என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் விபத்து"

    • எலிக்கு வைத்த வேலியில் சிக்கி பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    மங்கலத்தை அடுத்த கீழ்பாலானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் (வயது 54), விவசாயி. இவர், அவரது நிலத்தில் நெற்பயிர் செய்து இருந்தார். வயலில் எலி தொல்லை அதிகமாக இருந்ததால் வயலை சுற்றி மின்வேலி அமைத்திருந்தார்.

    சம்பவத்தன்று இரவு சம்பத் வயல் ஓரத்தில் நடந்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக மின்வேலியில் சிக்கி மயங்கி கிடந்தார்.

    வயலுக்கு சென்ற தந்தை நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அவருடைய மகன் வயலுக்கு சென்று பார்த்துள்ளார்.

    அப்போது சம்பத் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×