றி வந்தனர். அதன்பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த அக்னி குண்டத்தில் பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் பாண்டிபத்திரம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்."

    • திரௌபதி அம்மன் கோவில் தீமிதி விழா நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் பங்கேற்பு

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சின்ன வளையம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவில் 2019ல் கும்பாபிஷேகம் நடைபெற்று அதன் பிறகு கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு காரணமாக கோவிலில் எந்த நிகழ்ச்சியும் நடைபெறவில்லை. அதன் பிறகு தற்போது ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து திருவிழா நடத்துவதாக முடிவெடுக்கப்பட்டு, துரோபதி அம்மனுக்கு கொடியேற்றி காப்பு கட்டி விழாவை தொடங்கினர்.

    அதன் பின் 3 மாதம் காலமாக மகாபாரதம் பாடி அதைச் சுற்றியுள்ள 8 கிராம பொதுமக்கள் அவர்களுடைய குடும்ப வழிபாடான மண்டாபிடி என்னும் நிகழ்ச்சியை நடத்தி வந்தனர். மேலும் அரவான் களபலி நிகழ்ச்சி நடத்தி மேலும் இறுதி நாளான திரௌபதி அம்மனை பல வண்ண மலர்களால் அலங்கரித்து, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து அம்மனின் அருளால் அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்து அவர்களுடைய வேண்டுதலை நிறைவேற்றி அம்மனின் அருளை பெற்று சென்றனர். மேலும் இந்த திருவிழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பக்தர்கள் தங்களுடைய குடும்பத்தோடு அம்மனை வழிபட்டு அருளை பெற்று சென்றனர்.

    ×