என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சார விபத்து"

    • வீட்டிற்கு சுண்ணாம்பு அடித்து கொண்டிருந்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அருணாசலநகர் கம்பர் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 50). பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சரஸ்வதி அரசு பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    குடியாத்தம் அடுத்த செதுக்கரை பொன்னம்பட்டி பகுதியில் சீனிவாசன் புதிதாக வீடு கட்டி வருகிறார். வீட்டிற்கு அவரே சுண்ணாம்பு அடித்து வந்தார்.

    நேற்று வழக்கம்போல் வீடு கட்டும் பணியில் பணியாளர்கள் இருந்துள்ளனர். அதன் பின்னர் பணியாளர்கள் சென்ற பின்னர் சீனிவாசன் மட்டும் தனியே வீட்டிற்கு சுண்ணாம்பு அடித்து கொண்டிருந்தனர்.

    மாலை நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் சீனிவாசனின் குடும்பத்தினர் வீடு கட்டும் இடத்திற்கு வந்து பார்த்துள்ளனர்.

    அப்போது வீட்டில் மோட்டர் போட சென்றபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உடல் கருகி சீனிவாசன் இறந்தது தெரியவந்தது.

    இச்சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற டவுன் போலீசார் சீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்க ம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டாரை இயக்க சுவிட்ச் போட்டபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு ஒன்றியத்தில் உள்ள தும்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஆதிமூலத்தின் மகன் ராமகிருஷ்ணன் (வயது 22). இவர் வீட்டில் உள்ள மின் மோட்டாரை இயக்க சுவிட்ச் போட்டபோது மின்சாரம் பாய்ந்தது.

    இதில் அவர் அலறவே சத்தம் கேட்டு அவருடைய அக்காள் விஜயலட்சுமி ஓடி வந்து மின்சாரத்தை நிறுத்தினார். எனினும் ராமகிருஷ்ணன் அதே இடத்தில் துடி துடித்து இறந்தார்.

    இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசில் ஆதிமூலம் கொடுத்த புகாரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ணன் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கி பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த பருத்திபுத்தூர் கிராமத்தை சேர்ந்த வர் பாபு. இவரது பசு மாடு வயலில் மேய்ந்து கொண்டிருந்தது.

    அங்கு மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. மேய்ந்து கொ ண்டிருந்த பசுமாடு எதிர்பாராத விதமாக மின் கம்பியில் சிக்கிக்கொண்டது.

    அதில் கசிந்த மின்சாரம் பாய்ந்த தில் பசு மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த தாலுகா போலீசார் மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து மின்சாரத்தை துண்டிக்க நடவடிக்கை எடுத்தனர்.

    பின்னர் பசுமாட்டின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்
    • மெஷினை சரி செய்த போது விபரீதம்

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஐ ய்பேடு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 48). இவர் தனக்கு சொந்த மான இடத்தில் பாக்கு மட்டை தயாரிப்பு தொழில் செய்து வருகிறார்.

    சில தினங்களுக்கு முன்பு பாக்கு மட்டை தயாரிக்கும் மெஷின் பழுதடைந்துள்ளது. இதனால் பழுதடைந்த மெஷினை சரி செய்வதற் காக நாமக்கல் மாவட்டம் சூளிப்பாளையம் பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார்(40) என்பவரை நேற்று ஐப்பேடு கிராமத்திற்கு அழைத்து வந்தார்.

    அப்போது பாக்கு மட்டை தயாரிப்பு மெஷினை நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் சரிசெய்து கொண்டிருந்தார். மெஷினை சரி செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அதிலிருந்த மின் சாரம் ரமேஷ் குமாரை தாக்கியது.

    இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ரமேஷ் குமார் ஏற்க னவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சோளிங்கர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மெக்கானிக் சுரேஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனநலம் பாதிக்கப்பட்டவர்
    • அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

    ஜோலார்பேட்டை:

    தர்மபுரி மாவட்டம் மாடஹல்லி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 40). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    குடும்ப தகராறு காரணமாக கடந்த வருடங்களாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    லட்சுமணன் கரும்பு வெட்டும் தொழில் செய்து வருகிறார்.

    இவருக்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சுய நினைவு மாறி மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் சுற்றித் திரிவதாக கூறப்படுகிறது.

    கடந்த 3-ந் தேதி பவுர்ணமி என்பதால் லட்சுமணனுக்கு சுயநினைவு மாறி ஈரோட்டில் இருந்து ஏதோ ஒரு ரெயில் மூலம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரெயில் மீது ஏறி உள்ளார். அப்போது மேலே இருந்த உயர் அழுத்த மின் கம்பி லட்சுமணன் மீது பட்டு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தார்.

    இரவு நேரம் என்பதால் யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. பின்னர் 4-ந் தேதி காலை தண்டவாளத்தின் அருகில் மயங்கிய நிலையில் கிடந்தவரை ரெயில்வே போலீசார் மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • வீட்டில் ஒயரிங் வேலை செய்தபோது பரிதாபம்

    வேலூர்:

    பெங்களூரை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 56), எலக்ட்ரீசியன். இவர் நேற்று முன்தினம் சத்துவாச்சாரியில் உள்ள தங்கை வீட்டிற்கு வந்தார்.

    மூர்த்தியின் தங்கை வீடு பராமரிப்பு பணிகள் நடந்து வந்தது. அப்போது மூர்த்தி வீட்டில் ஒயரிங் வேலை செய்தபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

    படுகாயம் அடைந்த அவரை மீட்டு, 108 ஆம்பூலன்ஸ் மூலம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மூர்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின் இணைப்பு பெட்டியை தொட்டபோத விபரீதம்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடி யாத்ததம் அடுத்த அக்ராவ ரம் ஊராட்சி ஏரிப்பட்டரை கிராமத்தை சேர்ந்தவர் ஆனந் தன். இவரது மனைவி சங் கீதா. விவசாயக் கூலித்தொழி லாளிகள்.

    இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இளைய மகன் ஆதித்யன் (வயது 11), குடியாத்தம் நெல் லூர்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்தநிலையில் நேற்று இரவு தனது வீட்டின் அருகே குடிநீர் தொட்டி உள்ளது. அதன் அருகே சிறுவன் விளையா டிக் கொண்டிருந்தான்.

    அப் போது குடிநீர் தொட்டிக்கு செல்லும் மின்சார இணைப்பு பெட்டியில் எதிர்பாராதவித மாக ஆதித்தன் கை வைத்ததாக கூறப்படுகிறது.

    இதில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தான். உடனடி யாக பெற்றோர் மற்றும் உறவி னர்கள் மயங்கி கிடந்த சிறுவனை மீட்டு சிகிச் சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மின்சாரம் தாக்கி சிறுவன் இறந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நூருல்லாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாஷா என்பவரின் மகன் அசார் (வயது16).

    இவர் அதே பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைபள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் அசார் குடும்பத்தினருடன் தும்பேரி அருகே நாதிகுப்பம் பகுதியில் நடைபெற்ற சிறுவனின் சித்தப்பா சையத் பாஷா என்பவரின் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சென்றார்.

    திருமண வறவேற்பு நிகழ்ச்சி நடைபெற்ற தனியார் மண்டபத்தில் போடப்பட்டிருந்த பந்தல் அருகே சிறுவன் விளையாடிகொண்டிருந்த போது அங்குள்ள இரும்பு கம்பத்தை பிடித்துள்ளார்.

    அப்போது இரும்பு கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து அசார் மயங்கி கீழே விழுந்தான்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவனை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பலூர் போலீஸ் மாணவன் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விநாயகர் சதுர்த்தி விழாவில் பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    புதுப்பாளையம்:

    செங்கம் அடுத்த பெரிய தள்ளபாடியை சேர்ந்தவர் மதன்குமார் (வயது 18).

    இவர் முன்னூர்மங்கலம் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி அருகே உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து வந்தார்.

    விநாயகர் சதுர்த்தியையொட்டி அப்பகுதியில் வீட்டின் அருகே நண்பர்களுடன் சேர்ந்து விநாயகர் சிலை வைத்து வழிபட்டு வந்தார். நேற்று மாலை விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிக்காக மைக் செட் ஒலி, ஒளி அமைக்கப்பட்டு இருந்தது.

    மதன்குமார் மைக்கை கையில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த மைக்கில் இருந்து மின்சாரம் பாய்ந்ததாக தெரிகிறது. இதில் மதன் குமார் தூக்கி வீசப்பட்டு மயங்கி கீழே விழுந்தார்.

    உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு செங்கம் அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மதன் குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து புதுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மதன்குமாரின் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏர் உழவு பணியில் ஈடுபட்டபோது பரிதாபம்
    • தப்பி ஓடியதால் அதிர்ஷ்டவசமாக விவசாயி உயிர் தப்பினார்

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நெமந்தகார தெருவை சேர்ந்தவர் சிலம்பரசன். இவருக்கு பாதிரி கிராமத்தில் 4 ஏக்கர் விவசாயம் நிலம் உள்ளது.

    இதில் நெல் பயிரிடு வதற்காக பாதிரி கிராமத்தை சேர்ந்த சின்னப்பையன் என்பவர் கூலிக்கு 2 மாடுகளை வைத்து ஏர் உழவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    கம்பத்திலிருந்து மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. அப்போது 2 மாடுகள் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது.

    இதில் 2 மாடுகளும் சம்பவம் இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தது. இதனைக் கண்ட சின்னப் பையன் அங்கிருந்து தப்பி ஓடியதால் அதிர்ஷ்ட வசமாக அவர் உயிர் தப்பினார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த மாடுகளை பார்த்து சென்றனர்.

    • கம்பத்தில் மாடுகளை கட்ட சென்றபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி அடுத்த அக்ராபாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். கூலி தொழிலாளி. மனைவி இந்திரா (வயது 48). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் இவர்கள் வீட்டின் அருகே கொட்டகை அமைத்து மாடுகளை வளர்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு மாடுகளை வீட்டின் அருகே இருந்த மின்கம்ப த்தில கட்டுவதற்காக இந்திரா சென்றார்.

    அப்போது அதில் இருந்த மின்சாரம் இந்திரா மீது தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    சத்தம் கேட்டு ஓடி வந்த இந்திராவின் கணவர் மற்றும் உறவினர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து ஆரணி தாலுகா போலீசில் இந்திராவின் அண்ணன் மாரிமுத்து புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இந்திரா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாடுகளை மின் கம்பத்தில் கட்டுவதற்காக சென்ற போது பெண் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மரத்தை வெட்டிக் கொண்டிருந்தபோது பரிதாபம்
    • செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை

    வெம்பாக்கம்:

    வெம்பாக்கம் அடுத்த அரசாணை பாளையத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 27). சிப்காட்டில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    இவருக்கு வீட்டின் அருகே சொந்தமாக நிலம் உள்ளது. அந்த நிலத்தில் மரங்கள் வளர்ந்திருந்தது. அதனை வெட்டுவதற்காக நேற்று முன்தினம் நிலத்திற்கு சென்றார். மரத்தை வெட்டிக் கொண்டிருந்தபோது அந்த மரம் அருகே இருந்த மின்சார கம்பி மீது விழுந்தது.

    திடீரென கோபாலகிருஷ்ணன் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தூசி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோபாலகிருஷ்ணன் உடலை மீட்டு செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×