என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீட்டில் 6 அடி நீல சாரை பாம்பு பிடிபட்டது
- ஒரு மணி நேரம் போராடி பிடித்தனர்
- பொன்னூர் காப்பு காட்டில் விடப்பட்டது
வந்தவாசி:
வந்தவாசியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் 6 அடி நீல சாரை பம்பு பிடிபட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் மக்களை அச்சுறுத்தி வந்த 6 அடி நீளம் சாரை பாம்பு பிடிபட்டது.
வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தெரேசாபெரியநாயகம். இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. இவரது வீட்டில் 6 நீள சாரை பாம்பு புகுந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து வந்தவாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி 6 அடி நீல சாரைப்பாம்பை லாவகமாக பிடித்து பொன்னூர் காப்பு காட்டில் விட்டனர்.
Next Story






