என் மலர்
நீங்கள் தேடியது "Electrical accident"
- குளியல் அறையில் ஈரமாக வாய்ப்புள்ள இடங்களில் சுவிட்சுகளை பொருத்தக்கூடாது.
- மின் சாதனத்துக்கான வயரில் வேறு எந்த மின்சாதனைத்தையும் இணைக்கக்கூடாது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மின்விபத்துகளை எப்படி? என்பது குறித்து மின்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக மின்துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மரக்கிளைகளை அகற்ற...
*மின் கம்பங்களில் பந்தல், கொடிக்கம்பி மற்றும் கயிறு, ஆடு, மாடு, போன்ற வீட்டு விலங்குகளை கட்டக்கூடாது.
*மின்சார மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்ற மின்துறை அலுவலர்களை அணுகவேண்டும்.
*மழைக்காலததில் இடி, மின்னல் விழும்போது தண்ணீர் தேங்கியுள்ள பகுதியில் நிற்கக்கூடாது. மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் தொட முயற்சிக்க வேண்டாம். உடனடியாக மின்துறை அலுவலர்களுக்கு தெரிவிக்கவேண்டும். (கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1912).
*இடி, மின்னல் இருக்கும்போது டிவி, கம்ப்யூட்டர், செல்போன் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். மேலும் இத்தகைய மின் சாதனங்களின் இணைப்பு வயரை பிளக்கிலிருந்து அகற்றி வைக்கவேண்டும்.
பழுதான மின்சாதனங்கள்
*மின்மாற்றிகள், மின்பெட்டிகள், மின் இழுவைக்கம்பிகள் ஆகியவற்றை தொடக்கூடாது. கனரக வாகனங்களை மின் கம்பங்கள், மின்மாற்றிகள் அருகில் நிறுத்தி பொருட்களை ஏற்றவோ இறக்கவோ கூடாது. மின்சாரத்தால் ஏற்படும் தீயை தண்ணீரைக்கொண்டு அணைக்க முயற்சிக்க வேண்டாம். தீயணைப்பு துறையின் உதவியை நாடவும்.
*வீட்டின் சுவர்களில் மின்சாதனங்களில் மின் அதிர்ச்சியை உணர்ந்தால் உலர்ந்த ரப்பர் காலணி அணிந்து மெயின் சுவிட்சை அணைத்துவிடவும். அதன்பின் மின்துறைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும்.
*சைக்கிள் செயின், கம்பிகள், பச்சைக்கொடிகள், ஈரமான பூமாலை போன்றவற்றை மின்கம்பிகளில் தூக்கி எறிவது ஆபத்தை விளைவிக்கும். பழுதான மின்சாதனங்களை பயன்படுத்தக்கூடாது. உடைந்த சுவிட்ச், பிளக், பியூஸ் போன்றவற்றை உடனடியாக மாற்றவேண்டும்.
சுவிட்சை அணைத்த பிறகு...
*குளியல் அறையில் ஈரமாக வாய்ப்புள்ள இடங்களில் சுவிட்சுகளை பொருத்தக்கூடாது. பிளக் சுவிட்சை அணைத்த பிறகே மின்விசிறி, அயன்பாக்ஸ், செல்போன், சார்ஜர் போன்றவற்றை பிளக்கில் இணைக்கவேண்டும்.
*தரைகளை கழுவும்போது ஈரக்கைகளால் இணைப்பிலிருக்கும் டேபிள்பேன் போன்றவற்றை நகர்த்தக்கூடாது. அவற்றை முன்னதாகவே மின் இணைப்பிலிருந்து அகற்றிவிட வேண்டும்.
*கிரைண்டர் போன்ற உபகரணங்களுக்கு தனியாக நில (எர்த்) இணைப்பு கொடுக்கவேண்டும். மின் சாதனத்துக்கான வயரில் வேறு எந்த மின்சாதனைத்தையும் இணைக்கக்கூடாது. பழுதான சுவிட்ச், பியூஸ் போன்றவற்றை மாற்றும்போது அதே அளவு திறன் கொண்ட சாதனங்களையே பொருத்த வேண்டும்.
வயரிங் வேலைகள்
*சுவிட்ச் போர்டு, மின்மோட்டார், தண்ணீர் பம்ப் மோட்டார் போன்றவற்றின் மீது தண்ணீர், மழை நீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அரசு உரிமம் பெற்ற மின் ஒப்பந்ததாரர் மூலமாக மட்டுமே மின்சார வயரிங் வேலைகளை செய்யவேண்டும். ஈரக்கையால் சுவிட்ச் போடக்கூடாது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- கோவில் விழாவுக்கு தோரணம் கட்டியபோது பரிதாபம்
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் குச்சனூர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் தேவன் (வயது 30) பெயிண்டராக உள்ளார்.
குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை பால விநாயகர் கோவில் தெருவில் உள்ள ஒரு கோவிலில் விழாவிற்காக தேவன் நண்பர்களுடன் தோரணம் கட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு மின்விளக்குகள் இருந்த ஒயரை எதிர்பாராத விதமாக தேவன் தொட்டு உள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி எரியப்பட்டார்.
இதில் மின்சாரம் தாக்கியதில் தேவன் சம்பவ இடத்திலே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி தேவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எலிக்கு வைத்த வேலியில் சிக்கி பரிதாபம்
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
மங்கலத்தை அடுத்த கீழ்பாலானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் (வயது 54), விவசாயி. இவர், அவரது நிலத்தில் நெற்பயிர் செய்து இருந்தார். வயலில் எலி தொல்லை அதிகமாக இருந்ததால் வயலை சுற்றி மின்வேலி அமைத்திருந்தார்.
சம்பவத்தன்று இரவு சம்பத் வயல் ஓரத்தில் நடந்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக மின்வேலியில் சிக்கி மயங்கி கிடந்தார்.
வயலுக்கு சென்ற தந்தை நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அவருடைய மகன் வயலுக்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது சம்பத் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீடுகளில் ஐ.எஸ்.ஐ. தரம் வாய்ந்த மின்சாதனங்களை பயன்படுத்த வேண்டும்.
- தற்போது புதிய மின் இணைப்புகளில் மின் கசிவு தடுப்பு சாதனம் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வீடுகளில் ஐ.எஸ்.ஐ. தரம் வாய்ந்த மின்சாதனங்களை பயன்படுத்த வேண்டும். வீட்டு வயரிங் பணிகளை உரிமம் பெற்ற ஒப்பந்ததாரர்கள் மூலம் செய்ய வேண்டும். நுகர்வோர் இருப்பிடங்களில் மின் விபத்துகளை தவிர்க்க மின்கசிவு தடுப்பு சாதனத்தை பொருத்த வேண்டும். தற்போது புதிய மின் இணைப்புகளில் மின் கசிவு தடுப்பு சாதனம் பொருத்துவது கட்டாய மாக்கப்பட்டுள்ளது.
கட்டுமான பணி மற்றும் வீடுகளில் வெள்ளை அடிக்கும் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் ஏணிகளை கவனமாக கையாள வேண்டும். விவசாய நிலங்களில் மின்வேலி அமைப்பதை தவிர்க்க வேண்டும். மின்வாரிய ஊழியர்கள் மூலம் மின்தடைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். மின் விபத்துகளை தவிர்க்க மக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வீட்டிற்கு சுண்ணாம்பு அடித்து கொண்டிருந்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அருணாசலநகர் கம்பர் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 50). பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சரஸ்வதி அரசு பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
குடியாத்தம் அடுத்த செதுக்கரை பொன்னம்பட்டி பகுதியில் சீனிவாசன் புதிதாக வீடு கட்டி வருகிறார். வீட்டிற்கு அவரே சுண்ணாம்பு அடித்து வந்தார்.
நேற்று வழக்கம்போல் வீடு கட்டும் பணியில் பணியாளர்கள் இருந்துள்ளனர். அதன் பின்னர் பணியாளர்கள் சென்ற பின்னர் சீனிவாசன் மட்டும் தனியே வீட்டிற்கு சுண்ணாம்பு அடித்து கொண்டிருந்தனர்.
மாலை நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் சீனிவாசனின் குடும்பத்தினர் வீடு கட்டும் இடத்திற்கு வந்து பார்த்துள்ளனர்.
அப்போது வீட்டில் மோட்டர் போட சென்றபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உடல் கருகி சீனிவாசன் இறந்தது தெரியவந்தது.
இச்சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற டவுன் போலீசார் சீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்க ம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டாரை இயக்க சுவிட்ச் போட்டபோது பரிதாபம்
- போலீசார் விசாரணை
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு ஒன்றியத்தில் உள்ள தும்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஆதிமூலத்தின் மகன் ராமகிருஷ்ணன் (வயது 22). இவர் வீட்டில் உள்ள மின் மோட்டாரை இயக்க சுவிட்ச் போட்டபோது மின்சாரம் பாய்ந்தது.
இதில் அவர் அலறவே சத்தம் கேட்டு அவருடைய அக்காள் விஜயலட்சுமி ஓடி வந்து மின்சாரத்தை நிறுத்தினார். எனினும் ராமகிருஷ்ணன் அதே இடத்தில் துடி துடித்து இறந்தார்.
இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசில் ஆதிமூலம் கொடுத்த புகாரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ணன் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கி பரிதாபம்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த பருத்திபுத்தூர் கிராமத்தை சேர்ந்த வர் பாபு. இவரது பசு மாடு வயலில் மேய்ந்து கொண்டிருந்தது.
அங்கு மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. மேய்ந்து கொ ண்டிருந்த பசுமாடு எதிர்பாராத விதமாக மின் கம்பியில் சிக்கிக்கொண்டது.
அதில் கசிந்த மின்சாரம் பாய்ந்த தில் பசு மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த தாலுகா போலீசார் மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து மின்சாரத்தை துண்டிக்க நடவடிக்கை எடுத்தனர்.
பின்னர் பசுமாட்டின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்
- மெஷினை சரி செய்த போது விபரீதம்
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஐ ய்பேடு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 48). இவர் தனக்கு சொந்த மான இடத்தில் பாக்கு மட்டை தயாரிப்பு தொழில் செய்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன்பு பாக்கு மட்டை தயாரிக்கும் மெஷின் பழுதடைந்துள்ளது. இதனால் பழுதடைந்த மெஷினை சரி செய்வதற் காக நாமக்கல் மாவட்டம் சூளிப்பாளையம் பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார்(40) என்பவரை நேற்று ஐப்பேடு கிராமத்திற்கு அழைத்து வந்தார்.
அப்போது பாக்கு மட்டை தயாரிப்பு மெஷினை நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் சரிசெய்து கொண்டிருந்தார். மெஷினை சரி செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அதிலிருந்த மின் சாரம் ரமேஷ் குமாரை தாக்கியது.
இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ரமேஷ் குமார் ஏற்க னவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சோளிங்கர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மெக்கானிக் சுரேஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆடுகளுக்கு தழை பறித்தபோது பரிதாபம்
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த பால்னாங் குப்பம் பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 47). இவர் திருப்பத்தூர் அரசு பணிமனையில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சுதா. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் இவர் வளர்த்து வரும் ஆடுகளுக்கு உணவளிக்க வீட்டின் அருகே இருந்த மரத்தில் இரும்பு தொரட்டி மூலம் தழைகளை பறித்தார். அப்போது கண்ணதாசன் கையில் பிடித்திருந்த தொரட்டி வீட்டின் அருகே சென்ற மின் கம்பி மீது விழுந்தது. அப்போது திடீரென அவர் மீது
மின்சாரம் தாக்கியது. இதில் மயங்கி விழுந்த அவரை, அவரது தாயார் ரத் தினம்தூக்கச் சென்றுள்ளார். அப்போது அவரையும் மின் சாரம் தாக்கி உள்ளது.
இதை பார்த்த பொதுமக் கள் கண்ணதாசனை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்ற னர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கண்ணதாசன் ஏற்கனவே இறந்து விட்டதாகதெரிவித்த னர். படுகாயம் அடைந்த அவ ரது தாயாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்த தும் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங் கையர்கரசி மற்றும் போலீ சார் சென்று பிணத்தை கைப் பற்றி பிரேத பரிசோதனைக் காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மனநலம் பாதிக்கப்பட்டவர்
- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
ஜோலார்பேட்டை:
தர்மபுரி மாவட்டம் மாடஹல்லி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 40). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.
குடும்ப தகராறு காரணமாக கடந்த வருடங்களாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
லட்சுமணன் கரும்பு வெட்டும் தொழில் செய்து வருகிறார்.
இவருக்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சுய நினைவு மாறி மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் சுற்றித் திரிவதாக கூறப்படுகிறது.
கடந்த 3-ந் தேதி பவுர்ணமி என்பதால் லட்சுமணனுக்கு சுயநினைவு மாறி ஈரோட்டில் இருந்து ஏதோ ஒரு ரெயில் மூலம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரெயில் மீது ஏறி உள்ளார். அப்போது மேலே இருந்த உயர் அழுத்த மின் கம்பி லட்சுமணன் மீது பட்டு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தார்.
இரவு நேரம் என்பதால் யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. பின்னர் 4-ந் தேதி காலை தண்டவாளத்தின் அருகில் மயங்கிய நிலையில் கிடந்தவரை ரெயில்வே போலீசார் மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
- வீட்டில் ஒயரிங் வேலை செய்தபோது பரிதாபம்
வேலூர்:
பெங்களூரை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 56), எலக்ட்ரீசியன். இவர் நேற்று முன்தினம் சத்துவாச்சாரியில் உள்ள தங்கை வீட்டிற்கு வந்தார்.
மூர்த்தியின் தங்கை வீடு பராமரிப்பு பணிகள் நடந்து வந்தது. அப்போது மூர்த்தி வீட்டில் ஒயரிங் வேலை செய்தபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
படுகாயம் அடைந்த அவரை மீட்டு, 108 ஆம்பூலன்ஸ் மூலம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மூர்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சக ஊழியர்கள் மீட்டனர்
- போலீசார் விசாரணை
வெம்பாக்கம்:
செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுக்கா சின்ன ஏழாச்சேரி பெரியார் நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30) இவர் அதே பகுதியில் உள்ள கல் குவாரி ஒன்றில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார்.
சுரேஷ் நேற்று முன்தினம் வழக்கம் போல் கல்குவாரிக்கு வேலைக்கு சென்றார்.
அப்பகுதியில் மின்சாரம் இல்லாததால் ஜெனரேட்டரை ஆன் செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஜெனரேட்டிலிருந்து வந்த மின்சாரம் சுரேஷ் மீது தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.
உடனிருந்த சக ஊழியர்கள் அவரைக் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் சுரேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சுரேசின் தந்தை சீனிவாசன் தூசி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.