என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலி
- வீட்டிற்கு சுண்ணாம்பு அடித்து கொண்டிருந்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அருணாசலநகர் கம்பர் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 50). பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சரஸ்வதி அரசு பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
குடியாத்தம் அடுத்த செதுக்கரை பொன்னம்பட்டி பகுதியில் சீனிவாசன் புதிதாக வீடு கட்டி வருகிறார். வீட்டிற்கு அவரே சுண்ணாம்பு அடித்து வந்தார்.
நேற்று வழக்கம்போல் வீடு கட்டும் பணியில் பணியாளர்கள் இருந்துள்ளனர். அதன் பின்னர் பணியாளர்கள் சென்ற பின்னர் சீனிவாசன் மட்டும் தனியே வீட்டிற்கு சுண்ணாம்பு அடித்து கொண்டிருந்தனர்.
மாலை நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் சீனிவாசனின் குடும்பத்தினர் வீடு கட்டும் இடத்திற்கு வந்து பார்த்துள்ளனர்.
அப்போது வீட்டில் மோட்டர் போட சென்றபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உடல் கருகி சீனிவாசன் இறந்தது தெரியவந்தது.
இச்சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற டவுன் போலீசார் சீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்க ம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.